தமிழின அழிப்புப் போரில் சிங்களத்துடன் அணிசேர்ந்த நாடுகளை இயற்கை சீற்றம்

தமிழின அழிப்புப் போரில் சிங்களத்துடன் அணிசேர்ந்த சீனா பாக்கித்தான் ரைசியா இந்தியா ஜப்பான் போன்ற நாடுகளை இயற்கை சீற்றம் கொண்டு புரட்டிப் போட்டுவருகின்து.

wer3

இந்தியாவின் காசுமீர் மாநிலத்தின் லே மாவட்டத்தில் வரலாறு கானாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் எல்லைப்பகுதியில் இமையமலை பகுதியை அண்மித்திருக்கும் இந்தப் பகுதியில் கடந்த நாட்களில் பெய்துவரும் அடை மழையின் காரணமாகவே பேரழிவு ஏற்பட்டுள்ளது.

எப்போதும் மிகவும் வறட்சியாக காணப்படும் இந்தப் பகுதியில் கடந்த சில தினங்களாக கொட்டித் தீர்த்துவரும் அடைமழையினால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வீடுகள் வைத்தியசாலைகள் அரச கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

இந்த மழைக்கு பலியானவர்களது எண்ணிக்கை 200ஐத் தாண்டியுள்ள நிலையில் 600 பேரைக் காணவில்லை. காணாமல்போன 600 பேரும் மண்ணில் புதைந்து இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் 15ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். அடைமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள லே மாவட்டம் ஏனைய பகுதிகளுடன் தரைவழி தொடர்பு துண்டிக்கப்பட்ட நிiயில் தனித்தீவு போன்று உள்ளது. இங்கு அமைந்துள்ள இந்திய இராணுவத்தளங்களில் கடமையில் இருந்த பல இராணுவத்தினரும் வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.

தகவல்தொடர்பும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளநிலையில் மிகுந்த இடர்பாடுகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ள நிலையில் ஆந்திரா மாநிலத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையினால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பிவிட்டன. இதனால் ஆந்திரா மற்றும் குஜராத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எவ்வேளையிலும் பேரழிவு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

wer3

இதனைவிட மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் 300ற்கு மேற்பட்ட கிராமங்கள் வெள்ளநீரால் சூழப்பட்டு நீர்தேக்கம் போன்று உள்ளது. இங்கும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளது.

wer3

இந்தியாவில் இவ்வாறு என்றால் ரைசியாவில் கடும் வெய்யிலின் தாக்கத்தினால் வேகமாக பரவிவரும் காட்டுத் தீயால் அணு ஆயுதங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ரைசியாவின் தலைநகர் மொஸ்கோவிற்கு அருகே பரவிவரும் காட்டுத் தீயால் அணு ஆயுத உலைகளுக்கும் ஏவுகணைகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

மொஸ்கோ அருகே சரோவ் என்ற நகருக்கு வெளியே உள்ள காட்டுப்பகுதி ஒரு இலட்சத்து 79அயிரத்து 600ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. இந்த காட்டுப் பகுதியல் 588 இடங்களில் தீபிடித்துள்ளது. கடந்த 24மணி நேரத்தில் 248 இடங்களில் தீபிடித்துள்ளது. மிக வேகமாக தீபரவிவருவதால் பெரும் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

ஆறு மணித்தியாலங்களில் 86ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு காடுகள் தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. சரோவ் நகரத்திற்கு 400 மீட்டர் தூரத்தில் உள்ள பகுதியிலேயே இந்த அனர்த்தம் ஏட்பட்டுள்ளது.

wer3wer3wer3wer3

மரத்தால் ஆன வீடுகள் பல்லாயிரக்கணக்கில் எரிந்து சாம்பலாகியுள்ளது. சில கிராமங்கள் முற்றிலுமாக தீயில் கருகி நாசமாகியுள்ளது. இந்த சரோவ் நகரில்தான் பிரதான அணு உலைக் கூடம் உள்ளது. தீ தொடர்ந்து அசூரவேகத்தில் பரவருவதால் இங்கு பாதுகாக்கப்படும் ஆணு ஆயுதங்களும் கதிரியக்க பொருட்களும் வெடி பொருட்களும் ஏவகணைகளும் பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றப்பட்டுள்ளன.

இத் தீ விபத்தினால் ஏற்பட்ட புகை மூட்டம் மொஸ்கோ பகுதியல் 3ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவியுள்ளதால் மக்கள் பெரம் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

பாக்கித்தானில் பெய்துவரும் தொடர்மழையால் பாதிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டி விட்டதாகவும் பயிற்செய்கைக்குள்ளாகியிருந்த வயல் நிலங்கள் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மிகப்பெரும் உணவுப் பஞ்சம் ஏற்படலாம் என பாக்கித்தான் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.

wer3

ஈழதேசம் ஆய்வாளர் : ம.செந்தமிழ்.

Comments