நம் தேசியத் தலைவரின் இலட்சியமான தமிழீழம் அமைய உலகத் தமிழர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் நாம் தமிழர் கட்சியின் பங்களிப்பு பெரிதும் இணைந்திருக்கும் என செந்தமிழன் சீமான் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிதத்தின் முழுவடிவம் வருமாறு:-
அன்புடையீர் வணக்கம்!
புலம்பெயர் தமிழர்களின் தமிழ் மக்கள் அவையும் (TCC), இனப்படுகொலையை எதிர்க்கும் தமிழ் அமைப்பும் (TAG) மேற்கொள்ளவிருக்கும் இலங்கைத் தீவில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இனஅழிப்பு ஆகியவற்றை ஐரோப்பிய நீதிமன்றங்களிலும், சர்வதேச நீதிமன்றங்களிலும், குற்றவியல், சிவில் வழக்குகளை முன்னெடுப்பதற்கு மேற்கொள்ளும் சட்டபூர்வ நடவடிக்கைகளை அறிந்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்தேன்.
எம் இனம் என்றும் வீழாது: எதிரிகள் முயற்சி வெல்லாது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ள இத்தகைய சட்டபூர்வ நடவடிக்கைகள் நாளை தமிழீழம் மலரும் என்கிற நம்பிக்கையை வலுப்படுத்துவதாக உள்ளது.
இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ள வுயுபு இளையோருக்கும், மக்களவை இளையோருக்கும் எனது நெஞசம் நிறை;நத வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிங்களக் கடற்படை தமிழக மீனவரை தாக்குவதைக் கண்டித்தும், இலங்கையின் போர்க்குற்றம் குறித்து ஐ.நா.வின் விசாரணைக் குழு பற்றி தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் இதுவரை எவ்விதக் கருத்தும் சொல்லாததைக் கண்டித்தும் குரழெழுப்பிய காரணத்திற்காக என்னைத் தமிழக முதல்வர் கருணாநிதி தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறை வைத்துள்ளார்.
அவரது தமிழின விரோதப் போக்கை புலம்பெயர் வாழ் தமிழர்கள் தமிழக முதல்வருக்கு கண்டனக் கடிதங்கள் அனுப்பியிருப்பதை கேள்விப்பட்டு பெரிதும் மகிழ்ந்தேன்.
அளவற்ற உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் என்றென்றைக்கும் சீமான் நன்றி சொல்வதோடு கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று போர்க்குணத்தோடு வாழ்வான் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் தேசியத் தலைவரின் இலட்சியமான தமிழீழம் அமைய உலகத் தமிழர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் நாம் தமிழர் கட்சியின் பங்களிப்பு பெரிதும் இணைந்திருக்கும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு, செந்தமிழன் சீமான்.

Comments