விடுதலைப்புலிகள் மீண்டு எழுவதற்கு வாய்ப்பே இல்லை..? திருவாளர் கே.பி...! பின்னணியில் இந்திய அமெரிக்க உளவு அமைப்புகள்...?


இன்றைய ஈழம் குறித்த,இலங்கை அரசு குறித்த பல்வேறு விசயங்கள் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கின்றன..திருவாளர்கள் கருணா,பிள்ளையான் மற்றும் டக்லஸ்.. இவர்கள் தவிர வரதராஜ பெருமாள்.. அமிர்தலிங்கம் புதல்வர் மற்றும் ஏராளமான ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள் உள்ளனர் இன்றைய இலங்கையில்..!

இவர்கள் அனைவரும் சொல்லும் ஒரே விசயம்.... விடுதலைப் புலிகள் அனைவரையும் அழித்து ஒழித்து விட்டோம்..இலங்கையில்..என்று சொல்லும் மகிந்த ராஜபக்சேவின் கூற்றுக்களை..

இலங்கை அரசில் அங்கம் வகித்துக் கொண்டு அல்லது ஏதாவது ஒரு சிறப்பு சலுகையை பெற்றுக் கொண்டு..! இந்தக் கருத்தில் சற்று முன்னேற்றமாக இப்பொழுது இலங்கை அரசில் புதிதாக இணைந்துள்ள திருவாளர் கே.பி.யை வைத்து, இனி இலங்கையில் விடுதலைப் புலிகள் தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லை என்று புதிய செய்திகளை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கூறுகிறார்களா..?

'ஈழதேசம்' முன்பே கூறியதை கவனத்தில் எடுத்துக்கொண்டு, திருவாளர் கே.பி. இப்படி கூறுகிறாரா..? ஒன்று இலங்கை தமிழ் மக்கள் போருக்கு முன்பு வாழ்ந்த நிலையில், தற்பொழுது வாழவைக்கப் போகிறதா இலங்கை அரசு..! அப்படி செய்தால் மட்டுமே இலங்கையில் விடுதலைப் புலிகள் இனி தோன்ற, உருவாக வாய்ப்பே இல்லை என்று கூறலாம்..!

ஒருவேளை மகிந்த ராஜபக்சே கும்பல் ஈழத்தமிழர்களை, சிங்களவன் பெற்ற அரசியல் உரிமையுடன் வாழ வகை செய்யப்போகும் திட்டத்தை..விசயத்தை..முன்பே கண்டுபிடித்து திருவாளர் கே.பி.இவாறு கூறுகிறாரா..? விடுதலைப் புலிகள் மீண்டு எழுதவற்கு வாய்ப்பே இல்லை என்று...முள்வேலி முகாம் மக்களுக்கு அரசியல் சம உரிமை கொடுத்தால், எதற்கு விடுதலைப் புலிகள் இலங்கையில்..?

திருவாளர் கே.பி.அவர்களை ஏன்..? இந்திய பார்பனிய அரசு அல்ல..! சிங்கள அரசு கூட இல்லை..! இவர்களை கடந்து உள்ள அரசுகள் கைது செய்து இலங்கைக்கு கொண்டு வரவேண்டும்..? தாய்லாந்து அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இன்று..!

கே.பி.யின் கைது குறித்து ஒரு விசாரணை குழு அமைக்கப்படும் என்று..! இவை தவிர்த்து, விடுதலைப் புலிகள் அமைப்பை ஒன்றும் இல்லாமல் செய்துவிட மிகப்பெரும் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்தது அமெரிக்க பிரித்தானிய உளவு அமைப்புகள்..( இந்த இரண்டுக்குள்ளும் கலந்து விட்ட இந்திய பார்ப்பனிய உளவு அமைப்புகள் என்பது வேறு விசயம்...)

ஏன் இவ்வளவு முஸ்தீபு எடுத்து விடுதலைப் புலிகள் அமைப்பை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று, இன்று வரை துடித்துக்கொண்டு உள்ளன மேற்கண்ட உளவு அமைப்புகளும் அவர்களின் அரசுகளும்..!

இன்றைய கார்ப்பரேட் உலகில், மிகவும் நுட்பம் வாய்ந்த, சிறந்த ஒழுக்கங்களை கொண்ட, அதைவிட சிறந்த தலைமையைக் கொண்ட விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் செறிவான ராணுவ யுத்த தந்திரங்கள், அமெரிக்க மற்றும் பிரித்தானிய அரசுகளை அஞ்சி நடுநடுங்க வைத்துள்ளன என்றால் மிகையில்லை...

விடுதலைப்புலிகள் ஒன்றும் அமெரிக்க பிரித்தானிய அரசுகளுக்கு எதிரானவர்கள் இல்லையென்ற போதிலும், ஏன் அஞ்சி நடுநடுங்க வேண்டும் இந்த ஒற்றை அணி வகுப்பு நாடுகளின் தலையும் ஏனையவர்களும்..?

உலக விடுதலைப் போராளிகளுக்கு, விடுதலை வேண்டும் என்ற நாடுகளுக்கு...மற்ற புதிய அரசை அமைக்க விரும்பும் போராளிகளுக்கு...இலங்கையின் எல்.டி.டி.இ.என்ற ஆயுதந்தாங்கிய போர்ப்படை.... முன் மாதிரியாக, எடுத்தக்காட்டாக அமைந்து விட்டதால் என்று கருதலாமா..?

ஒரு சிறிய தீவில் பெரிய நாடுகளின் சவால்களை, எதிர் கொள்ளும் திறன் எளிதில் பெற்றுக் கொள்ளலாம் என்ற கருத்தியல்...கொலை நடுங்க வைத்துள்ளன என்று கருதலாமா...? போகட்டும் இவையெல்லாம்..!

திருவாளர் கே.பி.ஏன் முக்கியத்துவம் பெறுகிறார் இந்திய சிங்கள அரசுகளுக்கு...? தற்பொழுது போர்க்குற்றம், மனித உரிமை மீறல் குறித்த ஐரோப்பிய அமெரிக்க நாடுகளின் வலியுறுத்தல்களும்..ஐ.நா மற்றும் மக்கள் நடுவண் நீதிமன்றங்கள் வழங்கியுள்ள போர்க்குற்றம் நடந்துள்ள நாடுகளில் இலங்கையை முதல் இடத்தில் நிறுத்தலாம் என்ற நிலையில்...

வருங்காலத்தில் தவிர்க்க இயலாமல், முன் கூறிய நாடுகள் மற்றும் அமைப்புகள் மனித உரிமை போர்க்குற்றம் என்று விசாரிக்கும் நிலையில், விடுதலைப் புலிகளின் தலைவர்கள் நேரடி சாட்சியாக வந்து நின்றால்...விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கு எதிராக, திருவாளர் கே.பி.யை ஏன்.. முன் நிறுத்தும் திட்டமாக இருக்கக் கூடாது..? இந்திய சிங்கள...சோனியா, மகிந்த ராஜபக்சே கும்பலுக்கு...அதன் விளைவாக திருவாளர் கே.பி.யை சுதந்திரமாகவும்..அரசில் அமைச்சு பதவியும்..தமிழ் அரசியல் செய்யும் சுதந்திரமும் கொடுக்கப்பட்டுள்ளது என்று ஏன் கருதக்கூடாது..?

போர்க்குற்றம் சுமத்திய முன்னாள் இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா இரும்பு கொட்டடியில்..எந்த கருத்து சொல்லும்..எழுதும் உரிமை அற்ற நிலையில்...போர்க்குற்றம் இலங்கையில் நடக்கவில்லை என்ற கருத்து சொல்ல முன்னாள் விடுதலைப்புலிகளின் சர்வதேச அமைப்பாளர் கே.பி சுதந்திரமாக கருத்து சொல்லவும் எழுதவும்..இலங்கை அரசும் இந்திய அரசும் ஒன்றும் கோமாளிகள் அல்ல..மிகத் திறமையாக அரசியல் காய் நகர்த்துதல்களை சர்வதேச அமைப்புகளிடம் நகர்த்திக் கொண்டு உள்ளனர்...

இவற்றுக்கு மாற்றாக புலம் பெயர் மக்கள் எடுக்கும் போராட்டங்கள் மட்டுமே.... இந்த இந்திய சிங்கள சர்வதேச சதியை அம்பலப்படுத்த முடியும் என்று கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்...!

ஈழதேசம் செய்திக்குழு

Comments