அடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் - கரும்புலிகள் நினைவு நாள்



அடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.

இன்று கரும்புலிகள் நாள்.

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது.

நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறீலங்காப்படையினர் மீது மில்லர் கரும்புலித்தாக்குதல் நடத்தி இன்று 23 ஆண்டுகள் கடந்துவிட்டன.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஒவ்வொரு திருப்புமுனைகளிலும் கரும்புலிகளின் நாமம் உள்ளது. அந்தவகையில் கடலிலும் எதிரிக்கு தக்க பாடத்தை கொடுத்தார்கள் கடற்கரும்புலிகள்.

இவ்வாறு விடுதலைப்போரின் போராட்டப் பாதைகளில் தடைநீக்கிகளாக கரும்புலிகள் காணப்பட்டார்கள். 2000ஆம் ஆண்டு கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீது சென்று கரும்புலித்தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வாறு சிறீலங்காவின் தென்பகுதியில் பல நிழற்கரும்புலிகள் தாக்குதல்களை நடத்தி வீரவரலாறானார்கள்.

2007ஆம் ஆண்டு அனுராதபுரம் வான்படைத்தளம்மீது எல்லாளன் நடவடிக்கை என பெயர்சூட்டப்பட்ட கரும்புலித்தாக்குதலில் 21 கரும்புலி மறவர்களால் மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதல் தரையிலும் கடலிலும் நடத்தப்பட்டுக்கொண்டிருந்த அதேவேளை, 2009ஆம் ஆண்டு வான்கரும்புலிகளும் தாக்குதலை நடத்தினார்கள்.

வான்கரும்புலிகளான கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆகிய இருவரும் இரண்டு வானூர்திகளில் சென்று தென்னிலங்கை இலக்குகள் மீது கரும்புலித்தாக்குதல் நடத்தி வீரவரலாறானார்கள்.

முள்ளிவாய்கால் வெளியில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களை பாதுகாக்க எத்தனையோ கரும்புலிகள் வீரவரலாறானார்கள். இன்றைய கரும்புலிகள் நாளில் வெளியில் தெரியாத அந்த அற்புதமனிதர்களையும் நாங்கள் நினைவிற்கொள்கின்றோம்.

Comments