பூகோள அரசியலின் “கஸ்டடிக்குள்” வந்துள்ள சிறீலங்காவை மிரட்டும் சக்திகளாக புலம் பெயர் தமிழ் சமூகமே உள்ளது
எம்.வீ.சண் சீ கப்பலில் 490 தாயக உறவுகள் பெரும் இன்னல்களுக்கு மத்தியில் கனடாவை வந்தடடைந்துள்ளனர். கனடாவில் மட்டுமல்ல உலகளவில் பெரும் பரபரப்புக்கும் சர்ச்சைக்குமுரிய விடயமாக இந்த அகதிகள் விவகாரம் மாறியுள்ளது. முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பிற்பாடு ஈழத்தமிழர்கள் இப்படி குழுக்களாக சேர்ந்து அகதிகளாக பெரும் ஆபத்திற்கு மத்தியில் கடற்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.
கடந்த வருட இறுதிப்பகுதியில் "ஓசன்லேடி" என்ற கப்பல் மூலம் ஏற்கனவே பலர் கனடாவை வந்தடைந்தார்கள். அத்தோடு கடந்த வருடம் இந்தோனேசிய கடற்பரப்பில் நடுக்கடலில் தமக்கு அரசியல் தஞ்சம் வழங்குமாறு நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்கள் மாதக்கணக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது எல்லோரும் அறிந்ததே. தினமும் அவுஸ்திரேலியா நோக்கி படகுகளின் வழி எம்மவரின் ஆபத்தான பயணம் தொடாந்து கொண்டேயிருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து தமது அரசியல் நிலைப்பாடு சார்ந்து சம்மந்தபட்ட நாடுகளும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் - குறிப்பாக சிறீலங்கா- தமது இஸ்டத்திற்கு கருத்து கூறி வரும் நிலையில் கடந்த நவம்பர் மாதமே இந்தேனேசிய, அவுஸ்திரேலிய - கனடா அகதிகள் கப்பல் விவகாரம் தொடர்பாக உண்மையான அரசியல், சமூக, பண்பாட்டு, உளவியல் விளக்கத்தை ஈழம்ஈநியூஸ் தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் பரணிகிருஸ்ணரஜனி, எடவேட் ரமாநந்தன், யாழினி ரவிச்சந்திரன், சித்ரலேகா துஸ்யந்தன், பிரியதர்சினி சற்குணவடிவேல் அகியோர்களைக் கொண்ட உளவியலாளர் குழு பதிவு செய்திருந்தது.சிறீலங்காவின் தொடர் அழுதங்களுக்கும் பொய்ப் பரப்புரைகளுக்கும் மத்தியில் வந்திருக்கிற அகதிகளை கனடா எப்படி கையாளப்போகிறது என்ற பரபரப்பும் பதட்டமும் தமிழ்மக்கள் மத்தியல் நிலவும் சூழலில் சங்கதி இணையத்தளத்திற்காக மேற்படி ஆய்வாளர்குழுவில் ஒருவரான பரணிகிருஸ்ணரஜனியுடன் இது தொடர்பாக தொடர்பு கொண்டு உரையாடினோம்..
இனப்படுகொலை போர்க்குற்றம் மற்றும் தற்போதைய அகதிகள் விவகாரத்தை மையப்படுத்தி பல பல்கலைக்கழக புலமைசார் அறிஞர்களுடன் இணைந்து சர்வதேச மட்டத்தில் சிறீலங்கா மற்றும் சில சிறீலங்கா அதிகாரிகள் தொடர்பான போர்க்குற்ற ஆவணங்களை பதிவு செய்யும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையிலும் எமக்காக தமது நேரத்தை ஒதுக்கி இந்த நேர்காணலை வழங்கியமைக்கு அவர்களுக்கு எமது நன்றிகள்...
இந்த நேர்காணலை ஒழுங்கு செய்து தந்த ஈழம்ஈநியூஸ் தளக்கட்டுப்பாட்டாளர் லெனின் சுதாகரனுக்கு எமது நன்றிகள்.
கேள்வி: கடந்த வருடம் இறுதிப்பகுதியில் இந்த அகதிகள் விவகாரம் தொடர்பாக நீங்கள் முன்வைத்திருந்த கருத்துக்கள் மிகவும் துல்லியமானதாகவும் பல பரிமாணங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது. இது ஏன் பரவலான கவனத்தை பெறவில்லை?
பதில்: தமிழர்களின் சாபம் இது. மே18 இற்கு பிற்பாடு பல குழுக்களாக பிரிந்திருக்கும் தமிழர்களின் அரசியல் சமூக கட்டமைப்புக்கள் ஊடகங்களையும் பங்கு போட்டு விட்டன. எனவே தமது குழு அரசியலை முன்னிறுத்தாத மக்களின் அவலத்தை - மக்கள் சார் அரசியலை பேசும் கருத்துக்களை சம்பந்தபட்ட குழுவாத ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து விட்டன. ஒரு இனப்படுகொலையை சந்தித்த இனத்தின் உளவியல் இப்படித்தான் இருக்கும் என்ற யதார்த்தத்தை நாம் உணர்கிறபோதும் அதிலிருந்து இன்னும் மீளாமல் ஊடகங்கள் குழு அரசியல் செய்வதை விமர்சிக்காமல் இருக்க முடியவில்லை. எமது அந்த ஆய்வு உண்மையில் பல்கலைக்கழக ஆய்விற்காக செய்யப்பட்டதிலிருந்து அந்த இணையத்தளத்திற்கு கூறப்பட்டவை.இனப்படுகொலையைச் சந்தித்த ஒரு இனத்தின் இருப்பு தொடர்பான மிக முக்கியமான கருத்துருவாக்கங்கள் அவை. மே 18 இற்கு பின்னான தமிழர் அரசியல் இருப்பு தொடர்பாக நாம் ஆய்வு செய்தபோதுதான் இந்த கூட்டு அரசியல் தஞ்சம் என்ற பதத்தை கண்டடைந்தோம். புலம் பெயர் தமிழ் சமூகம், அகதிகளின் தொடர் வருகை என்ற கூட்டிணைவு சிறீலங்காவில் எமது அரசியல் இருப்பு தொடர்பாக சில காத்திரமான செய்திகளை சர்வதேசத்தில் பதிவு செய்யும் என்பதை நாம் முன்பே கண்டடைந்தோம். சிறீலங்கா என்ற தேசத்திற்குள் எமக்கான தனித்துவமான அரசியலை செய்ய முடியாது என்ற பதட்டத்துடன் இருந்தபோதே இந்த கருத்துருவாக்ங்கள் எமக்கு நம்பிக்கையளிக்கும் ஒன்றாக இருந்தது.
பூகோள அரசியலின் "கஸ்டடிக்குள்" வந்திருக்கிற சிறீலங்காவை மிரட்டும் சக்திகளாக - மேற்குலகின் துருப்பு சீட்டுக்களாக புலம்பெயர் தமிழ் சமூகமே இருக்கிறது. இந்த அடிப்படையில் பெருந்தொகையான எண்ணிக்கையில் அகதிகளாக தமிழர்கள் புலம்பெயர்வது சிறீலங்காவை பெரும் அச்சத்திற்குள் தள்ளியிருக்கிறது. அப்போதே நாம் கூறினோம். கடல்வழி பயணங்கள் தொடரும் என்று.. அத்தோடு முள்ளிவாய்க்கால் படுகொலைகளின்போது மெனளமாக இருந்த சர்வதேச சமூகத்திற்கு ஒரு வகையான நெருக்கடியை கொடுக்கும் செயற்பாடு இது. இதுவும் ஒரு வகையான போராட்டவடிவம்தான்.
ஆனால் தமிழ் ஊடகங்களோ - அரசியற்செயற்பாட்டாளர்களோ இதை உணர மறுக்கிறார்கள் அல்லது அடம்பிடிக்கிறார்கள். ஊடகங்கள் குழுவாத - குண்டுசட்டி அரசியலை ஓரங்கட்டிவிட்டு கால நீரோட்டத்தில் கலந்துகொண்டு சர்வதேச அரசியலில் தமிழர் தரப்பை ஒரு பேசும் சக்தியாக மாற்ற உழைக்க வேண்டும்.
கேள்வி: தற்போது கூட சம்பந்தபட்ட நாட்டின் அதிகாரிகளுடன் உங்களது கருத்துக்களை முன்வைத்து யாரும் வாதாடுவதுபோல் தெரியவில்லையே....
பதில்: வருத்தமளிக்கும் செயல்தான். இது தொடர்பாக பேசும் நிறுவனங்களுக்ஞ, சட்டத்தரணிகளுக்கு இப்படியான கருத்துக்கள் சமூகத்தில் உள்ளன என்றாவது தெரியுமா என்பது சந்தேகமே... ஏனெனில் ஊடகங்கள் இருட்டடிக்கும் ஒரு செய்தியை அவர்கள் தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு. அத்துடன் ஆங்கில ஊடகங்களில் பதிவுகள் வரும்போதே இப்படியானவர்களின் கவனத்திற்கு அது செல்லும். இருக்கிற ஒன்றிரண்டு தமிழர்களை மையப்படுத்தும் ஆங்கில ஊடகங்களும் குழு அரசியலின் மையங்களாக செயற்படுகின்றன. பிறகு எப்படி கருத்துக்களை கொண்டு சோப்பது..?
கேள்வி: சரி, தற்போது சம்பந்தபட்ட நாடுகளுக்கு ( குறிப்பாக கனடா) இந்த அகதிகள் தொடர்பில் முக்கியமாக என்ன விளக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
பதில்: அதுதானே எமது ஆய்வு. இரண்டு கருத்துருவாக்கங்கள் முதன்மைப்படுத்தப்பட வேண்டும். ஒன்று அவர்கள் அனைவரும் இனப்படுகொலையில் இருந்து தப்பியவர்கள். இரண்டு அவர்களக்கு கூட்டு அரசியல் தஞ்சம் வழங்கப்படவேண்டும். ஏன் என்பதற்கான விளக்கத்தைத்தான் எமது ஆய்வில் விளக்கியிருக்கிறோம். உங்கள் கேள்விக்காக ஒரு சிறு விளக்கம்.
முள்ளிவாய்க்காலில் உண்மையில் நடந்தது உயிர்களின் பலியெடுப்பு அல்ல. முள்ளிவாய்க்காலில் மனித உயிர்களுக்கும் அப்பால் இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடையாளங்கள் மீதான அழித்தொழிப்பே நடைபெற்றது. இந்த அடையாளங்களை தாங்கியவர்களாக, அந்த அடையாளங்களை தக்க வைப்பதற்காக முன்னின்று போராடியவர்களுக்கு தோள்கொடுத்ததற்காக அந்த மக்கள் அந்த நிலத்தில் வைத்தே அழித்தொழிக்கப்பட்டார்கள். எஞ்சியவர்கள் முடமாக்கப்பட்டு முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தப்பியவர்கள்தான் இன்று ஒன்று சேர்ந்து குழுக்களாக பல முனைகளினூடாக அரசியல் தஞ்சம் கோரத் தொடங்கியிருக்கிறார்கள்.
யார் என்ன வியாக்கியானம் கூறினாலும் தஞ்சம் கோரியிருப்பவர்களுக்கு இருக்கிற ஒரே அடையாளம் "இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்கள்" என்பதுதான். நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்று சேர்ந்து குழுக்களாக பல முனைகளினூடாக அரசியல் தஞ்சம் கோரியிருக்கிற நிகழ்வு சொல்கிற மிகப் பெரிய உண்மை இது. ஏனெனில் இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடிப்படையிலேயே படுகொலை நிகழ்த்தப்பட்டது. அந்தப் பேருண்மையைத்தான் இன்று கனடாவில் தரையிறங்கியிருக்கிற 490 தமிழர்களும் உலகத்திற்கு உரத்து அறிவிக்கிறார்கள் என்றுதான் நாம் பொருள் கொள்ள வேண்டும். போரில் குருரமாகத் தோற்கடிக்கப்பட்டவர்களாக - தமது அடையாள நிலத்தை இழந்தவர்களாக - வாழ்வதற்கான நிலமற்றவர்களாக அவர்களது இருப்பு மாறியிருப்பதை அவர்களது "கூட்டு அரசியல் தஞ்சம்" அறிவிக்கிறது.
ஒரு பெரும்பான்மை இனம் அரச உரிமையை வைத்து இறையாண்மை என்ற பெயரில் ஒரு சிறுபான்மை இனத்தின் மீது நடத்திய அழித்தொழிப்பு இது. அங்கு நடந்தது உண்மையில் உயிர்களின் பலி அல்ல. தமிழ் என்ற பண்பாட்டு நிலம் பறிக்கப்பட்டது. இனம் மொழி நிலம் பண்பாடு என்ற அடையாளங்கள் அழிக்கப்பட்ட ஒரு குழுமம் தனது வேர்களைத் தேடி அல்லது தனது வேர்களைத் தக்கவைப்பதற்காக அந்த அழிநிலத்திலிருந்து தப்பிய ஒரு பயணம்தான் மேற்படி நிகழ்வுகளிலுள்ள முக்கிய கூறு. அத்தோடு ஈழம் என்ற தேசம் குறித்த தாயகம் தேசியம் சுயநிர்ணயம் என்ற அரசியல் தத்துவார்த்த பொருண்மைகளை உலகிற்கு ஓங்கி அறிவிக்கிற ஒரு அரசியற் செயற்பாடாகவும் இது இருக்கிறது.
இதை தெளிவாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழர் தரப்பு விளக்க வேண்டும். ஆச்சரியப்படும் வகையில் கனடாவில் குறிப்பாக தமிழர்கள் தரையிறங்கியிருக்கிற வன்கூவரில் அகதிகள், புலம்பெயர் சமுகம் ( சநகரபநநள யனெ னயைளிழசய உழஅஅரnவைல.) தொடர்பான பல பல்கலைக்கழக பீடங்களும் ஆய்வளர்களும் (னநியசவஅநவெ யனெ சநளநயசஉh கநடடழறள ) இருக்கிறார்கள். அவர்களுக்கு மேற்படி கருத்தை கொண்டு சோக்க வேண்டும். அவர்களினூடாக கனடிய குடிவரவு அதிகாரிகளுடன் தொடர்பைப் பேணுவது இன்னும் சிறந்தது.
கேள்வி: போர் முடிவடைந்து விட்டது. இனி அகதிகளை ஏற்கத் தேவையில்லை என்று சிறீலங்காவிலிருந்து மட்டுமல்ல மேற்கிலும் சில கருத்துக்கள் உலாவருகின்றனவே.. இது குறித்து என்ன கூறுகிறீர்கள்?
பதில்: எமது ஆய்வில் இது குறித்து தெளிவாக வரையறுத்திருக்கிறோம். முன்னையதை கழித்துவிட்டாலும் 2009 ம் ஆண்டு குறிப்பான மே மாதம் இறுதிவரையான முதல் ஐந்து மாதங்களில் ஏறத்தாழ 30000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளர்கள் என்று அனைத்துலக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு இவை இனப்படுகொலை என்பதையும் கருத்தளவில் எல்லோரும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் இனம் மொழி பண்பாடு என்பவற்றால் ஒரே அடையாளத்தை உடையவர்கள் என்பது இங்கு குறிப்பான கவனத்திற்குரியது. அவர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள்? இதற்கான விடையில்தான் இந்த கூட்டு அரசியல் தஞ்சத்தின் அடிப்படை மட்டுமல்ல அவர்கள் சார்ந்துள்ள இனத்தின் அடையாளமும் அவலமும் புதைந்திருக்கிறது.
தாயகம் தேசியம் சுயநிர்ணயம் என்ற அரசியல் தத்துவார்த்த பிரச்சினைக்கும் அப்பால் இனம் மொழி நிலம் பண்பாடு என்ற உள்ளார்ந்த அடிப்டையில் தமது சொந்த நிலத்தில் சுதந்திரமாக வாழ முற்பட்ட - எத்தனித்த ஒரு குழுமத்தின் பிரச்சினையாகவே சிறீலங்காவின் இன முரண்பாட்டை கவனத்தில் கொள்ள வேண்டும் அல்லது அதன் ஆரம்ப புரிதல் அப்படித்தான் இருக்க வேண்டும். முள்ளிவாய்க்கால் படுகொலைகளை கவனமாக எதிர் கொள்ளும் ஒருவர் இதை சுலபமாக இனங்கண்டு கொள்ள முடியும்.
சிறீலங்காவில் தமிழர்கள் என்ற அடையாளத்தின் அடிப்டையில் இப்போது தாயகம் தேசியம் சுயநிர்ணயம் என்ற அரசியல் தத்துவார்த்த சொல்லாடல்கள் மட்டுமல்ல இனம் மொழி நிலம் பண்பாடு என்ற அடிப்படையே கேள்விக்குள்ளாக்கப்பட்டுவிட்டது. இந்த அடிப்படையில் இனம் மொழி நிலம் பண்பாடு என்ற அடிப்படையில் அழித்தொழிப்பு நடைபெற்ற மண்ணில் அந்த அடையாளங்களுடன் எப்படி தொடர்ந்து வாழ முடியும்? அந்த அழித்தொழிப்பின் இலக்குகளாக - நேரடி சாட்சிகளாக எத்தகைய மனநிலையில் அங்கு தங்கியிருக்க முடியும்? இத்தகைய அழித்தொழிப்பு இனி அங்கு நடைபெறாது என்பதற்கு யார் உத்தரவாதம்? அழித்தொழிப்பின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட்டார்களா? குறைந்தது எச்சரிக்கையாவது செய்யப்பட்டார்களா? பொது மன்னிப்பு என்று அறிவிக்கப்ட்டு சரணடயக்கூறிய அரசு இதுவரை ஒரு போராளியையாவது விடுதலை செய்ததா? அவ்வளவு ஏன் புலிகளின் பணயக் கைதிகள் என்று விளிக்கபட்ட மக்கள் யாருடைய பணயக்கைதிகளாக முட்கம்பி வேலிக்குள் இப்போது கிடக்கிறார்கள்? இப்படி எண்ணற்ற கேள்விகளுக்கு சிறீலங்கா என்ற தேசத்தை இறையாண்மையுள்ள ஒரு தேசமாக அங்கீகரித்து அதன் போருக்கு துணை நின்ற கேடு கெட்ட உலகம் பதில் சொல்ல வெண்டும். அதன் பிற்பாடே குழுக்களாக தேசம் தேசமாக எம்மவர் தஞ்சம் கோருவது பற்றிய சலிப்பை கொட்ட வேண்டும்.
இனப்படுகொலை, போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை ஒரு குழுவை நியமித்திருக்கிறது. குறைந்தபட்ச அடிப்படையில் அந்த விசாரணையின் முடிவு வெளிவராமல் எந்த அடிப்படையில் அகதிகளை திருப்பி அனுப்ப முடியும். இது அடிப்படையில் ஐநாவின் விதிகளுக்கு முரணானது.
கேள்வி : கப்பலில் வந்திருப்பவர்கள் பயங்கரவாதிகள் என்று கூறப்படுவது குறித்து என்ன கூறுகிறீர்கள்?
பதில் : இது விசமத்தனமான பிரச்சாரம். வந்திருப்பவர்களில் சிலர் புலிகள் அமைப்பில் இருந்தவர்களாக இருக்கலாம். அதற்காக குழந்தைகளையும் பெண்களையும் முதியவர்களையும், போரில் ஊனமுற்றவர்களையம் ஒட்டுமொத்தமாக அப்படி வர்ணிப்பது "எதிர்" பயங்கரவாதமாகும். புலிகள் அமைப்பு குறித்த தமிழர்களின் கருத்தை புறந்தள்ளிவிட்டு பொதுவான ஒரு கண்ணோட்டத்தில் அணுகுவோம். புலிகள் அமைப்பு மே 18 முற்றாக தோற்கடிக்கப்பட்டு அதன் தலைவர், புலனாய்வுத்துறை தலைவர் மற்றும் இதர இராணுவ கட்டமைப்புக்களின் தளபதிகளை பொறுப்பாளர்களை கொன்று விட்டோம் என்று சிறீலங்கா அரசாங்கமே அறிவித்திருக்கிற சூழலில் புலிகள் எங்கிருந்து முளைத்தார்கள். முன்னுக்கு பின்னாக முரண்பாடான தகவல்களின் படி ஏறத்தாழ 12000 புலிகள் தடுத்து வைத்திருக்கப்படுவதாக வேறு கூறப்படுகிறது.
பொது மன்னிப்பு அளிப்பதாக கூறப்பட்ட ஒரு பேராளியாவது இன்றுவரை விடுதலை செய்யப்படவில்லை. சரணடைந்தவர்கள் படுகொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். எனவே விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்தவர்கள்கூட தம்மைப்பாதுகாக்க இப்படி வெளியேற வேண்டிய தேவை உள்ளது. சிறீலங்காவின் கூற்றுப்படியே பார்த்தால் அழிந்து போன தலைமையை அடுத்து செயற்பட முடியாத - செயற்பாடில்லாத இளநிலை போராளிகள் அவர்கள். இவர்கள் எப்படி "பயங்கரவாதிகள்" ஆக முடியும்.
இனப்படுகொலையில் இருந்து தப்பி வந்தவர்கள் மீது பொறுப்பற்ற விதத்தில் இப்படியான சொற்பிரயோகங்களை பாவிப்பதை மேற்குலக அதிகாரிகள் நிறுத்த வேண்டும். ஒரு கூட்டு மன அதிர்வுக்குள்ளாகி பேதலித்த நிலையில் உள்ள அவர்களது உளவியலை மேம்படுத்த வேண்டிய பெருங்கடமை சம்மந்தப்பட்ட நாடுகளுக்கு உள்ளது.
கேள்வி : சிறீலங்கா - குறிப்பாக பேராசிரியர் ரொகான் குணரத்தின இந்த கப்பல் விவகாரம் தொடர்பாக தொடாந்து கடுமையாக பேசியும் எழுதியும் வருகிறாரே....?
பதில் : உண்மையில் தமிழர்கள் அவர் மீது உடனடியாக ஒரு வழக்கை பதிவு செய்ய வேண்டும். எமது முரண்பாடுகள், குழு வாதங்கள் இப்படியான இராஜதந்திர செயற்பாடுகளுக்கு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது. அவர் தனது பேராசிரியர் பதவி மற்றும் பல்கலைக்கழக தொடர்புகளை வைத்து இனப்படுகொலையில் ஈடுபட்ட சிறீலங்கா அரசைக் காப்பாற்ற ழநெ அயn யசஅல போல் செயற்பட்டு வருகிறார். அதற்காக தனது பல்கலைக்கழக - பேராசிரியர் பதவிகளை துஸ்பிரயோகம் செய்து வருகிறார். பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு என்று ஒரு அறம் (நவாiஉள) இருக்கிறது.
அவர் அதை இம்மியளவும் கடைப்பிடிப்பது போல் தெரியவில்லை. ஒரு அரசியல்வாதியைப்போல், பரபரப்பான ஊடகவியலாளரைப்போல் கதைகளை திரித்த வண்ணமே இருக்கிறார். இதை அவர் பணிபுரியும் பல்கலைக்கழகத்திற்கு ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினால் அவர் வீட்டை போக வேண்டியதுதான். பல்கலைக்கழக பதவிகளுக்கு என்று சில விதிமுறைகள் இருக்கு. அவர் அந்த வட்டங்களுக்கு வெளியில் நிற்கிறார். பல்கலைக்கழக ஆய்வுகளுக்கு முரணான - எதிரான முறையில் பல தரவுப்பிழைகள் - ஊகத்தின் அடிப்படையிலான ஆதாரங்கள் என்று தனது கருத்தை நிறுவி சிறீலங்காவை இனப்படுகொலையில் இருந்து காப்பாற்ற முற்படுகிறார். புலத்தில் உள்ள தமிழர் தரப்புகள் உடனடியாக ஒரு வழக்கை பதிவு செய்ய வேண்டும்.
நாம் எமது உளவில் துறை சார்ந்து போரில் பாதிக்கப்பட்டு - இனப்படுகொலையைச் சந்தித்து பெரும் உளவியல் சிதைவுக்குள்ளாகியிருக்கும் மக்களை மேலும் உளவியல் சிதைவுக்குள்ளாக்குவதுபோல் பேசி வருகிறார் என்று வழக்கு பதிவு செய்வதற்கு முயன்று வருகிறோம். நாடு கடந்த தமீழீழ அரசோ அல்லது உலகத் தமிழர் பேரவையோ உடனடியாக ஒரு வழக்கை பதிவு செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தற்போதைய அகதிகள் விவகாரத்தில் மட்டுமல்ல வரும்காலங்களில் நடைபெறப்போகும் போர்க்குற்ற - இனப்படுகொலை விசாரணைகளிலும் இவரை வெளியில் விடுவது எமக்கு அனுகூலமானதாகும்.
கேள்வி : இறுதியாக என்ன கூற விரும்புகிறீர்கள்?
பதில் : நாம் மீண்டும் வீதியில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த அகதிகளின் பிரச்சினையை மையப் பிரச்சினையாக்கி நாம் போராட்டத்தை தீவிரப்படுத்துவதனூடாக எமது விடுதலைப் போராட்டத்தை வேறு ஒரு தளத்தை நோக்கி நகர்த்த முடியும். "இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்கள்" என்ற சொல்லாடலுடன் "கூட்டு அரசியல் தஞ்சம்" என்ற கருத்துருவாக்கத்தை மையப்படுத்துவதனூடாக தாயகத்தில் எமது இருப்பு தொடர்பான காத்திரமான சில செய்திகளை உலகுக்கு சொல்ல முடியும். கனடா வாழ் தமிழ் சமூகம் இந்த அகதிகள் தொடர்பாக எதிர்மறையான நடவடிக்கைகள் ஏதும் நடைபெற்றால் முன்பு போல் வீதியில் இறங்கி ஜனநாயக முறையில் தொடர்ந்து எதிர்ப்பை பதிவு செய்ய வெண்டும்.
இது நூற்றுக்கணக்கானவர்களுக்கான அரசியல் தஞ்சப் பிரச்சினை அல்ல. எமது அடையாளம் தொடர்பான பிரச்சினை. நாம் இனச்சுத்திகரிப்புக்குள்ளாகியிருக்கிறோம் என்பதை கவனப்படுத்துவதுடன் மௌனமாக உள்ள உலகத்தின் மனச்சாட்சிகளை உலுக்கும் நடவடிக்கை இது. எமது போராட்டத்தின் அடுத்த வடிவமும் இதுதான்.
குறிப்பாக கனடிய தமிழ் கொங்கிரஸ் உறுப்பினர்களது தீவிரமான செயற்பாடு குறித்து அறிந்தோம். சக தமிழர்களாக அவர்களது உழைப்புக்கும் முயற்சிக்கும் தலைவணங்குகிறோம். அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.
ஆய்வாளர் பரணிகிருஸ்ணரஜனி

Comments