இலங்கை பயணித்தவர்களை வைத்து அகதி அந்தஸ்து கோருவோரை மிரட்டும் இலங்கை அரசு

கனடா நாட்டில் உள்ள 70% சதவீதமான கனேடிய குடியுரிமை பெற்ற தமிழர்கள் இலங்கைக்கு பயணித்து திரும்பியுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

புள்ளிவிபரங்களோடு இந்த அறிக்கையை கனேடிய அரசிடம் சமர்ப்பிக்க இலங்கைத் தூதரகம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது.

இதன் மூலம் ஒரு காலத்தில் இலங்கையில் இருக்க முடியாது என்றுசொல்லி கனடாவில் அரசியல் தஞ்சம்கோரிய தமிழர்கள் எவ்வாறு இலங்கை சென்று

வருகிறார்கள் என்ற கேள்வியை அது எழுப்பியுள்ளது. அப்படியாயின் அவர்கள் பொய்யுரைத்தே தமது அகதி விண்ணப்பங்களைக் கோரியுள்ளதாக இலங்கை அரசு

குற்றம்சாட்ட முற்படுகிறது.

இது இவ்வாறு இருக்க, தற்போது நிலமை சீரடைந்து உள்ளதால் நாம் இலங்கை பயணிக்கிறோம் என்று சில தமிழர்கள் கூறுவதால், தற்போது நிலமை சீராக

உள்ளதாகவும், அதனால் கப்பல்களில் வந்து அரசியல் தஞ்சம்கோரும் எவருக்கும் கனடா அரசியல் தஞ்சம் கொடுக்கக்கூடாது என்றும் இலங்கை அரசு

வலியுறுத்தியுள்ளது. கடந்த காலத்தில் கனடாவுக்கு அகதிகள் செல்வது அதிகரித்துள்ள நிலையில், இது குறித்து கனடா அரசை விட இலங்கை அரசே பெரும்

கவலையடைகிறது. இதன் காரணம் மிகவும் புதிராக உள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

இறுதிப்போரில் தப்பிய பல விடுதலைப் புலிகளே இவ்வாறு செல்வதாக அரசு கூறுகிறது, மற்றும் அகதிகள் தொடர்ந்தும் கனடாவுக்கு செல்வதால் இலங்கையில்

இன்னும் நிலமை சீராகவில்லை என்பது சர்வதேசத்திற்கு உணர்த்தப்படுகிறது. அதுமட்டுமல்லாது கனடாவில் சுமார் 3 லட்சத்துக்குமேல் தமிழர்கள்

வாழ்கிறார்கள், இன்னும் சில வருடங்களில் அது பன்மடங்காகப் பெருகும் நிலை இருப்பதால், கனடாவின் தேசிய இனங்களில் ஒன்றாக தமிழினமும் உருவாகும்

நிலை காணப்படுகிறது. இதனைத் தடுத்து நிறுத்தவும் கனடாவுக்கு மேலதிக தமிழர்கள் செல்லாது கனடா அரசை தூண்டிவிட்டு தமிழர்களுக்கு எதிரான ஒரு

பரப்புரையை மேற்கொள்ள இலங்கை அரசு முயல்கிறதா? மற்றும் விடுதலைப் போராட்டம் மீண்டும் தலைதூக்காமல் இருக்க, நிதி சேகரிக்கப்படும் நாடுகளைக்

குறிவைக்கும் இலங்கை அரசு, இவ்வாறானதொரு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதா என பல கேள்விகள் இங்கு எழுகின்றன.

சமீபத்தில் சென்ற அகதிகள் உண்மையாகவே பாதிக்கப்பட்ட அகதிகள்தான் என கனடா அரசும், பத்திரிகைகளும் தெரிவித்துள்ள நிலையில் இலங்கை அரசின்

இப் பொய்பரப்புரைகள் முறியடிக்கப்படவேண்டியவை. அதை கனேடிய தமிழர்கள் திறமையாகக் கையாளவேண்டும்.

Comments