கனடாவிற்கு அகதிகளின் உருக்கமான கடிதம் !

வன்கூவர். பிரிட்டிஸ் கொலம்பியா

பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரையை வந்தடைந்திருக்கும் தமிழர்கள் தாங்கள் இலங்கையில் நடக்கும் படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் போன்றவற்றில் இருந்து தப்புவதற்காகவே இங்கு தஞ்சம் அடைந்துள்ளதாகக் கூறும் கடிதங்களை வெளியிட்டுள்ளனர்.

Canadian Border officials and police stand the deck of the MV Sun Sea (C) as it is guided into Canadian Forces Base Esquimalt with an estimated 490 suspected Tamil migrants on board in Colwood, B.C. on Vancouver Island Aug. 13, 2010.
வன்கூவரின் அருகில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு தொகுதி குடிவரவாளர்களினால் எழுதப்பட்டு நஷனல் போஸ்;ட் பத்திரிகைக்கு கிடைத்துள்ள கடிதங்களில் தாங்கள் கனடாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தங்களைப் பற்றிய பொய்யான பரப்புரையை சிறிலங்கா அரசாங்கம் செயது வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

'நாங்கள் ஓர். போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் என்பதை கனடிய அரசும் அதன் மக்களும் நம்பும்படி கேட்டுக் கொள்கிறோம்' என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'நாங்கள் தீவிரவாதிகள் அல்ல என கூறுகிறோம். மேலும் கனடிய சட்டத்துக்கு அமைய கீழ்ப்படிவாக வாழ்வோம் என்பதையும் கூறுகின்றோம்.'

இரண்டாவதாக 'சன் சீ கப்பலில் உள்ள தமிழர்கள்' எனக் கையெழுத்திடப்பட்ட ஒரு கடிதத்தில் தாங்கள் மிக மிக அவலப்பட்டு, உணவு, தண்ணீர், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி, படுக்கை போன்ற அத்தியாவசிய அடிப்படை வசதிகள் ஏதுமற்றவர்களாக மொத்த நிலையில் நான்கு மாதங்களை அண்மித்த கடுமையான, கொடுமையான துன்ப நிலையில் பயணித்து வந்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்

'குடியேறிவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களை அரவணைத்துக் கொண்ட தாங்கள் இந்த ஏதிலிகளையும் ஏற்றுக் கொள்வீர்கள் என்ற முழுமையான நம்பிக்கையுடன் இந்த நாட்டுக்கு முழுமையான அர்ப்பணிப்புடன் சட்டம், ஒழுங்கு விதிகளின்படி நடந்து கொள்வோம் என உறுதியளிக்கிறோம்'

இவையே மே மாதம் தாய்லாந்து வளைகுடாவில் இருந்து புறப்பட்டு கனடாவின் மேற்குக் கடற்கரையில் கடந்த கிழமை வந்திறங்கிய 492 அகதிகளின் முதலாவது வாக்குமூலங்களாக வெளிவந்துள்ளன.

இவர்கள் அனைவரும் இலங்கையைச் சேரந்;த தமிழர்கள் என்று நம்பப்படுகின்றது. மாநில சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இவர்களைச் சந்தித்தவர்களின்படி இவர்களில் சிலருக்கு போர்க் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இருவர் கற்பிணித் தாய்மார்களாக உள்ளனர். 70 வயதுகளைத் தாண்டிய ஒரு இணையரும் இரண்டு ஊடகவியலாளர்களும் உள்ளனர். 37 வயது ஆண் கடலில் சுகவீனமுற்று இறந்துள்ளார்.

அவர்களின் 59 மீட்டர் நீளமான சரக்குக் கப்பலின் தளத்தின் மேல் கொட்டகையிட்டு அதற்குக் கீழ் படுத்திருந்ததாகவும் ஒரு கழிவறையை 50 பேர் பயன்படுத்தியதாகவும் தங்களுக்குள் லட்டு செய்து பரிமாறியதாகவும் மழைத்தண்ணீரில் தேநீர் செய்து அருந்தியதகாவும் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்கள் குறிப்பிட்டனர்.

'என்னுடைய கணவரையும் மகனையும் விட்டு இந்த வேதனையை அனுபவித்துப் பயணம் செய்து இலங்கையில் உள்ள நரக வாழ்வில் இருந்து தப்பி வந்தேன்' என அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பெண் குறிப்பிட்டார்.

கனடிய எல்லைச் சேவைகள் முகவம் வந்திறங்கியவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதோடு அவர்களில் முன்னாள் தமிழ்ப் புலிப் போராளிகள் உள்ளார்களா என்பதையும் உறுதிப்படுத்த முயல்கிறது. பொதுநல பாதுகாப்பு அமைச்சர் விக் ரோவ்ஸ் கப்பலில் முன்னாள் போராளிகள் வந்திருக்கலாம் என நம்பப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.

புலிகள் அமைப்பின் நிதி சேகரிப்பு நடவடிக்கையாகவே இந்த கப்பல் உள்ளது என அமைச்சர் குறிப்பிட்டிருந்ததாக நசனல் போஸ்ட் கடந்த கிழமை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் ஆளுக்கு 40,000 தொடக்கம் 50,000 வரையிலான பணத்தைப் பெற்றுக்கொண்டு கப்பலுக்கு 1 மில்லியன் மாத்திரமே கொடுத்திருப்பார்கள். இதன் படி அவர்களுக்கு 20 மில்லியன் டொலர்கள் வரை இலாபம் வரக் கூடும். இதற்கு கனடா எந்த வகையான நடவடிக்கை எடுக்கும் என்பதை இந்த ஆட்கடத்தல்காரர்கள் வலுவாக அவதானிப்பதாகவும் மேலும் கப்பல்கள் வரக்கூடும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

RCMP யினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கப்பலில் வந்திறங்கியவர்களின் கடிதங்களின்படி இலங்கையில் இன்னமும் தமிழர்களுக்கு துன்பகரமான நிலையே நீடிக்கின்றது. அரச படைகளுக்கு தமிழ்ப் போராளிகளுக்கும் இடையில் நடந்த மிக நீண்ட போரில் இருந்து இலங்கை தற்போது மீண்டு கொண்டிருக்கிறது.

'இலங்கை அரசு இலங்கையில் இனப்பிரச்சனை தீர்ந்து விட்டது என்கிறது. ஆனால் அங்கு அவசரகாலச் சட்டங்களோ, பயங்கரவாதச் சட்டங்களோ அகற்றப்படவில்லை.' என ஒரு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 'தடுப்புக் காவலில் உள்ள அப்பாவி அரசியல் கைதிகள் விடுபடவில்லை. இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக மீளக் குடியமர்த்தப் படவில்லை. இதற்கு மாறாக, ஆட்கடத்தல்களும், படுகொலைகளும் தொலைபேசி மிரட்டல்களும் நடைபெறுகிறது.' எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நசனல் போஸ்ட்

கடிதம் 1:

இலங்;கையிலிருந்து கனடா நோக்கி வந்தடைந்த (கப்பல்) ஈழத்தமிழர் சார்பான பொதுக் கருத்துக்கள் எமது கருத்துக்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கனடிய அரசு, கனடிய மக்கள், பத்திரிகையாளர்கள், மற்றும் தமிழர் பேரவை மற்றும் ஏனையோருக்கும் நாம் கூறுவது என்னவெனில்:

1. முதலில் கனடிய அரசுக்கும் கனடிய மக்களையும் நாம் இருகரம் கூப்பி வணங்கி நன்றி கூறுகின்றோம். ஆதாவது பசுபிக் சமுத்திரத்தில் நாம் நின்று கொண்டு 'நாம் இலங்கை அகதிகள் எங்களைக் காப்பாற்றுங்கள்' என்றதும் உடனடியாக விரைந்து வந்து எங்களைக் காப்பாற்றி உணவு, தண்ணீர், பழங்கள், இனிப்புகள், பிஸ்கற் ஆபத்திலிருந்து மீட்டுள்ளது உயிருக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளது.

2. இலங்கை அரசு இலங்கையில் இனப்பிரச்சனை தீர்ந்து விட்டது என்கிறது. ஆனால் அங்கு அவசரகாலச் சட்டங்களோ, பயங்கரவாதச் சட்டங்களோ அகற்றப்படவில்லை. தடுப்புக் காவலில் உள்ள அப்பாவி அரசியல் கைதிகள் விடுபடவில்லை. இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக மீளக் குடியமர்த்தப் படவில்லை. இதற்கு மாறாக, ஆட்கடத்தல்களும், படுகொலைகளும் தொலைபேசி மிரட்டல்களும் நடைபெறுகிறது. மேலும், இலங்கை அரசு தனது தனிப்பட்ட நலனுக்காக உலக ரீதியில் பொய்பிரச்சாரம் செய்கிறது.

3. நாங்கள் ஓர். போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் என்பதை கனடிய அரசும் அதன் மக்களும் நம்பும்படி கேட்டுக் கொள்கிறோம். மேலும் கனடிய சட்டத்துக்கு அமைய கீழ்ப்படிவாக வாழ்வோம் என்பதையும் கூறுகின்றோம். நாங்கள் தீவிரவாதிகள் அல்ல என கூறுகிறோம்.


கடிதம் 2:

கனடா அரசாங்கம், மக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் 'சன் சீ' கப்பலில் வந்து இங்கு அகதிகளாகத் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் மக்களாகிய நாம் கேட்டுக் கொள்வது மற்றும் தெரிவித்துக் கொள்வது:
மிக மிக அவலப்பட்டு, உணவு, தண்ணீர், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி, படுக்கை போன்ற அத்தியாவசிய அடிப்படை வசதிகள் ஏதுமற்றவர்களாக மொத்த நிலையில் நான்கு மாதங்களை அண்மித்த கடுமையான, கொடுமையான துன்ப நிலையில் பயணித்து வந்துள்ளோம். ஏனெனில் நாம் பிறந்த மண்ணில் இதுவரை நடந்து கொண்டிருக்கும் கொலை, ஆட்கடத்தல், வன்முறைப் பிரயோகம் போன்ற கொடுமைகளிலிருந்து எம்மைப் பாதுகாத்து எமது மற்றும் எம்மைச் சார்ந்தோரின் உயிரை உத்தரவாதப் படுத்துவதற்காகவே இந்த உன்னத நாடாகிய கனடா வந்துள்ளோம்.

குடியேறிவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களை அரவணைத்துக் கொண்ட தாங்கள் இந்த ஏதிலிகளையும் ஏற்றுக் கொள்வீர்கள் என்ற முழுமையான நம்பிக்கையுடன் இந்த நாட்டுக்கு முழுமையான அர்ப்பணிப்புடன் சட்டம், ஒழுங்கு விதிகளின்படி நடந்து கொள்வோம் என உறுதியளிக்கிறோம் - சன் சீ கப்பலில் வந்த தமிழ் மக்கள்

சிறுவர்களையும் அவர்களின் தாய்மாரையும் விரைவாக விடுதலை செய்யும் பணியை கனடிய தமிழர் பேரவை மேற்கொள்கின்றது

16.08.2010

இலங்கையிருந்து, தழிழ் அகதிகளை ஏற்றிவந்த 'சண்சீ' கப்பல் கனடாவின் பிறிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தின் கடற்கரையை நான்கு தினங்களுக்கு முன் வந்தடைந்தமை யாவரும் அறிந்ததே. இந்நிலையில் கனேடிய சட்டத்திற்கு அமைய, தமிழ் அகதிகள் தமது அடையாளத்தை நீருபிக்கும் நோக்கோடு, தற்சமயம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.

கனடாவிற்கு அகதிக்கோரிக்கை கேட்டு வந்தவர்களில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உள்ளடங்குவர். தற்சமயம் கனடிய தமிழர் பேரவை இவர்களில் கணிசமான எண்ணிக்கையானவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி, கனடாவில் அகதிநிலை கோருவோரின் உரிமைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் பற்றிய விளக்கங்களை வழங்கியுள்ளது. அத்தோடு, குறிப்பாக சிறுவர்களையும் அவர்களின் தாய்மாரையும் விரைவாக விடுதலை செய்யும் பொருட்டு அதற்கான பணிகளை மேற்கொள்வதில் கனடிய தமிழர் பேரவை அயராது உழைத்து வருகின்றது.

புதிதாக வந்தவர்களால், கனேடிய அரசாங்கம் பொதுமக்கள் ஊடகங்கள் மற்றும் கனடிய தமிழர் பேரவை போன்றவற்றிற்கு எழுதி அனுப்பட்ட இரண்டு கடிதங்கள் இன்றைய தினம் கனேடிய தேசியப்பத்திரிகைகளில் ஒன்றான நைசினல் போஸ்றில் வெளியிடப்பட்டுள்ளது. கடிதங்களின் விபரங்களை கீழே பார்வையிடலாம்.

(கடிதம் - 1)

'நாங்கள், இலங்கையில் ஏற்பட்ட கொடிய போரினால் பாதிக்கப்பட்டு அங்கிருந்து கனடாவிற்கு தப்பி வந்து, அடைக்கலம் கோரி நிற்கும் நியாயமான அகதிகள். கனேடிய அரசாங்கம் மற்றும் பொது மக்களை எம்மீது நம்பிக்கை வைக்கும் படி கேட்கிறோம். நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல. அத்தோடு இந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைய நடப்போம் என்பதனையும் அறியத்தருகின்றோம்.'



(கடிதம் -2)

'நாங்கள் இலங்கையில் ஏற்பட்ட கொடிய போரில் சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்துள்ளோம். அங்கு அடிப்படைத் தேவைகளாகிய உணவு, உடை, இருப்பிடம் மற்றும் மருத்துவ சுகாதார வசதிகள் போன்றவை பூரணமாக பெறமுடியாத நிலையில் பெரிதும் அல்லல்பட்டுள்ளோம். தற்சமயம் எமது உயிரைப்பாதுகாப்;பதற்காக நான்கு மாதங்களாக ஆழ்கடலில் பல இடையூறுகள் மத்தியில் நிச்சயமற்ற ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளோம். இலங்கையில் இப்போதும் நடந்தேறிக்கொண்டு இருக்கும் கொலைகள், கடத்தல்கள், பயங்கரவாதச் செயல்களில் இருந்து எம்மையும் எமது குடும்பத்தினரையும், பாதுகாத்துக்கொள்ளும் ஒரே நோக்கத்தோடு கனடா மண்ணில் காலடி எடுத்து வைத்துள்ளோம்.

காலகாலமாக குடியுரிமை மற்றும் அகதி நிலை கோரி வந்தோரை கனடா அதன் இருகரம் நீட்டி அரவணைத்துள்ளது. அதே போல் கனடாவில் அகதிநிலை கோரி நிற்கும் எம்மையும் கனடா ஏற்றுக்கொள்ளும் என நம்புகின்றோம். கனேடிய சட்டதிட்டங்களுக்கேற்ப நாம் செயற்படுவோம் என நாம் முழு மனதோடு உறுதி கூறுகின்றோம்.'

கனடிய தமிழர் பேரவை உறுப்பினர்கள், கனேடிய சமூகத்தில் இருந்துவரும் பல கேள்விகளுக்கு தம்மாலான பதில்களை வழங்கிவருகின்றார்கள். உதாரணமாக கனடா வாழ் தமிழர்களின் உறவினர்கள் அல்லது குடும்ப அங்கத்தவர்கள் 'சண்சீ' கப்பல் மூலம் கனடாவிற்கு வந்தடைந்துள்ளார்களா? மற்றும் கனடா வாழ் தமிழர்கள் எந்த வழிகளில் இந்த விடயத்தில் உதவ முடியும் போன்றவற்றை குறிப்பிடலாம். கனடிய தமிழர் பேரவை 'சண்சீ' கப்பலில் வந்திருப்பவர்களை கனடா வாழும் அவர்களின் உறவுகளோடு தொடர்பு படுத்தும் முயற்சியாக கப்பலில் வந்தவர்களின் தகவல்களை சேகரித்து வருகின்றது. இத்தோடு கனடா வாழ் தமிழ்க் குடும்பங்களோடு தொடர்பு கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள், பற்றியும் மற்றும் சட்டரீதியான விளக்கங்களையும் வழங்கிவருகின்றது.

மேலும் பாதுகாப்பு அமைச்சர் குளோபல் அன் மெயில் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கனேடிய தமிழர்கள் சண்சீ கப்பல் மூலம் வந்தவர்களுக்கு நிதியுதவி வழங்கியிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற மேற்குறிப்பிட்ட கருத்துக்கள், கனடிய தமிழர் சமூகத்தின் மேலுள்ள கனடாவின் பார்வையை பாதிக்கலாம் என்ற ஐயத்தை கனடிய தமிழர் பேரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆங்கிலத்தில்.........

Comments