கடுரையாளரான மார்க் மக்கினன் அவர்கள் உறுதியாக, முக்கியமான தகவல்களை ஆதாரமாக நிரூபிக்கவில்லை மாறாக தாய்லாந்து சென்று அங்கிருந்தவர்களின் வாழ் மொழி மூல தகவல்களை வைத்தே எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலை சிறந்த கப்பல் ஓட்டியே எம்.வி.சன் சீ என்ற கப்பலை ஓட்டியிருக்க முடியும். அல்லாவிடில் இந்த கப்பல் தாய்லாந்தில் இருந்து சர்வதேச கடல் எல்லைக்குள் செல்லும் முன்பாகவே கடலில் மூழ்கி இருக்கும். இவ்வாறு கூறியுள்ளார் சன் சீ கப்பலின் முந்தைய உரிமையாளர் புமிந்தர் ஹரிசூட் என்ற தாய்லாந்து நாட்டு பிரஜை.
சன் சீ கப்பல் முன்னர் ஹரின் பொனிக் 15 என்ற பெயருடன் மேற்படி உரிமையாளரால் மலேசியா, தாய்லாந்து மற்றும் பாங்கொக்- சொங்க்லா ஆகிய இடங்களுக்கு இடையே ஆடு மாடுகளை ஏற்றி இறக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தது. 57 மீற்றர் உடைய இந்த கப்பல் 175,000 கனேடிய டொலரிற்கு வாங்கப்பட்டது.
சன் சீ கப்பலும் அதன் உரிமையாளரும்
கப்பலை வாங்கியவர்கள் இலங்கை பிரஜையாகவும் அதே வேளை தாய்லாந்தில் பதியப்பட்ட ஓர் புதிய கம்பனியின் பேரில் வாங்கப்பட்டது. சன் அண்ட் ரிஷியா என்ற கொம்பனி தாய்லாந்தில் பதியப்பட்ட கொம்பனி இதன் உரிமையாளர் கிரிஸ்துராஜா குணா ரொபின்சன் ஆனால் கப்பல் வாங்கியதும் இவரும் இவரது கம்பனியும் காணாமல் போய்விட்டது. அதாவது இது ஓர் டம்மியாகவும் இருக்கலாம்.
இந்த சன் சீ என்ற கப்பல் 30 பேர் மட்டுமே தங்க கூடியதும் பிரயாணம் செய்ய கூடியதும் ஆகும் அத்துடன் 30 தொன் பொருட்களையும் கொண்டு செல்ல முடியும். 30 வருடங்களுக்கு முன்னர் யப்பானில் இருந்து உள்ளூர் தேவைக்கென இந்த கப்பல் தாய்லாந்து நாட்டவரால் கொள்வனவு செய்யப்பட்டது. பின்னர் இந்த கப்பல் உடைத்து இரும்பாக விற்பதற்காக நீண்டகாலமாக துறை முகத்தில் இருந்தது.
இதன் போதே தமிழர்கள் இந்த கப்பலை மார்ச் மாதம் வாங்கியுள்ளனர்.
கப்பல் பயணமும் தமிழர்களும்
தாய்லாந்தில் பாங்கொக் பெரு நகரத்தில் நடுப்பகுதியில் மெட்ராஸ் கபே எனும் தமிழ் உணவகம் உள்ளது. இங்கு பெருமளவான தமிழர்கள் வந்து செல்கின்றனர். இவர்களுள் நீண்டகாலமாக அங்கு வாணிபம் செய்தவர்களும் உள்ளனர். பூர்வீக குடிகளாகவும் தமிழர்கள் உள்ளனர். அதே வேளை போர் நடைபெற்ற போது இலங்கையில் இருந்து தப்பி வந்தவர்களும் உள்ளனர்.
சுமார் 800 வரையான இளைஞர்கள் ஐக்கிய நாடுகளில் அகதி அந்தஸ்து சட்டத்தின் கீழ் பதிவு செய்து இங்கு இருக்கின்றனர். இவர்கள் எல்லோரும் கூடும் இடமாக மெட்ராஸ் ரொட்டிக்கடை உள்ளது.
இந்த இளைஞர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்திருக்கலாம் அல்லது போரில் சிக்கியவர்களாகவும் இருக்கலாம் அல்லது முன் நாள் உறுப்பினர்களாகவும் இருக்கலாம்.
இவர்கள் ஆட்களை அனுப்பும் திட்டம் பற்றி அடிக்கடி பேசி வந்துள்ளனர். அதன் நோக்கம் தப்பி வந்த போராளிகளை பல இடங்களுக்கு அனுப்புவது. அதற்கு நிதி வேண்டும் ஆகவே பிறரிடம் நிதியினை வாங்கி அவர்களையும் தப்பி வந்தவர்களை அனுப்புவதுடன் தாங்கள் சார்ந்த அமைப்புக்களுக்கு நிதி பெறுவதும் ஓர் நோக்கமாக இருந்திருக்க கூடும்.
ரொட்டிக்கடையில் பகிடியாக கதைக்கும் இவர்களின் இந்த கதை ஓர் கற்பனையாகவே இருக்கும் என கடை உரிமையாளர் எண்ணியுள்ளார். ஆனால் அது நிஜமாகவே நடந்தேறியுள்ளதை நினைக்கும் போது திறிலாக உள்ளது. என கூறியுள்ளார் கடை உரிமையாளர்.
இந்த பயணத்தை திட்டமிட்டவர்களும் கப்பலை ஓட்டியவர்களும் மிகவும் புத்திசாலிகள், திறிலர்கள், வேவு திறன் உள்ளவர்கள் என்றே கூறலாம்.
தாய் கடற்படையுடன் முறுகலை எற்படுத்தி தப்பித்த சன் சீ கப்பல்
492 அகதிகளையும் ஏற்றி சென்ற இந்த கப்பல் தாய்லாந்து எல்லையினை கடந்து சர்வதேச எல்லைக்குள் செல்லும் போது தாய்லாந்து ரோயல் கடற்படை கப்பல் இந்த சன் சீ கப்பலை வழி மறித்தது. ஆனால் சன் சீ கப்பலில் இருந்தவர்கள் தாய்லாந்து கப்பலை தாக்க முற்பட்டனர். ஒருவர் காஸ் சிலிண்டருடன் கப்பலினுள் பாய முற்பட்டார்.
இன்னும் சிலர் தாய்லாந்து கடற்படைக்கப்பலிலிற்குள் ஏற முற்பட்டனர். தாய்லாந்து கடற்படை கப்பலான எச்.ரி.எம்.எஸ் சட்டா என்ற கப்பல் தம்மை காப்பாற்றும் பொருட்டு அங்கிருந்து உடனடியாக நகர்ந்து சென்றனர். தாய்லாந்து கடற்படை அதிகாரிகள் எம்.வி.சன் சீ கப்பலை ஓர் ஆவிகளின் கப்பல் என்றே வர்ணித்திருந்தனர்.
பாங்கொக்க் மாரியம்மன் கோவில்
சன் சீ பதிவு அலுவலகம்
அதற்கு காரணம் உள்ளது. முதலாவது தம் உயிரையும் கவலை கொள்ளாது தம்மை தாக்க முற்பட்டது. அடுத்ததாக இந்த கப்பலின் நகர்வுகள் அடிக்கடி ஒழிந்தும் மறைந்தும் வேடிக்கையாகவும் இருந்ததே ஆகும்.
ஆவிகளின் கப்பல்
மார்ச் 30 இல் பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்த கப்பல் ஏப்ரல்7 இல் தாய்லாந்து கொடியுடன் கடலில் பயணித்தது. பின்னர் அதனை காணவில்லை. 12 இலங்கை மாலுமிகளை கொண்டிருந்த இந்த கப்பல் சொங்க்லா துறைமுகத்தை விட்டு செல்லும் போது கப்பலை திருத்துவதற்கு சுராற் தானி என்ற இடத்திற்கு கொண்டு செல்வதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் சன் சீ கப்பல் சுராற் தானி என்ற இடத்திற்கு செல்லவில்லை என்பது பின்னர்தான் தெரியவந்துள்ளது.திருத்துவதற்காக கொண்டு செல்லப்பட்ட கப்பல் பின்னர் கொடி எதுவும் இன்றி சர்வதேச கடல் எல்லைக்குள் சென்று விட்டது.
மூன்று வாரத்தின் பின்னர் தாய்லாந்து விமானப்படை தம் ரோந்து விமானம் மூலம் சன் சீ கப்பலை தேட கிளம்பியது. ஆனால் தாய்லாந்து விமானபப்டையினால் கண்டு பிடிக்க முடியவில்லை. தாய்லாந்து அதிகாரிகள் அவுஸ்ரேலியாவிற்கு தகவல் அனுப்பினர் அதாவது எம்.வி.சன் சீ கப்பல் அவுஸ்ரேலியா நோக்கி வருவதாக கூறினர்.
ஆனால் திடீரென சன் சீ கப்பல் தாய்லாந்து துறைமுகமொன்றில் மே 8 இல் அதாவது சொங்லா என்ற முன்னைய துறைமுகத்தில் இருந்து 110 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள ஓர் எண்ணெய் பாய்ச்சும் தளத்தில் காணப்பட்டது.
இதனை அறிந்த தாய்லாந்து கடற்படை கப்பல் மீண்டும் எம்.வி.சன் சீ இனை நோட்டம் இட்டது. இதன் பின்னால் இரவு நேரம் சென்றது. ஆனால் சன் சீ கப்பல் தனது கப்பல் இயந்திரத்தை நிறுத்திக்கொண்டது. நிறுத்தியபடியே காற்றின் துணையுடன் நகர்ந்தது. எனினும் தாய்லாந்து கடற்படை கப்பல் எம்.வி.சன் சீ கப்பல் அருகே சென்றது.
இதன் போது எம்.வி. சன் சீ கப்பல் மேல் தட்டின் மேல் 150 பேர் வரை ஏறி நின்றனர். சிலர் கைகளை அசைத்தனர். ஆனாலும் தாய்லாந்து போர்க்கப்பல் மேலும் அருகில் சென்றதும் ஒரு இளைஞர் காஸ் சிலிண்டருடன் தாய் கடற்படை கப்பலினுள் பாய முற்பட்டார். மேலும் பலர் கடலினுள் பாய்ந்து தாய் கப்பல் மீது ஏற முற்பட்டனர்.
இந்த எதிர்பாராத நடவடிக்கையால் தாய்லாந்து கடற்படையினர் திக்கு முக்காடினர். ஆபத்தினை புரிந்து கொண்ட தாய் கடற்படை கப்பல் எம்.வி.சன் சீ கப்பலில் இருந்து விலக தொடங்கியது.
சன் சீ கப்பலில் இருந்தவர்களின் இந்த தற்காப்பு நடவடிக்கையானது மிகவும் ஆபத்தானது என வர்ணித்துள்ளார் தாய்லாந்து கடற்படை அதிகாரிகள்.
இது இவ்வாறு இருக்க சன் சீ கப்பலின் கப்டன் தாய் கடற்படைக்கப்பலுடன் தொடர்பு கொண்டார்.
தாம் சிங்கப்பூரில் இருந்து வருவதாகவும் தற்போது பாங்கொக் நோக்கி செல்வதாகவும் சன் சீ கப்டன் கூறினார். ஆனாலும் மூன்று மணித்தியாலங்கள் சன் சீ கப்பலின் பயணத்தினை தாம் அவதானித்த வண்ணம் இருந்ததாக தெரிவித்துள்ளனர். தாய் கடற்படை அதிகாரிகள்.
வியட்னாம் கடல் எல்லைக்குள் சென்ற சன் சீ கப்பல்
மூன்று மணி நேரத்திற்கு பின்னர் சன் சீ கப்பல் வியட்னாம் கடல் எல்லையினை நெருங்கி கொண்டிருந்தது. இதனால் தாய் கடற்படையினர் சன் சீ கப்பலை கண்காணிப்பதில் இருந்து விலகி கொண்டனர்.
வியட்னாம் பொலிசார் சன் சீ கப்பலை மே மாதம் 13 ஆம் திகதி தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் மேலதிக தகவலை தர மறுத்து விட்டனர்.
மீண்டும் தாய்லாந்தில் தென்பட்ட சன் சீ கப்பல்
ஆனால் சன் சீ கப்பல் மே மாதம் 17 அம் திகதி சங்கோலா என்ற தாய்லாந்து துறைமுகத்தில் அதிசயமாக தென்பட்டது. அதே வேளை சங்கோலா து|றைமுகத்திற்கு அருகாமையில் உள்ள விடுதி ஒன்றில் 40 இலங்கை தமிழர்கள் தங்கி இருந்துள்ளனர் என்பது பதிவு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
17 ஆம் திகதியின் பின்னர் மேலும் ஐந்து நாட்கள் மேற்குறிப்பிட்ட துறைமுகத்திலேயே சன் சீ கப்பல் நங்கூரமிட்டுள்ளது என தாய்லாந்து கடற்படை கூறியுள்ளது.
ஆனால் அதன் பின்னர் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. ஏனென்றால் இது ஓர் ஆவிகளின் கப்பல் போன்றது என வர்ணித்தார் இன்னொரு தாய் கடற்படை அலுவலர்.
சன் சீ கப்பலை ஓட்டியவர் மிகத் திறமையான கப்பல் ஓட்டி
இந்த கப்பலை ஓட்டிய கப்டன் சாதாரணமானவர் அல்லர், ஓர் தலை சிறந்த ஓட்டியாலேயே சன் சீ கப்பலை கனடா வரை ஓட்டி இருக்க முடியும் என கப்பலின் முன் நாள் முகாமையாளர் வெனிஸ் போன்பிரசேட் கூறியுள்ளார். சன் சீ கப்பலின் ஓட்டி அடிக்கடி கப்பல் ஓட்டுபவராக இருந்துள்ளார். இவர் புலிகளின் கப்பல் ஓட்டியான வினோத் ஆகவும் இருக்கலாம் என சிலர் கூறுகின்றனர். ஆனால் உறுதிப்படுத்த முடியவில்லை.
இந்த கப்பலை வெகு இலாவகமாக அதன் கப்டன் ஓட்டியுள்ளார். ஏனென்றால் நானும் ஒரு கப்டன் தான் ஆனால் நான் மலேசியாவிற்கு கூட சன் சீ கப்பலை ஓட்டியிருக்க முடியாது என்று கூறியுள்ளார் கப்பலின் முன் நாள் கப்டன்.
யூன் மாதம் 21 ஆம் திகதி சன் சீ கப்பலிற்காக மூன்று கப்பல்கள் உணவு, உதிரிப்பாகங்கள் மற்றும் குடி நீர்களை கொண்டு சென்று நடுக்கடலில் கொடுத்துள்ளன என்றும் தாய்லாந்து தகவல்கள் கூறுகின்றன.
கப்பலின் முன் நாள் உரிமையாளர் மீண்டும் கூறுகின்றார். சன் சீ கனடா சென்றது ஓர் கனவு போல இருக்கின்றது. இது என்றுமே நடைமுறை சாத்தியமாகா பயணம் என்றும் தான் நம்பவில்லை என்றும் விவரிக்கின்றார்.
கப்பல் பயணிகளும் மாரியம்மன் கோவிலும்
மே மாதம் 1 ஆம் திகதி பாங்கொக்க் மாரியம்மன் ஆலய பகுதியில் இருந்து கிட்ட தட்ட 120 தமிழர்கள் கரவன் வான்கள் மூலம் சொங்கொலா மீன் பிடி துறைமுகப்பக்கம் சென்றுள்ளதாக தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. பான் லே என்ற கிராமத்தில் இந்த தமிழர்கள் தங்கியுள்ளனர். சில வாரங்களுக்கு முன்னர் இந்த கிராமத்திற்கு வந்த நான்கு இலங்கையர்கள் பல்வேறு விடயங்கள் பற்றி விசாரித்து சென்றனர். இருவர் சென்றனர் ஆனால் அடுத்த நாள் இருவர் அங்கேஎயே தென்பட்டனர் என கூறியுள்ளார் பான் லே கிராமத்து இளைஞர் ஒருவர்.
ஆனால் பல கிராமத்தவர்கள் அப்படி ஒருவருமே வரவில்லை என்றும் கூறியுள்ளனர்.
உண்மையில் எம்.வி. சன் சீ கப்பல் தாய்லாந்தில் இருந்து விலகும் வேளை ஒரே ஒரு தமிழ் குடும்பமே காணாமல் போயுள்ளனர் என பொலிசார் மற்றும் ஐக்கிய நாடுகள் அகதிகள் ஸ்தானிகராலையம் கூறியுள்ளது. அப்படியெனின் இவ்வளவு தமிழர்களும் எங்கிருந்து கப்பலில் ஏறினார்கள் என்பது அடுத்த கேள்வி. இப்படி கஸ்டப்பட்டு வந்தவர்கள் எவ்வாறு 40- 50 ஆயிரம் வரையான டொலர்கள் கொடுத்திருக்க முடியும்?
இவர்கள் இலங்கையில் இருந்து மீன்பிடி படகுகள் மூலம் தப்பி வந்து தாய்லாந்தில் உள்ள பல்வேறு மீன்பிடி கிராமங்களில் ஒழிந்து இருந்தார்களா? என்றும் கேள்வி எழுப்பபட்டுள்ளது.
கப்பலின் டம்மி உரிமையாளர்
கிறிஸ்துராஜா குணாரொபின்சன் என்பவர் கப்பலின் சொந்தகாரர் என கூறினாலும் அவர் ஓர் வர்த்தகரோ செல்வந்தவரோ அல்ல. இவர் மேற்கு பாங்கொக்கில் மாதம் 80 டொலரிற்கு ஓர் வசதி குறைந்த விடுதியில் தங்கி இருந்துள்ளார். குணா ரொபின்சன் 2008 இல் கொழும்பில் இருந்து பாங்கொக்கிற்கு வந்துள்ளார். பின்னர் மலேசியாவிற்கு சென்றுள்ளார். தாய்லாந்தில் பழங்கள் மரக்கறிகள் வாணிபம் செய்யும் கம்பனி ஒன்றினை இவர் தாய்லாந்து காரருடன் சேர்ந்து பதிவு செய்துள்ளார். இதற்காக 65 000 டொலர்கள் முதலீடு செய்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர். ஆனால் இந்த நபர் தாய்லாந்து ஆட்களுடன் வியாபாரம் செய்ததற்கான ஆதாரம் இல்லை எனவும் இவருக்கு தாய் மொழி தெரியாது எனவும் கூறுகின்றனர்.
கடுரையாளரான மார்க் மக்கினன் அவர்கள் உறுதியாக, முக்கியமான தகவல்களை ஆதாரமாக நிரூபிக்கவில்லை மாறாக தாய்லாந்து சென்று அங்கிருந்தவர்களின் வாழ் மொழி மூல தகவல்களை வைத்தே எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குளோப் மெயில கட்டுரையாளர் மாக் மகொனொன் எழுதிய கட்டுரையின் சாரம்சமே இதுவாகும்.
மூலம்:
The ‘impossible’ voyage of a Tamil ghost ship
நன்றி: தமிழாக்கம் ஈழநாதம்
Comments