சுமார் 490 இலங்கை அகதிகளை ஏற்றிய எம் வி சண் சீ கப்பல் தற்போது பிரிட்டிஸ் கொலம்பியா கடற்பரப்பை அடைந்துள்ளதாக கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனேடிய பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் விக் ரோவிஸ் இதனை உறுதிபடுத்தியுள்ளார்.
இந்த கப்பல் நேற்று காலை அந்த நாட்டில் கடற்படையினர் மற்றும் கரையோர பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும் கனேடிய அரசாங்க அதிகாரிகளின் தகவல்படி கப்பல் நேற்று மாலையளவிலேயே கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் பெண்களும் குழந்தைகளும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், கப்பலில் உள்ள ஒருவர் மாத்திரம் சுகவீனமுற்றுள்ளதாகவும் முன்னர் வெளியான தகவலை போன்று எவரும் மரணமாகவில்லை என்றும் கனேடிய எல்லைப்பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சன் சீ கப்பல் அகதிகளுக்கு சட்ட மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக கனேடிய தமிழர் பேரவை ஒழுங்குகளை செய்துள்ளது.
இதற்காக தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் வன்கூவருக்கு சென்றுள்ளனர்.
இந்தநிலையில் ஆர்வமுள்ள உறவுகள் கனடியத் தமிழர் பேரவையுடன்
416 240 0078
416 240 0078
உடன் தொடர்பு கொண்டு மனித நேயப் பணிகளில் ஈடுபடலாம் என தமிழர் பேரவை அறிவித்துள்ளது

Comments