"தமது மண்ணில் போரிடும் பிற நாடுகளுக்கு சிறிலங்கா மீதான தீர்ப்பு எச்சரிக்கையாக வரவேண்டும்" என்று பாக்கிஸ்தானின் செல்வாக்கு மிகுந்த செய்திப் பத்திரிக்கை டோன் தனது ஆசிரியர் கட்டுரையில் தெரிவித்துள்ளது.
ஐநாவின் போர் குற்றவியல் விசாரணைக் குழு நியமனம் அதற்கு சிறிலங்கா அரசின் எதிர்ப்பு ஆகியவை பற்றி விமர்சனம் செய்யும் ஆசிரியர் கட்டுரையில் மேற்கூறிய குறிப்பு காணப்படுகிறது. "இந்தப் போர் இராணுவத்தால் நடத்தப்பட்டாலும் அதற்கு ஜனாதிபதியின் முழு ஆதரவும் இருந்தது தமிழ் ஈழம் என்பது தீர்க்கப்பட முடியாத பிரச்சனை அதற்க அரசியல் தீர்வு காணமுடியாது" என்று அவர் நம்பினார் என்று டோன் கூறுகிறது.
சமாதானத்தை முன்னெடுத்த மத்தியஸ்தர்கள் புரிந்த போர் குற்றங்கள் பற்றித் தமிழர் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சென்ற மாதம் முன்னாள் அமைதி முன்னெடுப்பாளர் எரிக் சொல்கைம் தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைந்திருந்தால் தமி;ழ் உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கலாம் என்று ஐநா அமெரிக்கா இந்தியா ஆகிய நிலமையைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்க முடியும் என்றும் சொன்னார். பல நூறு ஆயிரம் தமிழர்கள் தெருக்களில் இறங்கிப் போரை நிறுத்தும் படி குரல் கொடுத்த போது அவர் ஏன் இதைச் சொல்ல வில்லை என்று நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் உறுப்பினரான டாக்டர் தி. சிவகணேசன் கேட்கிறார்.
"ஒரு ஒழுங்கான போர் நிறுத்தத்திற்கு (அல்லது சரணுக்கு) வரும் படி நாம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அழைப்பு விடுத்தோம் அது நடந்திருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கலாம். ஐநா அமெரிக்கா இந்தியா அல்லது பிறிதொருவர் மேற்பார்வையில் போர் முடிவுக்கு வந்திருக்கும்" இவ்வாறு நோர்வேயின் சர்வதேச மேம்பாட்டு அமைச்சர் எரிக் சொல்கைம் ஜூன் 27ல் சண்டே ரைம்ஸ் என்ற சிறிலங்கா செய்திப் பத்திரிக்கைக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார்.
இது பற்றி நோர்வேயில் இருந்து டாக்டர் சிவகணேசன் கூறுகையில் ஒழுங்கான போர் நிறுத்தத்திற்கு தமிழ் மக்களின் முழு ஆதரவோடு தமிழீழ விடுதலைப்புலிகள் கொள்தவற்கு அப்படியான அழைப்பு மூன்றாம் தரப்பால் பகிரங்கமாக விடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றுள்ளார்.
தொடர்ந்து அவர் கூறுகையில் அமைதி முன்னெடுப்பாளர்களும் அவர்களுக்குப் பின்னணியில் செயற்பட்ட சக்தி வாய்ந்த நாடுகளும் போரின வன்முறையான முடிவைத் தெரிவு செய்திருக்கிறார்கள் போல் தெரிகிறது பொருத்தமான அரசியல் நீதியை வழங்கும் நிலையில் கொழும்பு அரசைப் போல் அவவர்களும் இல்லை என்றுள்ளார்.
இதற்கு முன்பும் இது மாதிரியான அறிக்கைகளை எரிக் சொல்கைம் விடுத்திருக்கிறார் ஒரு சமஷ்டித் தீர்வுக்கான சாத்தியம் இருப்பதாக அவர் முன்பு கூறினார் ஆனால் அந்தத் தீர்வு பற்றிய விவரங்களை அவர் வெளியிடவும் இல்லை ஒருவரும் அறிந்திருக்கவும் வாய்ப்பு இல்லை எனினும் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து ஒரு சமஷ்டிக் கட்டமைப்பிற்குள் உள்ளக சுய நிர்ணய அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வை ஆராய்வதற்குப் பகிரங்க சம்மதத்தை அமைதி முன்னெடுப்பாளர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அமைதி மத்தியஸ்தர் எரிக் சொல்கைம் இப்போது மலேசியா இந்தோனேசியா இந்தியா ஆகிய நாடுகளின் பாணியில் சிறுபான்மையினர் உரிமைகள் பற்றிப் பேசுகிறார்கள். "முடியும் வரை போர்" நன்கு முன் கூட்டியே திட்ட மிடப் பட்ட இலக்கு இதற்குப் பல குறிக்கோள்கள் இருக்கின்றன.
தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வை வழங்கி அவர்களை ஏமாற்றுவதற்கு முன்பு அவர்களுடைய பலத்தை அகற்றுதல் இதற்கான குற்றப் பொறுப்பைப் பிறர் மேல் சுமத்துதல் குற்றங்களைப் பிறர் மேல் சுமத்திய படி இலங்கைத்தீவுக்குள் ஊடுருவுதல் என்பன சில குறிக்கோள்களாகும்.
அரசியல் காரணங்களை ஆராயாமல் போர்க் குற்றங்கள் பற்றிய விசாரணை என்பது கொழும்பு அரசிற்குக் கைகொடுக்கும் இன்னொரு முயற்சி என்று தமிழர் தரப்பை எண்ண வைக்கிறது. தமிழீழ விடுதலைப்புலிகள் மீது திணிக்கப்பட்ட இறுக்கமான நிலைப்பாடும் தமிழீழ விடுதலைப்புலிகள் எடுத்த நிலைப்பாட்டிற்காகத் தமிழ் ஈழ மக்கள் கொடுத்த விலையும் ஒரு முக்கிய செய்தியை உலகிற்கு உணர்த்துகின்றன உலகின் எந்தவொரு மக்களாவது அண்மைக்கால வலராற்றில் இந்தளவு விலை கொடுத்தது கிடையாது இந்த முக்கிய செய்தியை உணர மறுக்கும் அமைதி முன்னெடுப்பவர்களாக நடிப்பவர்கள் நீதி வழங்காமல் சுத்து மாற்று வேலைகளில் இறங்கியுள்ளனர்.
இன்று நோர்வேயில் காணப்படும் உயர்தரப்பு அபிப்பிராயம் புலம்பெயர் தமிழர்களை சிறிலங்கா இராசதந்திரிகள் கொழும்புப் பேரினவாதிகளின் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றோடு இணைத்து தமிழர் தரப்பு நியாயங்களை மழுங்கடிப்பதாகும் என்கிறார் டாக்டர் சிவகணேசன்.
இதற்கிடையில் நோர்வே அறிவித்த தோல்வி அடைந்த அமைதி முன்னெடுப்பு பற்றிய ஆய்வுகளை வெளிவர இருப்பதால் அது வெளிவரும் வரை கொழும்பின் தமிழர் எதிர்ப்பு வட்டாரங்கள் காத்திருப்பதாகவும் அரசியல் அவதானிகள் கணிப்பீடு செய்துள்ளனர். தங்கள் உடம்புத் தோலைக் காப்பாற்றுவதில் அக்கறை உள்ளவர்கள் போர் குற்ற விசாரணைகள் எடுக்க வேண்டிய மார்க்கங்களை ஏற்கனவே வரையறை செய்துள்ளனர் என்று அதே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
ஈழம் தமிழர்களுடைய தேசியப் பிரச்சனையில் தனது கொள்கையில் இந்தியா பாரிய மாற்றங்களைக் கொண்டு வருவதோடு நேர்மையான தீர்வுக்கு உழைத்தாலன்றி அது பாரிய விலை கொடுக்க நேரிடலாம் என்றும் இப்போது விரிவடையும் சர்வதேச அரசியல் விளையாட்டுக்களால் இந்தியா துன்பப்பட நேரிடலாம் என்றும் அரசியல் அவதானிகள் தமது மேலதிக கணிப்பீடுகளை முன்வைக்கின்றனர்.
நன்றி. தமிழ்நெற்
மொழியாக்கம் க.வீமன்

Comments