அணைகடந்த வெள்ளம் அழுதாலும் நில்லாது

பண்டாரவன்னியன் மேற்கூறிய வார்த்தைகளை அன்றொருநாள் ஒரு பெரிய மகான் தனது சீடர்களில் ஒருவருக்கு உபதேசித்துளளார் எனினும், இன்றைய காலகட்டத்தில் இலங்கையின் அரசியல் நிலமைக்கும் இது பொருந்தும் எனலாம்.

இதன் அடிப்படை காரணங்கள,; அவற்றின் எதிர்விளைவுகள் ,பாதிக்கப்படும் உலக அரசியல், பொருளாதார நீரோட்டம்;, எல்லாவற்றிற்கும் மேலாகத் தமிழீழ மக்களின் எதிர்காலம் எனப் புற்றுநோயைப்போல் ஆழமாகவும் பரவலாகவும் செறிந்துவரும் ஒரு “அரசியல் வியாதி” எம்மைச் சூழ்ந்துள்ளது எனில் அது மிகையாகது.

இக்கட்டுரை எழுதப்படும் நோக்கம் பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும்
வரும் பிரசுரங்களினாலும் விமர்சனங்களினாலும் மேலும் தமிழ் ஆர்வலர்கள் ஒருபுறமும் துரோக கும்பல்கள் மறுபுறமும் மாறிமாறி விடும் அறிக்கைகளினாலும் சோர்வும் விரக்தியும் அடைந்து, திசைதடுமாறி நிற்கக்கூடிய எமது தமிழ்ச் ;சொந்தங்களுக்குச் சிறிய அளவிலாவது ஒருவிழிப்புணர்வை ஏற்படுத்துவதேயாகும். பாரிய துன்பகரமான நிகழ்வுகள் எப்போது நடைபெற்றாலும், அவற்றின் பின்விளைவாக மனச்சோர்வடைவது மனித இயல்பு. ஆனால், இவற்றால் தளர்வடையாது தர்க்கரீதியான முறையில் எமது எதிர்காலத்தைத் திட்டமிட்டு அணுகுவதே வெற்றிக்கு வழிவகுக்கும்.

அரசியல் நோக்கர்களும், கட்டுரையாளர்களும் பல தடவைகள் அடித்துக் கூறியது போல, முள்ளிவாய்க்காலின் முடிவு தமிழீழ மக்களின் அரசியலில் முற்றான முடிவல்ல. அது ஒரு தொடக்கம் என்றே சொல்ல வேண்டும். காரணம், அப்போரில் விடுதலைப்புலிகள் பூரணவெற்றி அடைந்திருந்தாலும், அன்றைய காலகட்டத்தில் சர்வதேச சக்திகள் அத்தகைய வெற்றியை ஒருபொழுதும் ஏற்கவோ, தக்கவைக்கவோ அல்லது அதனால் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தவோ உடன்பட்டிருக்கமாட்டார்கள் என்பதே யதார்த்தம், ஏனெனில், பயங்கரவாதம் என முத்திரை குத்தப்பட்ட ஒரு இயக்கம் (அது எவ்வளவுதான் நியாய தன்மையுடையது என உணர்ந்தாலும்) வெற்றிபெறுவதை உலக அரசியல் சகிக்காது என்பது கண்கூடு. பயங்கரவாதம் என்ற சிந்தனை தோன்றுவதற்குப் பல வருடங்களுக்கு முன்பே நைஜீரியாவில் பயாபிறா (Biafra) யுத்த மூலம் தனிநாடு கோரிய ஒரு இனம் வல்லரசுகளினால் அழிக்கப்பட்டது என்பது வரலாறு.

எனினும் ஒவ்வொரு கருமேகத்திடையேயும் ஒரு மின்னல் கீறு இருக்கும் என்பது போல முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் எமது மக்கள் உலகில் ;வரலாறு காணாத, மனித இனமே வெட்கித் தலைகுனியும் அளவிற்கு ஏற்படுத்தப்பட்ட துன்பங்களுக்கு உள்ளான பின்பு, சர்வதேச அரசியல் ஒரு கணிசமான அளவில் மாறியது எனலாம்.

இதற்கு முக்கியகாரணம் தேசியத்தலைவரின் வலுவான முப்படை அமைப்பை எதிர்ப்பதற்கு தேவையான படைபலத்தையும் பொருளாதார வளங்களையும் சீனாவினால் ஒழிய வேறு எந்தநாட்டாலும் ஈடுசெய்ய முடியாதென்ற கசப்பான உண்மையை ராஜபக்சே அரசு சரியாகவே கணிப்பிட்டிருந்தது. கடந்த 60 வருட காலங்களாகக் கடன், நன்கொடை என்றபெயரில “பொருளாதாரப்பிச்சை” எடுத்துவந்த இலங்கை அரசுக்குத் தமிழரின் யுத்தத்தைச் சமாளிப்பது பகற்கனவாகியது, அதன் ;விளைவாகத் தமிழீழப் போரை வெல்லும் பொருட்டு ராஜபக்சே முழு இலங்கையையுமே சீனாவுக்கு அடகுவைத்துவிட்டார் எனலாம்.

தேசியதலைவரின் வீரம்செறிந்த போரின் பின்விளைவுகள் இலங்கையுடன் மாத்திரம் நின்றுவிடவில்லை. காரணம், இராஜீவ்காந்தியின் கொலைக்குப்பின் (ஏதோ ஒரு காரணத்தால்) விடுதலைப்புலிகளை அழிப்பதே தனது வாழ்க்கையின் குறிக்கோளென சங்கர்ப்பம் செய்த சோனியா அம்மையார், அதன்பின், இந்தியாவின் பாதுகாப்பையே அலட்சியம் செய்யும் அளவிற்கு, இலங்கை அரசின் யுத்தப்பிரகடனத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார். இவரது அலட்சியப்போக்கு சீனாவிற்கு தெற்கு ஆசியாவிலும் இந்துசமுத்திரத்திலும் நிலை கொள்ளுவதற்கு ஒரு சிவப்புக்கம்பள வரவேற்பு போல அமைந்தது எனலாம்.

சீனாவின் இத்தகைய காலூண்டலினால் வரும் பின் விளைவுகளைப்பற்றிப்; பல ஆய்வாளர்கள் தமது கட்டுரைகளில் வெளியிட்டுள்ளார்கள். இவைகள் பல்வேறு கோணங்களில் நோக்கப்பட்டு வரையப்பட்ட போதிலும், அவை எல்லாம் ஒருமித்து ஏற்கும் விடயமானது சீனாவின் அம்பாந்தோட்டை துறைமுகம் மூலமாகவும் மாத்தறையில் அமைக்கப்படும் பாரிய விமானத்தளம் மூலமாகவும் இந்தியாவுக்கும் இந்துசமுத்திரத்துக்கும் ஏற்பட இருக்கும் நேரடி அச்சுறுத்தலாகும் .ஏற்கனவே இந்தியாவின் வடக்கு எல்லையில் தனக்கு அணைவான நாடுகளான பாக்கிஸ்தான், நேபாளம், மியனமார்.

பங்களாதேஷ் ஆகியவற்றையும் அருணாசலப்பிரதேசத்தையும் தன்வசத்தில் வைத்திருப்பதன் மூலம் சீனா ஒரு பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம் .இதனைக் கருத்திற் கொண்ட இந்திராகாந்தி அம்மையார், இந்தியாவின் முக்கியமான இராணுவ அமைப்புகளை தென்னிந்தியாவில் நிலைநிறுத்தினார் என இராணுவ ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆனால் தற்போது அம்பாந்தோட்டை, கச்சத்தீவு ஆகியவற்றுடன் இலங்கையின் வடக்கு கிழக்கின் பலபகுதிகளிலும் எல்லாமாக ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் சீனர்கள் வந்திறங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன இவற்றில் பெரும்பாண்மையினர், கைதிகளும்; உளவுத்துறையினருமென ஜப்பானிய செய்திதளமொன்று அண்மையில் பிரசுரித்துள்ளது.

சுண்டல் சுற்ற உதவும் சில செய்திதாள்கள் முதல் இணையதளங்கள் வரை பிரபலம் பெற்றுவரும் சீனாவின் ஆக்கிரமிப்புப்பற்றி இந்திய அரசோ, அதன் உளவுத்துறையோ அறியாது இருக்க முடியாது. இவ்விடயத்தில் இந்தியாவின் போக்கு அலட்சியமா அசட்டு தைரியமா அல்லது ஆழமறியமுடியாத அரசியல் சாணக்கியமா என்பதே அனைவரையும் உறுத்தும் விடயங்களாகும் இன்னொருபுறத்தில் இந்தியாவின் அயல்நாட்டு கொள்கை வகுப்பாளர்களின் அறியாமையினாலோ அல்லது அவர்கள்; இலஞ்ச ஊழலில் அகப்பட்டமையினாலோ இப்படி அசட்டுதனமாக நடந்துகொள்கிறார்கள் என்ற ஐயமும் எழாமலில்லை.

இதேசமயம் தமிழ்நாட்டு தமிழுணர்வாளர்கள் முதல் பிறநாட்டு அரசியல் ஆய்வாளர்கள் வரை பலரும் இந்திய அரசை, இதுபற்றி, பல தடவை எச்சரித்ததையும் நாம் மறக்க முடியாது சரித்திரரீதியில், இந்தியாவின் பரம எதிரியும் சீனாவின் நண்பனுமான பாகிஸ்தான், இந்தியாவுடன் போர் தொடுத்ததையும், சீனா எல்லைப்போரில் வெற்றியடைந்ததையும் இந்தியா இலகுவில் மறந்திருக்க முடியாது. மேலும், உலகத்தில் மூன்றாவது பலம்பொருந்திய இந்திய இராணுவம், அமைதிப்படை என்ற போர்வையில் விடுதலைப்புலிகளிடம் படித்தபாடம் இராணுவ சரித்திரத்தில் நிச்சயமாக ஒரு ஆறாத வடுவாக இடம்பெறும். இத்தாலியில் இருந்து களம் இறங்கியிருக்கும் சோனியா அம்மையாரின் இந்திய அரசியல் ஞானத்தைப் பற்றியோ நாட்டுப்ற்றைப் பற்றியோ தற்போது நாம் அலட்டிகொள்ளாத போதும், இந்திய அரசின் எதிர்கட்சிகளும் தமிழ் உணர்வாளர்களும், உளவுத்துறையினரும் தமது நாட்டை கண்ணிமைபோல் பாதுகாக்க முன்வருவர் என்பது உறுதி

சமீபத்தில் ஒரு சிறந்த ஆய்வாளர் இலங்கையின் நிலையை “பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு” என வருணித்துள்ளார். ராஜபக்சே, இந்திய அதிகாரிகளிடம் “இந்தியாவுக்குச் சீனாவால் ஒரு ஆபத்தும் வராது” என ஆறுதல் கூறியதாகக் கருத்துகள் வெளியாகியுள்ளன. இதில் நகைப்பிற்கிடமான விடயம் என்னவென்றால் “கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன்” எனும் கம்பன் கூற்றுக்கமைய, கோடிக்கணக்கில் சீனாவிடம் கடன் பெற்று இலங்கை முழுவதையுமே தாரைவார்த்துவிட்ட ராஜபக்சேவுக்கு இந்தியாவுக்கு ஆறுதல் கூறும் அருகதை எங்கிருந்து வந்ததென்பதே ஆகும். சீனா ராஜபக்சேவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதா அல்லது அதன் எதிர்மறை உண்மையானதா என்பதை வாசகர்கள் தீர்மானிக்கட்டும். “அணைகடந்தவெள்ளம் அழுதாலும் நில்லாது” எனும் வாக்கியத்தின் தார்ப்பரியத்தை இத்தருணத்தில் உணர்வோமாக.

உலகவரலாற்றில் வல்லரசுகளின் ஆதிக்கம் சரித்திரபூர்வமாக முக்கியத்துவம் பெற்றது தற்போதைய உலகில் எரிசக்தியை வழங்கவல்ல, எண்ணை வளமும் எரிவாய்வு வளமும் மேற்குலக நாடுகளை ஈர்க்கும் காந்தசக்தியாகின்றன. இவற்றின் மீது ஆணை செலுத்தும் போட்டியிலேயே சமீபத்தில் நடைபெற்ற யுத்தங்கள் உருவாகின என்ற கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. எண்ணை வளம் கொண்ட ஈராக்நகரைக் கைப்பற்ற சதாம் குஸைன் அழிவாயுதங்களை வைத்திருந்தார் என ஒரு போலிகாரணத்தையும், ஆப்கானிஸ்தானைக் கைப்பற்ற தலிபானையும் மேற்குநாடுகள் காரணியாக பாவித்தன அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டைக் கோபுரத்தாக்குதலின் பின் தளத்திலும் ஒரு சதி இருக்குமோ என கேள்விகள் எழுகின்றன. எனவே இன்றைய உலக அரங்கில் நீதியை, அரசியல் தருமத்தை எதிர்பார்ப்பது குதிரைக்கொம்பாகிறது.

சமீபத்தில் உலகத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி மேற்குநாடுகளை மீளா அதிர்ச்சிக்குள் தள்ளி உள்ளது எனலாம். இத்தகைய சூ+ழ்நிலையில் ஆப்பிரிக்காவில் இருந்து ஜப்பான் வரை எண்ணை வழங்குபாதையாகவும் கடல் வாணிபத்தில் முக்கிய அம்சம் வகிப்பதுமான இந்து சமுத்திரத்தைச் சீனாவிடம் கையளிக்க மேற்குநாடுகள் தயாரா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இத்தகைய ஆதிக்கம் சீனாவின் இராணுவ பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு ஊன்றுகோலாக அமையும் என்பதில் இரகசியம் ஒன்றுமில்லை. ஏற்கனவே தமது வரவு செலவை சமன்படுத்த வழியில்லாது விழிபிதுங்கி வரும் நாடுகளுக்குச் சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு ஒரு மரண அடியாக மாறலாம். இவை எல்லாவற்றிறகும் மேலாக மாத்தறை விமான நிலையத்தின் முலம் சீனா, உலகின் உணவு வழங்கல் முறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி அத்துறையில் ஒரு முன்னுரிமை (அழnழிழடல) பெறலாம் என்பது ஒரு ஆய்வாளரின் பார்வை. அதாவது, மேற்குலகின் பதனிடும் உணவு வழங்கலுக்கு எதிராகச் சீனா உடன் உணவை வழங்க முற்பட்டால் இதனால் மேற்குலகம் பாரிய பொருளாதார பின்னடைவை எதிர்கொள்ளலாம் என்பதும் அவரின் கருத்து.

இவை எல்லாவற்றில் இருந்தும் மீள்வதானால் மேற்குலக நாடுகளும் (இந்தியாவும்) தமிழீழத்தை அங்கீகரித்து அதன் முலம் இலங்கையின் மூன்றில் இரண்டான கடற்பரப்பையும், (தமிழ்நாட்டின் உதவியுடன்) பாக்கு நீரிணையையும் மீட்பதுடன் இந்து சமுத்திரத்தையும் சீனாவின் பூரண ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்கவேண்டும். இதனால் அமெரிக்காவின் தளமாகிய டீகோ கார்சியாவும் பாதுகாப்படையுமென நம்பப்படுகிறது.

இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டுமென மேற்கு நாடுகள் உணருகின்றன. இதை அடையும் பொருட்டும், இலங்கையின் அத்துமீறிய அரசியல் போக்கை கட்டுப்படுத்தவும் மனித உரிமை மீறல், போர்க்குற்றம் ஆகிய அஸ்திரங்களை இலங்கை மீது அவை பிரயோகிக்கின்றன. எனினும் இனப்படுகொலையை முன்வைப்பதன் மூலமே தமிழீழம் அமைக்கப்படலாம் என்பதே சர்வதேசசட்ட வல்லுனர்களின் கருத்தாகும்.

சுPனா, இலங்கை அரசிடமிருந்து தனக்கு வேண்டிய எல்லாவற்றையும் பெற்றுவிட்டதால் இனிமேல் அது இலங்கையைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளமாட்டாது என்றும் இதனால் “பழைய குருடி கதவை திறவடி” என இலங்கைக்கு மேற்குநாடுகளின் பொருளாதார உதவி மீண்டும் தேவைப்படலாம் என ஒரு வதந்தி உலவுகின்றது.

இந்தபிரச்சனையை அவர்களிடம ;விட்டுவிட்டு இத்தருணத்தில் இந்தியாவினதும் ஈழத்தமிழர்களினதும் எதிர்காலத்தை நோக்குவோம்.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் “இன்னும் பிழைப்பன் மன்னன் விழிக்கின்” என்பது போல அதன் பேராபத்துக்களிலிருந்து தப்புவதற்கு சில வாய்ப்புகள் இன்னமும் உள்ளன எனலாம். ஆனால் இதன் பொருட்டு தனது அரசியல் நிலைப்பாட்டை கீழ்கண்டவகையில் உடனடியாக மாற்றவேண்டும்.

1.இலங்கையுடனான நட்புறவை உடனடியாக தகர்த்தெறிய வேண்டும் (ஆழமாக நோக்கின், இலங்கை இந்தியாவின் நட்பு நாடாக நடக்கவில்லை. பழைய சீனா பாக்கிஸ்தான் யுத்தங்கள் இதற்குச் சான்றாகும்).

2.மேற்குலக நாடுகளின் நட்புறவை வளர்க்கவேண்டும்.

3.ஈழத்தமிழர் எதிர்ப்புக் கொள்கையை கைவிட்டு அவர்களுக்கு ஆதராவான கட்சிகளுடன் ஒன்று சேரவேண்டும். (தமிழ்நாடும் ஈழத்தமிழரும்தான் பாக்கு நீரிணையை கட்டுப்படுத்தமுடியும்)

4.இந்து தர்மத்தை வரவேற்கும் நாடுகளுடன் ஒன்றிணைய வேண்டும் (இலங்கை புத்த சமயத்தின் அடிப்படையில் ஜப்பான் சீனா ஆகியவற்றை தன் வசப்படுத்தியுள்ளது. இஸ்லாமிய நாடுகள் அரசியலில் ஒன்றாக இயங்குவதற்கு சிறந்த உதாரணம்.

உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு என பறைசாற்றும் இந்தியாவிலும் பார்க்க பொதுவுடமையைப் பேணும் சீனாவிடம் இருந்து அரசியல் நீதி கிடைக்கலாம் என இலங்கைத் தமிழர்கள் நினைக்க முற்பட்டால் அது பெரும ;ஆபத்தாக முடியலாம். இப்படிப்பட்ட எண்ணங்கள் வராமல் தடுப்பது இந்தியாவின் பொறுப்பாகும்.

அடுத்தபடியாக நாம் அடையப் போகும் தமிழீழம், எமது தலைவர் எதிர்பார்த்த ஈழமாக இருக்குமா என்பது ஒரு பொன்னான கேள்வி .ஏனெனில் “அறுவை சிச்சை வெற்றி ஆனால் நோயாளி மரணம்” என ஒரு ஆங்கில கோட்பாடு உண்டு. இத்தகைய ஆபத்தைப் பற்றி நாம் ஆராய வேண்டியது அவசியம்.

இலங்கையின் அரசியல் சூ+தாட்டத்தில் சிங்கள அரசு இதுவரை வியக்கத்தக்க வெற்றியை அடைந்ததை நாம் மறைக்கவோ மறுக்கவோ முடியாது இதற்குக் காரணம் அது தர்மம் அதர்மம் என வேறுபாடின்றி கண்மூடித்தனமாக இயங்கியதே ஆகும் இது ஒரு தற்காலிக வெற்றியே அன்றி நீணடகாலம் நிலைக்காது என்பதே உலக நியதி.

இன்று பொருளாதர அபிவிருத்தி எனும் மாயவலையில் தமிழ் மக்களை சிக்கவைத்து தமிழ் கலாச்சாரத்தையும் தமிழீழக் கொள்கையையும் அவர்கள் கைவிடும்படி தூண்டுவதற்கும் அபிவிருத்தியென பிற நாடுகளிடம் இருந்து கிடைக்கும் பணத்தை கையாடல் செய்வதற்கும் சிங்கள அரசு பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபடுகிறது. இதை அடைவதற்கு அமைக்கப்பட்ட சிங்கள குடியேற்ற திட்டம் சாத்தியப்படுமாவென சற்று நோக்குவோம.;

1.வளம் நிறைந்த சிஙகளப்பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் வறட்சிமிக்க தமிழ்ப்பிரதேசங்களில் குடியேறுவார்களா?

2.இயற்கையாகவே சோம்பலான சிங்களவர்களால் வறண்ட பூமியில் விவசாயம் செய்ய முடியுமா?

3.வணிக துறையில் சிங்களவர்களுக்கு தமிழர்களின் ஆதரவு கிடைக்குமா?

4.பகைமை எண்ணம் பரந்த தமிழீழத்தில் அவர்கள் நிம்மதியாக வாழ முடியுமா?

5.100.ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இறந்த பின்பும் 300.ஆயிரம் பேர்வரை வதை முகாம்களில் அடைக்கப்பட்ட பின் சிங்கள இனத்தை தமிழர்கள் மன்னிப்பார்களா?

6.விடுதலைப்புலிகள் முற்றாக ஒழிந்து போனார்கள் என நம்புவதற்கு சிங்கள மக்கள் தயாரா?

திரைகடல் ஓடியும் திரவியம் தேடுவென தமிழினம் உலகெங்கும் சென்ற பொழுதிலும் சிங்களவர்கள் பரம்பரையாக அப்படிச் செயற்படவில்லை. எனவே தமிழீழம் உலக அரங்கில் சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன் அது தலைவரின் வழியிலேயே அமையுமேயன்றி ராஜபக்சேவா அன்றி அவருக்கு தாளம் போடும் தமிழ்த் துரோகக் கும்பலோ எதிர்பார்ப்பது போல் நடவாது என்பது திண்ணம். மேலும் 18 மாவீரர்களை உள்ளடக்கிய தமிழ் நாட்டின் தமி;ழுணர்வு கடல் எல்லையையும் கடந்து பாயும் நிலையில் தமிழீழத்தின் எதிர்காலத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பதே உண்மை நிலையாகும் .இதனையடைவதற்க்கு எமது மாவீரர்களின் தியாகமும் தமிழ் மக்களின் அற்பணிப்புமே முலகாரணங்கள் எனலாம்.

Comments