தமிழர் வளத்தை அள்ளத்துடிக்கும் வல்லரசுகள்

தமிழர் தாயத்தின், தமிழீழத்தின் கடல் மற்றும் தரைப்பகுதிகளில் பல்வேறு வகையான வளங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் அள்ளி ஆளுகை செய்ய தற்போது வல்லரசுகள் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன.

இதன் கட்டமாகத்தான் அமெரிக்காவின் தரையிறங்கு போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நிற்பதும், அமெரிக்கப்படையினர் திருமலை மண்ணில் கால்லூன்றி மக்களுக்கு உதவிசெய்வதுமான செயலானது, அருகில் உள்ள இந்திய வல்லரசை வியக்கவைத்துள்ளதுடன் சீனாவினை மூச்சடக்கவைத்துள்ளது.

அமெரிக்காவின் கிறின்பரேட் எனப்படும் படையணி அன்று விடுதலைப்புலிகளிடம் அடிவாங்கியது என்பது வரலாறு. அதாவது, ஸ்ரீலங்கா அரசின் சந்திரிக்கா ஆட்சிக்காலத்தில் படைத்துறைத் தளபதியாக இருந்த அனுருத்தரத்வத்த அமெரிக்கப்படையினை வரவழைத்து ஈழத்து வளங்களை தாரைவார்க்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

அதாவது ஜெயசிக்குறு படை நடவடிக்கையிலும் அமெரிக்காவின் கிறின்பரட் கொமாண்டோக்கள் மாங்குளத்தில் வைத்து விடுதலைப்புலிகளிடம் அடிவாங்கினார்கள் என்பது வரலாற்று உண்மை. அன்று தொட்டு விடுதலைப்புலிகளை அழிக்க கங்கணம் கட்டிய அமெரிக்கா மறைமுக செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தது என்பது உண்மை.

இறுதியில் தமிழ் மக்களின் பாரிய அழிவுகளுக்கு அமெரிக்காவின் பங்கும் உண்டு என்பதும் உண்மை. உண்மையில் வல்லரசுகளாக திகழும் இந்த நாடுகள் விடுதலைப்புலிகளின் நிர்வாகம் இயங்கிய காலத்தில் ஈழத்து வளங்களை விலைக்கு வாங்க பேரம்பேசியும் உள்ளன.

ஆனால் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் உறுதியான நம்பிக்கையும் அசைக்கமுடியாத தலைமையும் மண்பற்றும் கொண்ட தலைமைத்துவத்தை இந்த நாடுகளால் விலைமாற்று செய்யமுடியாமல் போனது என்பதும் கடந்த காலநிகழ்வுகள் மூலம் அறிந்துகொள்ளமுடியும்.

அந்தவகையில் இந்தியா யாழ்ப்பாணத்தின் காங்கேசன் துறையினை கையகப்படுத்தி பலாலி விமானத்தளத்தினையும் தன்வசம்கொள்ள வைத்துள்ளது. அத்துடன் மன்னாரின் எண்ணைவளத்தினையும் விலைக்கு வாங்கியுள்ளது. மறுபுறம் சீனா அம்பாந்தோட்டை துறைமுகத்தினையும் அதனை அண்டி மகிந்தவால் அமைக்கப்பட்டுவருகின்ற விமான நிலையத்திலும் கால்லூன்றிக்கொண்டு வடக்கின் கச்சதீவு தொடக்கம் முள்ளிவாய்காலின் வட்டுவாகல் கடல்நீர்ரேரி, கிளிநொச்சியின் மேற்கின் நாச்சிக்குடா கடல்பகுதிகளை ஆழுகைசெய்ய முனைந்துகொண்டிருக்கின்றது.

இன்நிலையில் திருகோணமலையின் சம்பூரில் இந்தியா அனல் மின்நிலையம் அமைக்கும் செயற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இவ்வாறான மூன்று வல்லரசுகள் தமிழ் மக்களின் நிலங்களின் வளங்களை சுரண்டி கால்லூன்றிக்கொண்டிருக்கின்ற நிலையில்தான் அண்மையில் இந்தியாவின் போர்க்கப்பல் திருகோணமலை கடற்பரப்பிற்கு சென்று திரும்பியுள்ளது.

இன்னிலையில் அனைத்து வல்லரசுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கும் முகமாக அமெரிக்காவின் போர்க்கப்பல் திருகோணமலையில் தரித்து நிக்கின்றது. இது தரித்து நிற்பதுமட்டுமல்ல அங்கு தரையிறங்கிய அமெரிக்கப்படையினர் தமிழர்களின் வளங்களை இனம்காணும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளார்கள்.

இது இவ்வாறு இருக்க பங்காளதேசத்தின் போர்கப்பல் ஒன்று கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்நிலையில் மீண்டும் இந்தியாவின் போர்க்கப்பல் ஒன்று ஸ்ரீலங்காவிற்கு வந்துள்ளது.

விடுதலைப்புலிகளின் போராட்ட வடிவம் இந்த வல்லாதிக்க சக்திகளால் முடக்கப்பட்டுள்ள நிலையில்தான் இவர்களின் வருகைகள் நடைபெற்றுள்ளன. மீண்டும் வல்லாதிக்கங்கள் தமிழர்களின் வளங்களை கைகளில் எடுத்துக்கொள்ள ஆயுதப்படை ஒன்று தேவை என்பதையும் உணர்ந்துகொண்டு, அதன் ஆழத்தினை அறிவதற்கா ஈழத்தைநோக்கி படையெடுக்கின்றார்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப்போர் மௌனிக்கப்பட்டு பன்நாடுகளில் அரசியல்போரினை முன்னெடுத்துவரும் தமிழ் மக்கள் இன்னும் விழிப்பாக செயற்படவேண்டிய காலகட்டத்தை இது என உணரவேண்டும்.

Comments