கேபி நிற்கும் பாதையில் இருந்து விலகி எமது பயணத்தை தொடர்வதே புத்திசாலித்தனம்

இன்போதமிழ் குழுமத்தோடு நாம் பல விடயங்களில் முரண்பட்டாலும்

சில விடயத்தோடு உடன்படுவதால் இக்கட்டுரையை பிரசுரிக்கின்றோம்

ஆனாலும் சில கேள்விகள் தொக்கிநிற்கின்றன.............. ???

நமக்கு பலமாக விளங்கிய புலிகளின் பிரசன்னமோ வழிகாட்டலோ இல்லாத போது துரோகங்களுக்கு எதிர்வினை யாற்றுவது எப்படி ?

மக்களாகவே கண்டு கொள்வார்கள் என்று விட்டுவிடாலாம் என்றால் யாரும் பிரச்சாரம் செய்யத்தேவையில்லை !

அப்படித் தமிழ்மக்கள் கண்டு கொள்ளப்போவது ஒரு போதும் நடைபெறப்போவதும் இல்லை அப்படிக் கண்டு கொண்டதாக வரலாறும் இல்லை !

நாம் அடிக்கடி கூறிவந்தோம் புலிகளின் அழிவும் பிரசன்னம் இல்லாமையால் எல்லாவற்றையும் மக்களுக்கு அறியத் தாருங்கள் என்று அப்படி அனைத்துலகத் தொடர்பகத்தால் எதுவும் அறிவிக்கப்படவில்லை !

இப்போது அனைத்துலகத்திலிருந்து பிரிந்து கூத்தாடுபவர்களாலேயே எதிரும் புதிருமான அறிக்கைகளும் காட்டிக்கொடுப்புக்களும் புதிது புதிகாக வலம் வந்து கொண்டிருக்கின்றன !

புலிகள் பலமான கட்டமைப்பாக இருந்ததனால் அப்போதைய துரொகங்களை மாத்தையா முதல் கருணா வரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை அவர் பற்றிய பேட்டிகளிலும் அது பற்றி நேரத்தை விரயமாக்க விரும்பில்லை என்று சொன்னார்கள்

ஆனால்

கருணாவை மன்னித்து விடவில்லை அவருக்கு காலம் குறித்து காத்திருந்தார்கள் !

ஆனால் இப்போது அப்படி இல்லாத தற்போத நிலையில்

கேபி முதல் நடைபெறும் துரோகங்களை அதை அறிந்தவர்கள் மக்களுக்கு பகிரங்கப்படுத்துவதில் தவறென்ன ?

கேபி யை சந்தித்து வந்த அருவருடிக்களின் உண்மை முகங்களை அம்பலப்படுத்தியதில் இருந்து கேபியின் பல நடவடிக்கைகளை முறியடித்ததில் இவர்களின் பங்கிருப்பதாகவே தெரிகின்றது !!

இப்போது காலத்தின் தேவை

நீங்கள் அனைவரும்

பிரிந்து நின்று கூத்தாடிக் கோஷமிடுவதை விடுத்து மாவீரர்களின் கனவை நனவாக்குங்கள்.

ஒன்று பட்டு செயற்படுங்கள் !!!!!!!
இல்லாவிட்டால் ஒதுங்கியிருங்கள் !!!!
காலம் வழிகாட்டும் தமிழர்களுக்கு !!!!!!!!

இனிக் கட்டுரைக்கு ..........




"..மண்ணின் கீழ் இருக்கும் வேர் போல வெளியே தெரியாதளவுக்கு கே.பி செயற்பட்டவர் என்று நாம் முன்னைய தொடரில் கூறியிருந்தோம். அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அது அவரது கடந்த காலப் போராட்டப் பங்களிப்பு.

அதற்காக அவரது இன்றைய நிலைப்பாடுகளை நாம் ஏற்றுக் கொண்டவர்களாகி விட முடியாது. இப்போது அவர் தமீழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்தக் கூடிய ஒருவராக இல்லை- அது தெளிவு.

ஆனால் அவர்மீது குற்றங்களைச் சுமத்துவோர் புனிதமான மனிதர்கள் அல்ல என்பதும் எமது தெளிவான நிலைப்பாடு கே.பி நல்லவரா கெட்டவரா- துரோகியா தியாகியா என்றெல்லாம் ஆராய்ச்சியை செய்து கொண்டிருப்பதால் நமக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை.

அவர் நிற்கும் பாதையில் இருந்து விலகி எமது பயணத்தை தொடர்வதே புத்திசாலித்தனம். அப்படி நடந்தால் அவரால் தடைக்கல்லைப் போட முடியாது.

அவரை அல்லது அவரது பெயரை வைத்துக் கொண்டு சிங்கள அரசு மேற்கொள்ளும் பிரதான நடவடிக்கை தமிழ் மக்களின் ஒற்றுமையைக் குலைப்பது தான். அந்தக் காரியத்தைச் சிங்களதேசமே சரியாகச் செய்கிறதோ இல்லையோ- எம்மவர்களே வலிந்து போய்த் தலையைக் கொடுத்து நிறைவேற்றிக் கொடுக்கிறோம்.

இதை நாங்கள் சொல்வதனால் எம்மை நாம் நியாயப்படுத்த முற்படுகின்றோம் என்ற கருத்துக்கூட எழலாம். ஆனால் உண்மைகள் என்றும் பிடிவாதமனவை...................."

“ஈனப் பிறவிகள் சிலர் இனத்தை விற்கினும் மானத் தமிழர் நாம் மண்டியிட மாட்டோம்”

- இன்போதமிழ் குழுமம் -

இனி விடையத்துக்கு வருவோம்,

முள்ளிவாய்க்கால் அழிவுகளின் பின்னர் நாம் தவறவிட்ட வாய்ப்புகள் எம்மை அழிவுகளை நோக்கியே தள்ளிக் கொண்டிருக்கின்றன.

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உயிர் கொடுக்க முயன்றவர் கே.பி.

புலிகள் இயக்கம் நெருக்கடிகளைச் சந்தித்த பல தருணங்களில் அவரது திறமையான செயற்பாடுகள் விடுதலைப் போராட்டத்தைக் காப்பாற்றியது.

முள்ளிவாய்க்காலில் எல்லாமே முடிந்து போய்விட்டது என்று எண்ணிக் கலங்கிக் கொண்டிருந்த தமிழர்களுக்கு கொஞ்சமாவது நம்பிகையைக் கொடுத்தவர் கே.பி.

அவர் சிங்கள அரசால் சிறைபிடிக்கப்பட்ட பின்னர் ஏதேதோவெல்லாம் நடந்தேறி விட்டது.

இப்போது அவர் சிங்கள அரசின் கட்டளைக்கு ஏற்ப இயங்கும் பொம்மைக் கைதியாக மாற்றப்பட்டுள்ளார்.

இது அவராக விரும்பியே ஏற்றுக் கொண்டது என்ற விமர்சனங்கள் புலம்பெயர் நாடுகளில் இருந்து வந்து கொண்டிருக்கின்றன.

மண்ணின் கீழ் இருக்கும் வேர் போல வெளியே தெரியாதளவுக்கு அவர் செயற்பட்டவர் என்று நாம் முன்னைய தொடரில் கூறியிருந்தோம். அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அது அவரது கடந்த காலப் போராட்டப் பங்களிப்பு.

அதற்காக அவரது இன்றைய நிலைப்பாடுகளை நாம் ஏற்றுக் கொண்டவர்களாகி விட முடியாது.

* [ கே.பி கைதாகிய 2009 ஓகஸ்ட் மாததிலிருந்து எமது நிலைப்பாடு இதுவாகவே இருந்தது. ஆனால் அவர்மீது குற்றங்களைச் சுமத்துவோர் புனிதமான மனிதர்கள் அல்ல என்பதும் எமது தெளிவான நிலைப்பாடு. அதனால் தான் நாம் மீள எழுதல் என்பதற்கான கருத்துப்போர் புரிந்தோம். இதுவே எமது நிலைபாடாக அமைந்தது.இந்த நிலைப்பாட்டில் நாம் இன்றும் தெளிவாகவே உள்ளோம்]

கே.பி சிங்கள அரசுடன் ஒத்திசைந்து நடந்து கொள்கிறார் என்பதை உணரமுடிகின்றது.

இப்போது அவர் தமீழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்தக் கூடிய ஒருவராக இல்லை- அது தெளிவு.

இந்தநிலையில்,

* சிங்கள தேசத்திலும் சரி – புலம்பெயர் தேசங்களிலும் சரி உள்ள ஊடகங்கள் எல்லாமே கே.பியைப் பற்றியே செய்திகளை வெளியிடுகின்றன. அவருக்கு எதிரான பிரசாரம் என்ற வகையில் கட்டுரைகளாக எழுதித் தள்ளுகிறார்கள்.

* சிலர் கடிதங்களாக எழுதுகிறார்கள்

ஆனால் இது அவசியமானதொன்று தானா? என்ற கேள்வி இப்போது வருகிறது.

கே.பி தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரையில் முடிந்து போன ஒரு அத்தியாயம்.

இப்போது அவர் அதிலிருந்து ஒதுங்கி நிற்கும் ஒருவராகி விட்டார்.

இந்த நிலையில் தமிழ் ஊடகங்கள் அவருக்கு எதிரான பிரசாரத்துக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவம் அவரை இன்னமும் பிரபலப்படுத்தவே உதவப் போகிறது.

இதன் மூலம் அவர் மீது தமிழ் மக்களிடையே காழ்ப்பை- வெறுப்பை உருவாக்கப் போவதில்லை.

அப்படி கே.பி மீது காழ்ப்பை - வெறுப்பை புலம்பெயர் மக்களிடையே ஏற்படுத்துவதன் மூலம் இன்று சாதிக்க கூடியது ஒன்றும் இல்லை.

கே.பியைப் பொறுத்தவரையில் சிங்கள தேசத்திலுள்ள ஊடகங்களே அவருக்குப் போதிய பிரசாரத்தை தேடிக் கொடுக்கின்றன.

இந்தநிலையில் புலம்பெயர் ஊடகங்கள் அவருக்கு எதிரான பிரசாரம் என்ற மாயைக்குள் சிக்கிப் போயுள்ளன.

தமிழ் ஊடகங்களின் அடிப்படை நோக்கத்தை மறந்து நிற்கின்றன.

புலிகள் இயக்கத்தில் மாத்தயாவின் பிரச்சினை வந்தபோது அதைப் புலிகளின் அதிகாரபூர்வ ஊடகங்களிலோ, தாயக ஊடகங்களிலோ செய்தியாக வரவேயில்லை.

அதுபோல அவருக்கு எதிரான பிரசாரம் கட்டவிழ்த்து விடப்படவும் இல்லை.

கருணாவின் பிளவு ஏற்பட்டபோதும் அதிகாரப்பூர்வ ஊடகங்களில் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

கருணாவின் ஒரு சில நகர்வுகளை முறியப்பதற்கு மட்டுமே புலிகளின் வளங்கள் பயன்படுத்தப்பட்டனவே தவிர, அதையே முழுநேர வேலையாகச் செய்யவில்லை.

ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை.

மாத்தயா ,கருணா போன்றவர்களின் வரிசையில் கே.பி இடம்பிடிக்கிறாரா இல்லையா என்பதையெல்லாம் தீர்மானிக்கப் போவது காலம் தான்.

கே.பி தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இருந்து விலகி நிற்கும் நிலையில் அவருக்கு எதிரான பிரசாரங்களையே முழுநேர வேலையாக புலம்பெயர் ஊடகங்கள் பலவும் மேற்கொள்கின்றன.

இந்தக் கட்டத்தில் நாம் அடிப்படை இலட்சியத்தையும்- அதை நோக்கிய பயணத்தையும் மறந்து கே.பியின் தலை எங்கே, வால் எங்கே என்று தேடிக் கொண்டிப்பது முட்டாள்தனம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கான முயற்சிகளை கைவிட்டு- கே.பியை தூற்றுவதிலேயே காலத்தை கழித்தால், போராட்ட இலட்சியத்தை எப்படி வென்றெடுக்க முடியும்?

முள்ளிவாய்க்கால் பேரழிவு மட்டுமன்றி அதற்கு முந்திய வரலாறும் எமக்குப் பல பாடங்களைக் கற்பித்திருக்கின்றன.

ஆனால் நாம் அதிலிருந்து பாடம் கற்கத் தவறியுள்ளோம் என்பதையே கே.பி விவகாரமும் எடுத்துக் காட்டுகிறது.

கே.பி நல்லவரா கெட்டவரா- துரோகியா தியாகியா என்றெல்லாம் ஆராய்ச்சியை செய்து கொண்டிருப்பதால் நமக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை.

அவர் நிற்கும் பாதையில் இருந்து விலகி எமது பயணத்தை தொடர்வதே புத்திசாலித்தனம். அப்படி நடந்தால் அவரால் தடைக்கல்லைப் போட முடியாது.

அவரை அல்லது அவரது பெயரை வைத்துக் கொண்டு சிங்கள அரசு மேற்கொள்ளும் பிரதான நடவடிக்கை தமிழ் மக்களின் ஒற்றுமையைக் குலைப்பது தான்.

அந்தக் காரியத்தைச் சிங்களதேசமே சரியாகச் செய்கிறதோ இல்லையோ- எம்மவர்களே வலிந்து போய்த் தலையைக் கொடுத்து நிறைவேற்றிக் கொடுக்கிறோம்.

இதை நாங்கள் சொல்வதனால் எம்மை நாம் நியாயப்படுத்த முற்படுகின்றோம் என்ற கருத்துக்கூட எழலாம். ஆனால் உண்மைகள் என்றும் பிடிவாதமனவை.

எனவே,

தேசிய ஒற்றுமைக்கு பாடுபடுபவனது செயலுக்கு எதிரியின் எண்ணத்திற்கேற்ப செயற்படுபவனாலும், சுயநலவாதியாலுமே எதிர்ப்பும் குழப்பமும் ஏற்படுத்தப்படும் என்பதை நாம் அறிதலும் புரிதலும் அவசியமாகின்றது

முள்ளிவாய்க்கால் அழிவுகளின் பின்னர் நாம் தவறவிட்ட வாய்ப்புகள் எம்மை அழிவுகளை நோக்கியே தள்ளிக் கொண்டிருக்கின்றன.

முள்ளிவாய்க்காலுடன் தமிழரின் அழிவுகளுக்கு முடிவு கிடைத்து விடவில்லை- அது அங்கே தான் ஆரம்பமாகியிருக்கிறது.

மீண்டும் சந்திப்போம்

தொல்காப்பியன்
- இன்போதமிழ் குழுமம் -

Comments