நேற்று முன் தினம் யாழ்.மாவட்டத்தின் வேலணை மருத்துவமனையில் பணியாற்றி வந்த தர்சிகா என்னும் மருத்துவத்தாதி தனது அலுவலக அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்ததாக நாம் செய்திவெளியிட்டிருந்தோம். அத்தோடு அவர் கொலைக்கு சிங்கள மருத்துவர் ஒருவரே காரணம் என ஊர்மக்கள் தகவல் தெரிவித்திருந்தனர். அத்தோடு அந்த வைத்தியர் தாதியை கற்பழித்து கொலைசெய்ததாக செய்திகள் வெளியாகியிருந்ததை அடுத்து அவரை தாம் கைதுசெய்துள்ளதாக காவல்துறை அறிவித்திருந்தது.
இருப்பினும் தற்போது வேலணையில் இருந்து கிடைக்கப்பெறும் தகவலின் அடிப்படையில் இச் சம்பவத்தோடு தொடர்புடைய சிங்கள வைத்தியர், இரணுவத்தினருக்கு நெருக்கமான நபர் எனவும், அவர் அடிக்கடி முகாமிற்குச் சென்று இராணுவத்தினருடன் மது அருந்தி களியாட்டங்களில் ஈடுபடுபவர் என்றும் அறியப்படுகிறது. இவர் நேற்று இரவும் இராணுவ முகாமில் இருந்ததாக தகவல்கள் கசிந்துள்ளது. இவர் இன்னும் கைதாகவில்லை என்பதே உண்மையாகும்.
இச் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்பாக சில நாட்களுக்கு முன்னரே , கொல்லப்பட்ட தாதியின் தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாகவும் அதிர்வு இணையம் அறிகிறது. இத் தாதியின் மரண வாக்குமூலம் எரியூட்டப்பட்டுள்ளதாகவும், ஆடைகளை காயப்போடும் நைலோன் கயிற்றை அறித்தே தூக்கில் தொங்கியுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்படுள்ளது. இக் கயிற்றை ஒரு பெண்ணால் அறுத்து அதனை சலாகையில் எறிந்து, தூக்குமாட்டும் அளவிற்கு அச் சலாகை உயரத்தில் இல்லை எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது அப்பெண் ஒரு கதிரைமேல் ஏறி கயிற்றை எறிந்து தூக்கு மாட்டும் அளவில், அந்தச் சலாகை இல்லை. அது மிகவும் உயரத்தில் இருந்ததாக அறியப்படுகிறது.
மற்றும் தூக்கில் தொங்கிய பெண்ணின் கால்கள் தரையை தொட்டவண்ணமே இருந்ததாகவும், சும்மா பெயருக்காக அப் பிணம் அருகே வெள்ளைக் கதிரை ஒன்றை யாரோ கவிழ்த்து விட்டுள்ளதாக அங்கு சென்ற எமது நிருபர் தெரிவித்தார். இவ் வைத்தியர் ஊர்காவற்துறை பொலிஸ் மற்றும் கடற்படை முகாம்களிலேயே மது அருந்தி தற்போதும் களியாட்டங்களில் ஈடுபட்டுள்ளார். இவர் இன்னும் கைதாகவில்லை. இச் சம்பவம் நடைபெற்ற இடத்தை அதிர்வின் செய்தியாளர் படம் எடுத்துள்ளார். அப் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இச் சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர், பல தமிழ் பெண்களின் வாழ்க்கையோடு விளையாடியுள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே குற்றம் புரிந்த சிங்கள வைத்தியர் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். அதற்கு தமிழ் மக்கள் உதவவேண்டும்.
மருத்துவ தாதியை கொலை செய்த வைத்தியர் கைது
வேலனை மருத்துவமனையில் பணியாற்றிய தமிழ் மருத்துவ தாதியான தர்சிகாவை படுகொலை செய்யதாக கருதப்படும் சிங்கள வைத்தியர் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவல்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
வேலனை வைத்தியசாலையில் பணியாற்றிவந்த மருத்துவ தாதி சரவணி தர்சிகாவை படுகொலை செய்த இரத்தினபுரியை சேர்ந்த வைத்தியர் பிரியந்தா செனிவரத்தினா நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவல்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தர்சிகாவின் (27) படுகொலை குறித்த விசாரணைகளுக்காக அவர் ஊர்காவல்துறை நீதிபதி முன் நிறுத்தப்பட்டுள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.
தர்சிகாவை படுகொலை செய்த சிங்கள இன வைதியரை சிறிலங்கா அரசு அவசரமாக இடமாற்றம் செய்ததுடன், அவருக்கு இராணுவத்தினர் பாதுகாப்புக்களையும் வழங்கி வந்திருந்தனர்.
எனினும் அப்பாவி தமிழ் பெண்ணின் கொலைக்கு நீதி வேண்டும் என யாழ்பாணத்தில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களும், தீவகப்பகுதி மக்களும் தொடர் போராட்டங்களை மேற்கொண்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments