சீனர்களுடன் இந்தியாவும், தமிழர்களும் நல்லுறவு கொள்வது எப்படி?

ஈழமுரசில் வெளியான செண்கபத்தாரின் திறனாய்வுப் பார்வை மூலம் ராசதந்திரத் தொடர்புகளைத் தமிழ் மக்கள் சீனத்துடன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசர அவசியம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

செண்பகத்தாரின் இத்தொடர்ச்சியான கட்டுரைகள் ஈழமுரசு வெளியிட்டபோதும் நாம் அவற்றை சங்கதி மற்றும் பதிவு வாசகர்களுக்காக நாம் மீள் பிரசுரம் செய்கின்றோம்.

1962-ல் சீனா - இந்தியா போர் ஏற்பட்டது ஏன்? ஏன்பதையும் இன்று வரை மக்கள் சீனம் இந்தியாவை எதிரியாகவே பாவிப்பது ஏன்? ஏன்பதையும் ஆய்வு செய்து அறிந்தால் தான் பெய்ஜிங், கொழும்புவை ஆதரிப்பதன் பின்னணியைப் புரிய முடியும் இதைப்புரிந்து கொண்டால் தான் சீனாவுக்குத் தமிழ் மக்கள் பகைவர்கள் அல்ல என்பதை உணர்த்த முடியும். சீனர் - தமிழர் நல்லுறவை நிலை நாட்ட முடியும்.

1959ல் திபேத்தியத்தலைவர் தலாய்லாமாவை இந்தியாவுக்குள் அனுமதித்து அடைக்கலம் கொடுத்து சிறப்பு விருந்தினராகக் கருதிச் செயல்பட்ட அன்றைய பாரதப் பிரதமர் நேருவின் அதிகப்பிரசங்கித்தனம் தான் 1962 போருக்கு மூலகாரணம். காங்கிரஸ் கட்சி வறுமைமிகு இந்தியா கம்யூனிஸ்ட் நாடாக மாறிவிடக் கூடாதென்று சீனாவை இந்தியர்கள் வெறுக்கச் சதி செய்து வலியச்சென்று போரை வரவழைத்ததுதான் உண்மை.

சீனா மீதான வெறுப்பு கம்யூனிசத்தின் மீதான வெறுப்பாக மாறிவிட்டது. 1964 கம்யூனிஸ்ட் கட்சி பிளவு பட்டு பலவீனப்பட்டும் போனது. புpரதான எதிர்கட்சியாகக்கூட வர இயலாதா நிலை வந்து விட்டது. தன்னை உலகத் தலைவராகப் பாவித்துக் கொண்ட நேரு. சூ- என் -லாயைத் தனக்கிணையான தலைவராக ஏற்க மறுத்து. அவரையும் அதன் மூலம் மக்கள் சீனத்தையும் சிறுமைப் படுத்தியது பேருண்மை.

எல்லைப் பிரச்சனை குறித்துப்பேச சூ-என்-லாய் பலமுறை பேச்சு வார்த்தைக்கு முயன்றும் தவிர்த்வர் நேரு. என்பது பர ஆய்வாளர்களின் அசைக்க முடியாத ஆதாரங்களுடனான கருத்து. (முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் டி.ஞானையாவின் நூல்) சீனாவின் ராணுவபலத்தை நேரு குறைத்து மதிப்பிட்டார் விளைவு. ஏறத்தால உரு லட்சம் சதுர கி.மீ நிலப்பரப்பை இந்தியா, சீனாவிடம் இழந்தது இன்று வரை மீட்கமுடியவில்லை. சீனாவின் அசுர ராணுவபலம் இன்று இந்தியாவால் மட்டுமின்றி அமெரிக்காவாலும் உணரப்பட்டு விட்டது.

நேருவும் இந்தியாவும் சீன எதிர்ப்பிலிருந்தாலும் சோவியத் யூனியன் ஆதரவாளர்களாகவாவது இருந்தனர் ராஜிவ் நரசிம்மராவ் காலம் தொடந்கி இந்தியா அமெரிக்க ஆதரவு நிலைகக்கு வரத்துவங்கியது மன்மோகன்சிங் காலத்தில் அமெரிக்க தாசனாகவே மாறிப்போனது. சீனாவுக்கு முதலில் தலாய்லாமாவால் வந்த கோபம் பிறகு அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் மூலம் இந்தியா மீது பல மடங்கு அதிகரித்தது.

சீனாவுக்கு எதிராக அதன் அண்டை நாடான இந்தியாவை அமெரிக்கா ஆசியாக்கண்டத்துக்குள் கொம்பு சீவிவிடுவதால் இந்தியாவுக்கு எதிராகச் சீனா அதன்ன அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மர், இலங்கை, நேபாலம், மலேசியா, போன்ற நாடுகளுடன் நெருக்கமாகி விட்டது இதில் இலங்கை மட்டும் சீனா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய மூன்று நாடுகளிடமும் உதவி பெறுகிறது.

இந்தியாவை ஏமாற்றுகிறது. இந்தியா ஏமாறவில்லை மாறாகத் தமிழர்களை ஏமாற்றுகிறது. சீனா, பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களிலிருந்து தப்பிக்கவே கூடங்குளம், கல்பாக்கம் என்று அணு உலைகளையும் ஸ்ரீ ஷரி கோட்டா திருவனந்தபுரம் என்று விண்வெளி ஆய்வு மய்யங்களையும் ஆவடியில் கனரக வாகன தொழற்சாலைகளையும் (டேங்க் பாக்டரி) ஏனைய பாதுகாப்பு நிறுவனங்களையும் புது டெல்லி, தென்னிந்தியாவில் நிலவியது.

இப்போது சீனா இலங்கையில் கால்பதித்ததன் மூலம் இவற்றுக்குச் சீனாவால் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது 1974-ல் கச்சதீவு இலங்கைக்கு இந்திராவால் தாரைவார்க்கப்பட்டதும், கருணாநிதி ஒத்துழைத்தும் சீனாவுக்கு வசதியாகப் போய்விட்டது. கச்சத்தீவில் சீனா ராடார் ஸ்டேஷன் அமைகிறது.

இந்துமாக்கடலில் மீன் பிடிக்கும் உரிமையை இலங்கையிடமிருந்து சீன நிறுவனம் பெற்றுவிட்டது. பாதிக்கப்படப்போவது யார்? பொதுவாக தென்னிந்தியர்களும் குறிப்பாகத்தமிழர்களும் தான் தமிழ் மீனவர்களின் வாழவுரிமை தான் பறிபோகும் சீனர்களுடன் தமிழகத்தமிழனும் ,ஈழத்தமிழனும் வாழவாதாரம் காக்கப் போரிட்டாக வேண்டிய நிலை வந்து விட்டது.

தாக்கு பிடிக்க முடியுமா?

தமிழனால் சீனர்களை எதிர் கொள்ள இயலுமா?

தப்பிக்க வழி என்ன?

சீனாவின் நல்லெண்ணத்தைப் பெற்றாக வேண்டும். சீனர்களுடன் நட்புறவு கொண்டாக வேண்டும் எப்படி?

• தலாய்லாமாவை இந்திய மண்ணிலிருந்து வெளியேற்ற இந்தியாவாழ் தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும்.

• சிங்கப்பூர், மலேசியா, மியான்மர் வாழ் தமிழர்கள் ஆங்காங்கு சீனர்களுடன் இணைந்து சீனர்-தமிழர் நட்புறவு அல்லது கலாச்சாரக்கழகங்களை ஏற்படுத்த வேண்டும்.

• லீகுவான்யூ போன்ற இன்னும் பல சீனர்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும்.

• சார்க்" எனப்படும் தெற்காசிய ஒற்றுமையைத் தாண்டி ஒடடுமொத்த ஆசிய ஒற்றுமைக்கும் பாடுபட வேண்டும்

• சிங்களர்களை விடத் தமிழர்களின் மக்கள் தெகை எட்டு மடங்கு அதிகம் என்பதை பெய்ஜிங்குக்குத் தெரியபடுத்த வேண்டும்.

• காங்சிப்பட்டு- சீனத்துப்பட்டு வாணிபத் தொடர்பையும், சில்க்ரூட் இருந்ததையும், போகர் வரலாற்றையும் நினைவூட்ட வேண்டும்

• சீனர்கள் தமிழர்களை எதிரிகளாகத் கருதாத நிலையை உருவாக்க வேண்டும்

Comments