நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், கனேடிய தமிழ்சமூகமும் அகதிகளுக்காக ஒன்றாக அணிதிரள்கின்றது!

தமிழீழ விடுதலைப் போராளிகள் இந்தக் கப்பலில் இருக்கும் பட்சத்தில் ஜக்கிய நாடுகள் சபையின் போராளிகள் பாதுகாப்பு ஷரத்துக்களின் கீழ் சித்திரவதை மற்றும் வழமைக்குமாறான தண்டனைகளிலிருந்து பாதுகாப்புப்பெறும் தகைமையை அவர்கள் கொண்டுள்ளனர்.

தற்போதைய நிலவரம்

பல மாதங்களாக சரக்கு கப்பலில் அடைபட்டு வலிமிகுந்த கடல் பயணத்தினை மேற்கொண்ட தமிழீழத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் பிரிட்டிஸ் கொலம்பியாவினை கடந்த 13ம் திகதி வெள்ளியன்று வந்தடைந்துள்ளனர்.

வியாழனன்று இரவு கனேடிய அதிகாரிகள் எம்வி-சன்-சீ என்ற அந்தக்கப்பலில் ஏறி 59மீற்றர் நீளமுள்ள அந்தக் கப்பலை விக்ரோரியாவிற்கு அருகேயுள்ள எஸ்குமல்ட் துறைமுகத்திற்கு வெள்ளியன்று காலை கொண்டுவந்துள்ளனர். அங்கு கப்பலில் இருந்த அண்ணளவாக 400 ஆண்கள், 60 பெண்கள் மற்றும் 30 சிறுவர்கள் தொடர்பான உத்தியோகபூர்வ ‘நெறிமுறைகள்’ ஆரம்பமாகியுள்ளன.

பல அவசரஉதவி வாகனங்கள் விக்ரோரியா வைத்தியசாலைக்கு சில பயணிகளை எடுத்துச் சென்றுள்ளது. அங்கு அவர்கள் வைத்தியர்களால் பரிசோதிக்கப்படுவார்கள். ஆனால்; ஆரம்பத்தில் புலம்பெயர்ந்த தமிழ்மக்களால் அஞ்சப்பட்டதிலும் பார்க்க அகதிகள் ஆரோக்கிய-மானவர்களாகவுள்ளனர். இரு கர்ப்பிணித்தாய்மார், ஒரு ஆறுமாதக் குழந்தை மற்றும் மற்றுமொரு குழந்தை உட்பட எண்மரே வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். எவரும் மிகமோசமான நிலையில் இல்லை.

காவற்துறையின் பாதுகாப்புவேலி காரணமாக பிற்காலை வேளையில் எத்தனை அகதிகள் அவசர உதவி வாகனங்கள் மூலம் வெளியேறுகின்றனர் என்பதை தெளிவாகப் பார்க்க முடியாதுள்ளது. எனினும் இளம் பிள்ளைகளது அழுகை அந்த பாதுகாப்பு வேலிக்குப் பின்னால் கேட்டுக் கொண்டிருந்தது. குழந்தைகளின் அழுகையொலி அதிகரித்துக் கொண்டிருக்கையில் ‘இது வெட்கக்கேடானது’ என காவல்துறையின் நாடாக்களுக்குப் பின்னால் பார்த்துக் கொண்டு நின்ற தமிழர் ஒருவர் குறிப்பிட்டார்.

அதிகாரிகள் புதிதாக வந்திறங்கியுள்ள பெரும்தொகையான மக்களின் சட்ட நடைமுறைகளை கையாண்டு கொண்டிருக்கையில் கனடிய மத்திய அரசாங்கம் இந்த புலம்பெயர்ந்த மக்களின் கப்பலிற்கு எதிரான கடும் நிலைப்பாட்டினை எடுத்து வருகின்றது. மேலும் இரு கப்பல்கள் கனடாவினை நோக்கி வருவதான அறிக்கைகள் வெளிவருகின்றன.

ஈழத் தமிழர்களின் அரசாங்கமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் திகழ்வதால், இந்த அகதிகளின் அவலநிலைமை குறித்து கரிசனை கொண்டுள்ளதுடன் அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான ஈடுபாட்டினையும் கொண்டுள்ளது.

ஊடகங்கள் மற்றும் சர்வதேச மன்னிப்புச்சபை போன்ற சர்வதேச ஆதரவுக் குழுக்களால் வெளியிடப்படும் அறிக்கைகளில் சிறீலங்கா இராணுவ முகாம்களில் மே-2009 முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் பலவழிப்பட்ட மனிதஉரிமை மீறல்களுக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எதுவுமற்ற நிலையில் கனடாவை வந்தடைந்துள்ள இந்த ஈழத்தமிழ் மக்களுக்கு கனடிய அரசு அவசியமான மருத்துவ தேவைகளை வழங்கியமையை வரவேற்கும் அதேவேளை நாடுகடந்த அரசு தனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. ஈழத் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்ட கொடும் இராணுவ நடவடிக்கைகளும் சர்வதேச சமூகம் அவர்களை கைவிட்டமையும் தான் இந்த மக்கள் 3 மாத காலங்கள் உயிராபத்து நிறைந்த கடற்பயணத்தை மேற்கொள்வதற்கு காரணங்களாக அமைந்தன என்பதை நாம் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். மேற்கண்ட சூழ்நிலைகளால் இந்த மக்கள் மிகவும் ஆழமான மனச்சிதைவுக்கு உள்ளாகியிருப்பார்கள் என்பதனால்; அவர்களுக்கு உரிய மனநலவள ஆலோசனைகளை வழங்க நாம் கனடிய அரசினை வேண்டிக் கொள்கின்றோம்.

அகதிகள் விடுவிக்கப்பட்ட பிற்பாடு, அவர்களுக்கு உறைவிடம், சட்டஉதவி மற்றும் உடனடி மனஆற்றுகை போன்ற உடனடி தேவைகளை வழங்குவதற்கான முயற்சிகளை கனேடிய தமிழ் சமூகம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் பல உள்நாட்டு நிறுவனங்கள் ஊடாக மேற்கொண்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உள்ளுர் மற்றும் தேசிய சமூக சேவை நிறுவனங்களிடம் உதவிகோரும் அவசர வேண்டுதல்களை விடுத்து வருகின்றது. முதற்தடவையாக கனேடிய தமிழ் சமூகம், இத்தகைய பெரியளவிலான அகதிகள், குறிப்பாக பெண்கள், சிறுவர்கள் தொடர்பான விவகாரத்தினைக் கையாள்கின்றது.

சில ஊடகங்களால் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களும் இந்தக் கப்பலில் உள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. நாங்கள் ஊடகங்களை பொறுப்புணர்வுடன் நடக்குமாறு வேண்டுகின்றோம். சிறீலங்கா அரசின் கண்களில் அனைத்து தமிழர்களும் விடுதலைப் புலிகளேயாவர்கள். இதனால் ஊடகங்களை தகவல்களின் மூலத்திற்கு செல்லுமாறு கேட்டுக் கொள்கின்றோம். இந்தக் கப்பலில் புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருந்தாலும் சுரேஸ் மாணிக்கவாசகம் வழக்கில் கனேடிய உச்ச நீதிமன்றம் உறுதிபடக்கூறியது போன்று சித்திரவதை மற்றும் வழமைக்கு மாறான தண்டனைகளிலிருந்து பாதுகாப்புப்பெறும் தகைமையை அவர்கள் கொண்டுள்ளனர்.

சித்திரவதை சிறீலங்காவில் நிலவும் மிக தீவிர பிரச்சனை என்பது அமெரிக்க மனிதஉரிமைகள் அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டது போன்று வெளிப்படையாகத் தெரிந்த விடயமாகும்.

தமிழர் அபிலாசைகளை வன்முறையற்ற வழியிலும் – வெளிப்படைத்தன்மையுடனும்; – பொறுப்புணர்வுடனும் வெளிப்படுத்துவதற்கும், அதனை சென்றடைவதற்குமாக புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தினால் தெரிவுசெய்யப்பட்ட அமைப்பே நாடுகடந்த தமிழீழ அரசாங்கமாகும். அந்த வகையில் இந்த தமிழீழ மக்கள் கனடிய அரசினால் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கும் கனடாவில் தங்குவதற்குமான தகைமையை அவர்கள் பெற்றுக் கொள்வதற்குமான செயற்பாடுகளிற்கு நாடு கடந்த அரசாங்கம் தன்னுடைய வளங்களையும் ஆதரவினையும் பயன்படுத்தும் உறுதிப்பாட்டினை கொண்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது தற்போதைய சூழ்நிலையை தொடர்ச்சியாக கவனித்து வருவதுடன் இந்த கடுமையான சூழலில் கனேடிய அரசுக்கும் புதிய வருகையாளர்களும் உதவுவதற்கான தனது கடைமைப்பாட்டினை வெளிப்படுத்துகின்றது.


கனடா வந்துசேர்ந்த கப்பலில,; 31 வயதுடைய ஆண் ஓருவர் கப்பல் பயனத்தின் போது கடும் நோயுற்ற காரணமாக, தகுந்த மருத்துவ சிகிச்சைகள் இன்றி இறந்துள்ளாரென ஊடீஊ நிறுவனத்திற்கு கவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஏந்த வகையான குற்றச்சாட்டுக்களும் குறிப்பிட்டு சொல்வதற்கு இல்லையென குடிவரவு திணைக்கழகம் தெரிவித்துள்ளனர். 450 அகதிகளுக்கான விசாரணைகளை திங்கள் முதல் ஆரம்பித்துள்ளன.

முத்துக்குமாரசாமி இரத்தினா
ஒருங்கிணைப்பாளர், இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் அகதிகள் குழு

மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்:

கற்பனா நாகேந்திரா, (604 340 2343)
நாடுகடந்த அரசாங்கத்தின் தேர்வுசெய்யப்பட்ட பிரதிநிதி – இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் அகதிகள் குழு உறுப்பினர்

மார்க் மோகனசிங்கம், (604) 321 0152
நாடுகடந்த அரசாங்கத்தின் தேர்வுசெய்யப்பட்ட பிரதிநிதி – பொருளாதார நலன் அபிவிருத்தி குழு உறுப்பினர்;

Comments