கவிஞர், "தாமரை" அவர்களை பாராட்ட வார்த்தையில்லை

சீறும் பெண் சிறுத்தையாக ஆர்ப்பரித்து, உளப்பூர்வமாக துனது ஆதங்கத்தை, வெம்மையாக அடிவயிற்றிலிருந்து கொட்டித்தீர்த்த. சகோதரி "கவிஞர் தாமரை"அவர்களின் உணர்வு கொப்பளிக்கும் செவ்வி, திக்கெட்டும் பரவி தமிழர்தம் உள்ளங்களில் பாலெனப்பாய்ந்து என்றும் அழிக்க முடியாத கல்வெட்டாக ஈழ்த்தமிழினத்தை நெகிழ்த்திவிட்டது,

சகோதரி தாமரையின் தன்மானத்தின் உணர்ச்சிப்பெருக்கு, மட்டில்லா மகிழ்ச்சியையும் மாறா நெருக்கத்தையும் எங்கள் முன் இரட்டிப்பாக்கியது,

'நன்றிகள்' என்று கூறி அவரை பிரித்துப்பார்க்க எங்களால் ஒருபோதும் முடியாதது, முடியவுமில்லை.

நன்றியென்பது கடமை முடிந்துவிட்டதற்கு கொடுக்கும் கைமாறாக நாங்கள் கருதுகிறோம்.

அவர்தம் திறந்த மனதுக்கும் இன உணர்வுக்கும், எமது சிறிய அசைவையேனும் மகிழ்ச்சி மூலம் காட்ட கடமைப்பட்டிருக்கிறோம்.

தமிழ்நாட்டின் குமுறலையும், ஆட்சியாளர்களின் முகமூடியையும் படம்பிடித்துக்காட்டியது, அவர் இன்றுமட்டுமல்ல என்பதும்
எல்லோரும் அறிவர்.

முள்ளிவாய்க்கால் எரிந்தபோது அவர் திட்டித்தீர்த்த கவிதைவரிகள் ஈழத்தமிழனின் நரம்புகளுக்குள் புகுத்தப்பட்ட வெப்பக்குருதி.

சகோதரன் சீமானின் வெஞ்சினத்திற்கு மாற்றில்லாமல், சகோதரி தாமரையும், தமிழகத்தை திருப்பிப்போடும் நட்சத்திரங்கள் என்றேகொண்டு,
ஈழவாழ் தமிழினமும், புலம்பெயர்ந்த தமிழுறவுகளும், ஈழதேசம் இணையமும், ஈரமான மகிழ்ச்சியுடன் கை கோர்த்துக்கொள்ளுகின்றன.

சகோதரி தாமரைக்கு நன்றி, வாழ்த்துக்கள், என்று கூறவேண்டும்போலத்தோன்றினாலும், இங்கு அந்த வரிகள் சபிரதாயத்திற்கு
சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால் "மிக்க மகிழ்ச்சி" என்பது அவருக்குரியது,
என்றென்றும் மகிழ்ச்சியுடன் இருகரம் பற்றி உங்களுடன் இணைந்திருப்போம்.

மிகுந்த ஈடுபாட்டுடன்.
ஈழமக்களோடு, புலம்பெயர்சமூகமும்,
புலம்பெயர் படைப்பாளிகளும்,
ஈழதேசம் இணையத்தளமும்,

Comments

Sagothari Thamarai avargalukku en mariyadhai kalandha vanakkam