கே.பியின் அடுத்த கட்ட சதி வேலை ஆரம்பம்


இறுதி மூச்சு உள்ளவரை களத்தில் களமாடி தலைமையின் வேண்டுகோளிற்கிணங்க சிங்கள இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ள பல ஆயிரம் போராளிகளையும் தன்பக்கம் திருப்பி அவர்களை தேசியத்திற்கெதிரான பல சதி வேலைகளில் ஈடுபடுத்த கே.பி அவர்கள் மகிந்த அரசின் ஆதரவுடன் களமிறங்கியுள்ளார்.

இதற்கு துனைபோகும் விதமாக முன்னாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாடுகளை கவணித்து வந்த சில பச்சோந்திகளும் ஈடுபட்டு வருவதாக ஈழதேசம் அறிகிறது.

பல ஆண்டுகள் கே.பி அவர்களுடன் அனைத்துலக செயற்பாடுகளை கவணித்து வந்த சிலர் 2003,2004 ஆண்டுகளில் அந்த பொறுப்புக்களிலிருந்து தலைமையால் நீக்கப்படிருந்தனர்.

இவர்களின் செயற்பாடுகளில் தவறுகள் இருப்பதாக தலைமை அவர்களை அப்போது முழு பொறுப்புக்களிலிருந்தும் நீக்கியிருந்தது ஆனால் தற்போது இவ்வாறு தலைமையால் நீக்கப்பட்ட சிலர் இலங்கை அரசின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ள கே.பி அவர்களுடன் கைகோர்த்து புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களையும் செயற்பாட்டாளர்களையும் அவர்களால் இலங்கை அரசிற்கெதிராக முன்னெடுக்கப்படும் அரசியல் போரையும் முறியடிப்பதற்கு இந்தப் பச்சோந்திகள் துணைபோக ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இவ்வாறு கே.பியுடன் கைகோர்த்துள்ள சிலர் நாடு கடந்த தமிழீழ அரசமைப்பதற்கான நாடுவாரியான குழுவில் அங்கம் வகித்துள்ளதோடு நாடு கடந்த தமிழீழ அரசின் தேர்தல்கள் நடைபெறுவதை மறைமுகமாக தடுத்தும் வந்துள்ளதோடு நாடுகடந்த தமிழீழ அரசின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இல்லாதொழிக்கும் விதமாகவும் இவர்கள் உள்ளிருந்தே பல சதித்திட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

கடந்த மாதம் புலம் பெயர் தேசங்களிலிருந்து இலங்கைக்கு சென்ற தம்மை புத்தியீவிகள் என்று கூறிவரும் புத்தி கெட்டவர்கள் கே.பி அவர்களுடன் சந்தித்து புலம்பெயர் மண்ணில் மக்களால் இலங்கை அரசிற்கெதிராக முன்னெடுத்து வரும் அரசியல் நகர்வுகள் பற்றி கூறியதோடு அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பாகவும் பேசப்பட்டிருந்தது.

அந்த சந்திப்பின் போது புலம்பெயர் மண்ணில் இலங்கை அரசிற்கெதிராக மக்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள முக்கிய அமைப்பில் இருந்து ஒருவரும் கலந்து கொண்டிருந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது,ஈழத்தில் புலிகள் அமைப்புக்கள் இருந்த சிலரை எவ்வாறு அரசு விலைகொடுத்து வாங்கி இறுதிப்போரில் தலைமையை அழித்தார்களோ அதே போல் புலம்பெயர் தேசத்திலும் இலங்கை அரசிற்கெதிராக அரசியல் போரை நடத்த ஆரம்பிக்கப்பட்டுள்ள அமைப்பில் இலங்கை அரசின் கைக்கூலி இருந்துவந்தமை வெட்டவெளிச்சமாகியுள்ளது.

இதுபோல் இன்னும் எத்தனை பேர் இவ்வாறு ஒழிந்து எம்முடன் உள்ளார்கள் என்பது தான் தற்போதைய கேள்வியாக உள்ளது.

இது தொடர்பான ஆய்வு தொடரும்

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்

ஈழதேசமூடாக இனியவன்

Comments