கஸ்ரோவின் கணணியில் இருந்து புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டதாக அரசு கூறினாலும், முழுமையான தகவல்களை கே.பியே வழங்கியிருந்தார்.
சிறீலங்காவில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளில் புலம்பெயர் தமிழ் மக்கள் இணைந்து கொள்ள வேண்டும் என கே.பி அழைப்பு விடுத்திருந்தார். அவரின் அழைப்பை ஏற்று சில தமிழர்கள் சென்றிருந்தனர். ஆனால் அனைத்துலகத்தில் உள்ள கஸ்ரோவின் உறுப்பினர்கள் கே.பியின் இந்த திட்டத்தை முறியடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த கே.பி புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் தலைவர்களின் விபரங்களை அரசுக்கு தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகமான டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சாவின் அண்மைய அமெரிக்க விஜயம் ஒரு காரணத்துடன் தான் அமைந்திருந்தது. அவர் அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்ற ஆவணங்களில் விடுதலைப்புலிகளுக்கு உதவிய புலம்பெயர் தமிழ் மக்களின் தகவல்கள் அடங்கியிருந்தது.
இந்த தகவல்களை விடுதலைப்புலிகளின் அனைத்துலக செயற்பாடுகளுக்கான பொறுப்பாளர் கஸ்ரேவின் பிரத்தியோக கணணியில் இருந்து பெற்றுக் கொண்டுள்ளதாக அரசு தெரிவித்து வருகின்றது. ஆனால் அதனை குமரன் பத்மநாதனே வழங்கியுள்ளதாக அரசுக்கு நெருக்கமாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் தானே தகவல்களை வழங்கியது என தெரிந்தால் தன்னை துரோகி என தமிழர்கள் கூறுவார்கள் என தெரிவித்துள்ள பத்மநாதன் அதனை கஸ்ரோவின் கணணியில் இருந்து பெறப்பட்டதாக கூறுமாறு அரசுக்கு தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் அனைத்துலக செயற்பாடுகளின் பொறுப்பை விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பத்மநாதனிடம் இருந்து பெற்று கஸ்ரோவிடம் ஒப்படைத்திருந்தார். இது கே.பி க்கு ஆத்திரத்தை உண்டுபண்ணியிருந்தது.
கஸ்ரோவின் கணணியில் இருந்து புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டதாக அரசு கூறினாலும், முழுமையான தகவல்களை கே.பியே வழங்கியிருந்தார். சிறீலங்காவில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளில் புலம்பெயர் தமிழ் மக்கள் இணைந்து கொள்ள வேண்டும் என கே.பி அழைப்பு விடுத்திருந்தார். அவரின் அழைப்பை ஏற்று சில தமிழர்கள் வந்திருந்தனர். ஆனால் அனைத்துலகத்தில் உள்ள கஸ்ரோவின் உறுப்பினர்கள் கே.பியின் இந்த திட்டத்தை முறியடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த கே.பி புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் தலைவர்களின் விபரங்களை அரசுக்கு தெரிவித்துள்ளார். அவர்களுக்கு எதிரான குற்றங்களையும் அவர் ஆவணப்படுத்தியுள்ளார். தற்போது சிறீலங்கா அரசுக்கு மிகப்பெரும் சவாலாக புலம்பெயர் தமிழ் சமூகம் மாற்றம் பெற்றுள்ளது. எனவே தான் கே.பியின் உதவியுடன் அதனை முறியடிக்க அது திட்டமிட்டுள்ளது.
கே.பியை தம்வசப்படுத்தியதும் அனைத்துலகத்தில் உள்ள புலம்பெயர் தமிழ் மக்களை முறியடித்துவிடலாம் என அரசு நம்பியது. ஆனால் கே.பி கைது செய்யப்பட்டு ஒரு வருடம் கடந்த நிலையிலும் அரசால் அதனை மேற்கொள்ள முடியவில்லை.
கஸ்ரோவின் கணணியில் உள்ள தகவல்களை கொண்டு தான் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் தலைவர்களை ஒடுக்க வேண்டும் என்றால் அரசு போர் முடிந்தவுடன் அதனை மேற்கொண்டிருக்கலாம். தற்போது போர் முடிந்து ஒரு வருடம் கடந்து விட்டது. சிறீலங்கா அரசு கடந்த வருடமே கஸ்ரோவின் கணணியை கைப்பற்றியதாக தெரிவித்திருந்தது.
கே.பியின் மூலம் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் தலைவர்களை சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கவைப்பதே சிறீலங்கா அரசின் முதலாவது திட்டம். அது கைகூடாது விட்டால் அவர்களின் குற்றங்களை முன்வைத்து அனைத்துலக காவல்துறையினர் மூலம் அவர்களை கைது செய்வது இரண்டாவது திட்டம்.
கருணாவை பயன்படுத்தி விடுதலைப்புலிகளின் படை பலத்தை சிதைத்தது போல பத்மநாதனை பயன்படுத்தி விடுதலைப்புலிகளின் அனைத்துலக வலையமைப்பை முறியடிக்க அரசு முயன்று வருகின்றது.
எனினும் இன்று கருணாவை விட கே.பி தான் அரசின் உயர்ந்த மரியாதைக்குரியவர். அவரை மிகவும் நுட்பமாக பயன்படுத்தி விடுதலைப்புலிகளின் அனைத்துலக வலையமமைப்பை முறியடிக்க அரசு முயன்று வருகின்றது.
கருணா குழுவினரை கிழக்கு மாகாணசபையில் போட்டியிட வைத்தது போல வட மாகாணசபை தேர்தலில் கே.பியை போட்டியிட வைக்க அரசு முயன்று வருகின்றது. எனவே தான் கே.பி மீது புலம்பெயர் தமிழ் மக்கள் அவதுறு பிரச்சாரங்கள் மேற்கொள்வதை புலம்பெயர் தமிழ் மக்களின் ஒரு பிரிவினரை வைத்து அரசு முறியடித்து வருகின்றது.
வட மாகாணசபை தேர்தலில் வெற்றியீட்டுவது கடினமானது எனவே தான் கே.பியின் நற்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் கெட்டுவிடாது பாதுகாப்பதில் அரசு நுட்பமாக செயற்பட்டு வருகின்றது.
விடுதலைப்புலிகளின் வளாச்சிக்கு உதவிய இரு முக்கிய தலைவர்களான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் மற்றும் கருணா ஆகிய இருவருமே தற்போது விடுதலைப்புலிகளின் வலையமைப்பை முற்றாக தகர்க்கும் முயற்சிகளில் அரசுக்கு உதவி வருவவது வேடிக்கையானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழாக்கம்: ஈழம் ஈ நியூஸ்.
Comments