இலங்கையில் விடுதலைப் புலிகள் பூச்சாண்டி மகிந்த அரசு

விடுதலைப் புலிகளின் மீதான யுத்தம் நடந்து முடிந்து 19 மாதங்கள் முடிந்து விட்டன..இலங்கையில்..! அப்பாவி மக்களை லட்சக்கணக்கில் கொன்றும்..பல பத்து ஆயிரம் மக்களை உடல் உறுப்பு குறைத்தும்..

எஞ்சியுள்ள பல லட்சம் மக்களை முகாம்களில் அடைத்து வைத்தும் உலக நாடுகளை அப்பட்டமாக ஏமாற்றி வரும் மகிந்த ராஜபகே குடும்பம்..இலங்கையில் ஆட்சி செய்ய முடியாமல் தடுமாறி வருகின்றன...! இலங்கையின் எதிர்கட்சிகள் நெருக்கடியும்...இலங்கை மக்களின் சொல்லொண்ணாத் துயரங்களையும் மீறி... இலங்கை அரசு சந்தித்து வரும் போர்க்குற்ற நெருக்கடியில் இருந்து எப்படி தப்புவது என்பது குறித்து இலங்கை புலனாய்வு அமைப்புகளை முடக்கிவிடுகிறது மகிந்த ராஜபக்சே கும்பலின் குடும்பம்...!

சர்வதேச நாடுகளின் பார்வையில், விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அறிவித்து..இந்த புலிகளின் இருப்பால்..இலங்கைக்கு உள்நாட்டு அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து வருவதாக இந்தியா உள்பட அணைத்து நாடுகளும் ஒருசேர இலங்கை, ஈழத் தமிழனுக்கு ( சிங்களத் தமிழன் அல்ல...) அவர்களின் நியாயமான தனி நாடு கோரிக்கையை புறந்தள்ளினர்..தொடர்ந்து இலங்கை நாடு தீவிரவாத அச்சுறுத்தலுக்கு பலியாகும் நாடு என்று கருதி...ஆயுதங்கள் மற்றும் பல சிறப்பு சலுகைகளை வழங்கி வந்தனர்..கடந்த ஆண்டு 2009 மே மாதம் வரை...! இந்த சர்வதேச நாடுகளின் இந்த உதவியை..மிகச் சரியாக பயன்படுத்தி இந்திய அரசு விடுதலைப் புலிகளை ஒழிப்பதில் இலங்கை மகிந்த ராஜபக்சேவை விட முன்னே நின்றனர்..!

யுத்தங்களின் போது எழுப்படும் குரல்களையும் எழுப்பினார்கள்...
பாதுகாப்பு வலையம்...சரணடையுங்கள்..பொது மன்னிப்பு..சிறுவர்கள்..
முதியவர்கள்..பெண்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் பாதுகாப்பு.
என்று... யுத்தம் முடிந்தவுடன் உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் சற்றும் எதிர்பார்க்கவில்லை... மகிந்த ராஜபக்சே போராளிகளை ( அதாவது அவர்கள் மொழியில் பயங்கரவாதிகளை..) ஈவு இரக்கமின்றி கொன்றது கூட மேற்குலக நாடுகளுக்கு பெரிதாக தெரியவில்லை...எவ்வாறு..? இப்படி ஒரு இன மக்கள் அனைவரையும் முகாம்களில் அடைத்து வைத்து..ஐ.நா மன்றம்..மற்ற இருக்கும் எல்லா உரிமை அமைப்புகளையும் கால் தூசியென மதித்து..தான் ஒரு மிகச் சிறந்த ஜனநாயகவாதி என்று கூறிக்கொண்டு வருகிறார் இந்த ராஜபக்சே...!

என்ன நடந்து கொண்டிருக்கிறது இலங்கையில்...! முகாம் மக்கள் தவிர, ஏனைய மக்கள் அனைவரும் யாழ்பாணத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்ல முடியாது...கையில் கொண்டு வரும் அணைத்து பொருட்களும் சோதனை செய்யப்படும்...மேலும் கொழும்பில் எங்கே தங்குகிறார்..எவ்வளவு நாள் தங்குகிறார் ..எதற்கு கொழும்பு செல்கிறார் என்ற விபரங்கள் கூறினால் மட்டும் போதாது..
அடையாள அட்டை காண்பிக்க வேண்டும்..! ஒரு நாட்டின் சொந்த மக்களில் ஒரு மொழி பேசும் மக்கள் சுதந்திரமாக இலங்கையின் மற்ற இடங்களுக்கு செல்ல முடியாது...கடும் பாதுகாப்பு..கடும் சோதனை..என்ற பெயரில் இலங்கையின் சொந்த மக்கள் அழிக்கப்படுகிறார்கள்..!

இலங்கையின் இந்த மறு மொழி பேசும் இன மக்களை கூண்டோடு ஒழித்துக்கட்ட, உலகில் இதுவரை யாரும் செய்ய துணியாத, ஆப்பரிக்க நாடுகளில் கூட இனங்களுக்கு இடையே இன்று கூட பெரும் யுத்தம் நடந்து கொண்டு வருகிறது..என்ன வித்தியாசம் என்றால் அங்குள்ள எல்லா இனங்களும் ஆயுதம் வைத்திருக்கிறார்கள்...ஒரு இனங்களின் மக்கள் பலம் குறையும் போது இழப்புகளும்...பலம் கூடியவுடன் தாக்குதல்களும் இருக்கும்...! இலங்கையில் மட்டும் ஒரு இன மக்கள் எந்த ஆயுதங்களும் இன்றி..முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு ஈவு இரக்கமின்றி மெல்ல மெல்ல கொன்று அழிக்கப்பட்டு வருகிறார்கள்...!

இவ்வாறு இலங்கையின் தமிழ் மொழி பேசும் இன மக்களை முற்றும் முழுதாக அழிக்க..( சர்வதேச நாடுகளின் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நாடுகளில் ஒன்று இலங்கை...) சர்வதேச நாடுகளின் உள்நாட்டு அச்சுறுத்தல் என்ற வாய்ப்பை மிக நன்றாக பயன்படுத்தி வரும் மகிந்த ராஜபக்சே அரசுக்கு, இப்பொழுது கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளன..! யுத்தம் முடிந்து விட்டது.

விடுதலைப்புலிகள் மற்றும் அவர்களின் ஆயுதம் தாங்கிய எந்த ஒரு சிறு அமைப்பும் கூட இலங்கையில் கிடையாது..அதுவும் ஒரு 19 மாதங்களாக..பின் எவ்வாறு இன்றும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் ( விடுதலைப்புலிகளின் அரசு ஒன்று இயங்கி வந்ததை வசதியாக அணைத்து நாடுகளும் மறைத்து விட்டன..) வாழ்ந்து வந்த மக்களை சுதந்திரமாக வாழ விடாமல் முகாம்களில் கடும் கட்டுப்பாட்டுடன் அடக்கி வருகிறது இலங்கை மகிந்த அரசு..!

இந்த முகாம் நடவடிக்கைகள்..ஒரு இன மக்களை... ராணுவ கண்காணிப்பின் கீழ் கொடிய சிறைக்கைதிகளை விட மோசமாக நடத்துவதற்கு எவ்வாறு மேற்குலக நாடுகள் அனுமதித்து வருகின்றன..?

போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் என்று தொடர்ந்து அழுத்தங்கள் இலங்கை மீது இருந்தாலும்..இந்த அழுத்தங்களை சமப்படுத்துவதற்கு மகிந்த ராஜபக்சே குடும்ப கும்பல் ..விடுதலைப்புலிகள் இன்னும் இருக்கிறார்கள் இலங்கையில்..ஆயுதங்களுடன் மறைவாக இருக்கின்றனர் இலங்கையில் என்று... தனது ராணுவ குழுவை மற்றும் இலங்கை ராணுவத்தை வைத்துக்கொண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு சிறு தாக்குதல்களை நடத்தி..இதோ விடுதலைப் புலிகள் என்றும்..அதோ விடுதலைப்புலிகள் என்றும் உலக நாடுகளை..ஐரோப்பிய நாடுகளை ஏமாற்றி வருகின்றனர்..!

இந்த மகிந்த ராஜபக்சேவின் குரளி வித்தைகள் யாவும் தோற்று விடும் நிலையில் உள்ளன தற்போதைய நிலை..இந்த மகிந்த ராஜபக்சே கும்பலின் குடும்பத்திற்கு பின், சோனியா கும்பலின் குடும்பமும்..

கருணாநிதியின் குடும்ப கும்பலும் எவ்வளவோ முயற்சித்து பார்த்து விட்டன..இலங்கையில் அமைதி திரும்பி விட்டது என்றும்..போர் முடிவுக்கு வந்து விட்டது என்றும் கூறினார்கள்..சரி... போர் முடிவுக்கு வந்து விட்டது..விடுதலைப்புலிகளை முற்றிலும் ஒழித்து விட்டாயிற்று..

பின் எதற்கப்பா..முள்வேலியும் ..முகாம்களும்..என்றால் 'கடப்பாறையை முழுங்கியவன் முழிப்பதைப் போல் முழிக்கிறார்கள்..'

இப்பொழுது மீண்டும் ஒரு குழுவை அனுப்ப வேண்டும் என்று சொல்கிறார் சன்குழும குடும்ப கும்பலின் தலைவனும்..காங்கிரஸ் பெருச்சாளிகள் குடும்ப கும்பலும்..மன்மோகன் மூலம் கடித பரிவர்த்தனை மேற்கொள்கின்றனர் சன் குழுமத்திடம்...விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறி இருக்கிறது..புறா விடு தூது மட்டும் நடக்கவில்லை..( இவர்களுக்கு தெரியாதா என்ன.விஞ்ஞானம் மற்றும் அறிவியல் வளர்ச்சி எல்லாம்...! தமிழன், இலங்கை தமிழன் என்றால் அவ்வளவு பெரிய ஈனப் பிறவி என்று..கருதுகிறார்கள் எனலாம்..! ) முகாம் மக்கள் படிப்படியாக விடுவிக்கப்படுவார்கள் என்றும்..சுமார் 50,000 வீடுகள் கட்டித்தரப்படும் என்று இந்திய உள்துறை அமைச்சர் கூறுகிறார்..இலங்கை அரசை வலியுறுத்துவோம் என்கிறார்கள் மொட்டையாக..!

இதுபோன்ற சூழலில், ஐரோப்பிய நாடுகளின் அழுத்தங்களுக்கு..
அமெரிக்க பிரித்தானிய நாடுகளின் கோபப் பார்வையில் இருந்து தப்பிப்பதற்கு மகிந்த ராஜபக்சே கும்பலின் குடும்பம்... ஒரு பெரிய தாக்குதலை தனது ராணுவத்தை வைத்து சிங்கள மக்கள் மீது நடத்திவிட்டு, ( குறைந்த பட்சம் பல நூறு பொதுமக்களை கொன்று அழித்து விட்டு ) விடுதலைப் புலிகள் நடத்தினார்கள் இந்த தாக்குதலை என்று, ஆதாரங்களை வெளியிடும் வாய்ப்பு கூடுதலாக இருக்கின்றன என்றும்..அதற்கு இந்திய அரசும் ஆமாம்.. எங்களிடம் இலங்கை அரசை விட கூடுதலாக ஆதாரங்கள் உள்ளன இந்த தாக்குதல் விடுதலைப் புலிகள் நடத்தினார்கள் என்றும் வெளியிடுவார்கள்...ஏனெனில் இவ்வாறு இருக்கிறது தற்போதைய இலங்கை நிலைமை என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்..!

இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தி விட்டு, அந்த பொறுப்பை விடுதலைப்புலிகள் மீது சுமத்திவிட்டால், இலங்கையின் உள்நாட்டு அச்சுறுத்தல் தொடர்கின்றன இன்றும் என்று...முள்வேலி மக்கள்..முகாம் மக்கள் குறித்த அரசியல் உள்ளீடுகளை புறந்தள்ள முடியும் என்று கருதுகிறார் மகிந்த ராஜபக்சே..! உலக அரசியல் வரலாற்று நிகழ்வுகளில் மகிந்த ராஜபக்சே கும்பலின் குடும்பங்கள் சிறு மண் துகள் போன்றவர்கள்...! மக்கள் தான் வரலாற்றை படைப்பவர்கள்..

உலகை மாற்றியும் வந்துள்ளனர்..இனி மாற்றவும் இருப்பவர்கள்...!

ஈழதேசம் செய்திக்குழு

Comments