'இவரேதான் அவரே..அவரேதான் இவரே'




''நான்தான் தலைவர். நாடுகடந்த தமிழீழத்தின் மூலமும் நானே..

அதைமுடிக்கப்போவதும்நானே.

ஆயுதப்போராட்டத்தை அழித்தும் நானே.

கோத்தாவிடம் சரணடைந்ததும் நானே.

13 கப்பலுக்கு முடிவுரை எழுதியதும் நானே.

நடேசனை சரணடையச் சொன்னதும் நானே.

எத்தனை நாளைக்குத்தான், இன்டர்போல் வேட்டையிலிருந்துஒளிந்து வாழ்வது. சண்டைக்காரனின் காலில் விழுவதே மேல் எண்ட பழமொழி எவ்வளவு அற்புதமானது.

பொது மன்னிப்பின் மூலம், இயல்பு வாழ்க்கை எனக்கு கிடைத்து விடும். விடுதலையாவது.. மண்ணாங்கட்டியாவது. சரணாகதிச்சுகம் இவங்களுக்கு புரியாது. முன்னாள் துரோகி டக்லஸ் , பழைய நண்பர் கருணா போன்றோர் ,அறுசுவை உண்டு, கும்மாளமடித்து ,கோத்தாவின் அணைப்பில் சுகமாக வாழுதுகள். எனக்கென விசரே. போராளிகளின் விடுதலைக்காக போராடுறன் எண்டு சொன்னால்தானே, புலத்துப் புண்ணாக்குகள் பேசாமல் இருக்கும், சிலதுகள் காசை அள்ளித்தரும்.

காட்டிகொடுத்தும் பணம் சம்பாதிக்கலாம். அவலத்தை வைத்தும் காசு பார்க்கலாம். கருணா காலை வெட்ட, நான் கழுத்தை அறுத்துவிட்டன் பாருங்கோ. எனது புலத்து பினாமிகள் , நேர்மைக் கொழுந்துகள். நான் சேர்த்த சொத்துக்கள வித்துக்கொண்டு வந்து என்னிடமே தருகுதுகள்.

சிலபேர் கொஞ்சம் அடிச்சிருப்பினம். பரவாயில்லை. இவங்கள் மூலமாத்தானே இனி புலத்துப் புண்ணாக்குகளிடமிருந்து வறுக வேண்டும். இப்ப சங்கம் ஒண்டு அமைச்சிருக்கிரன். வியாபாரம் எப்படி போகுதெண்டு பார்ப்பம். சரிவராவிட்டால், பசிலிட்ட அல்லது கோத்தா அண்ணனிட்ட கேட்டு அரசியலில குத்திப்பம்.

மேர்வின் ஜக்கடையாவே , அரசியல் பண்ணும் பொது என்னால முடியாதே. எடுபிடி பிள்ளையானைப்போல, இடைக்கிடை அறிக்கைவிட்டால் போதும். அதை எழுதிதரத்தானே நோர்வேயிலையும், பிரான்சிலையும் ஆக்கள் இருக்கினம். காசு கொடுத்தா எழுத சுவிசிலையும் ஒருவர் இரிக்காராம். பணம் தான் கடவுள். கோத்தாவின் பொன்மொழிகளில இது மிக பெறுமதியான தத்துவம்.

வெகுவிரைவில 'அண்ணன் கோத்தபாயாவின் சிந்தனை' எண்ட சிவப்புப் புத்தகமொன்றை வெளியிடப்போரன். பிரபாவிட 50 வது பிறந்த நாளுக்கு 'விடுதளைபேரொளி' எண்ட புத்தகம் அடிச்ச சில பேரிட்ட கேட்கலாமெண்டு இருக்கிறன். அவையல்ல சிலர், மலேசியா காலத்தில இருந்து என்னோட நல்ல நெருக்கம். காசை எறிஞ்சா வாலை ஆட்டிக்கொண்டு ஓடி வருவாங்கள்.

இந்த விடுதலை விண்ணானங்களை விட்டுப்போட்டு, மகிந்தாவின்ற காலில வந்து விழுங்கோ. அவர் நம்பினவர கைவிடமாட்டார். டக்கையும், கருவையும் பாருங்கோ. .. எவ்வளவு வடிவா வச்சிருக்கிறார் மகிந்த அண்ணன். சொல்லு மாறமாட்டார். என்னை நம்புங்கோ. பிரபாகரன நான் கைவிட்ட மாதிரி, உங்களை நான் கைவிடமாட்டன்.

மாவீரர் மீது சத்தியம். முதலில ரத்த சொந்தங்கள வெல்ல வேண்டும். பிறகு ஊரை வெல்ல வேண்டும். அப்புறம் நாட்டை வெல்லலாம். செத்ததுகளுக்காக, போர்க்குற்ற விசாரணை அது இது எண்டு நேரத்த வீணடிக்காமல் என்னிட்ட வாருங்கோ.

எந்த மூனும், மகிந்த எண்ட சூரியப்புதல்வன நெருங்க முடியாது.. பாண் கீ மூனைத்தான் சொல்றன். இனி எண்ட சூரியப்புதல்வன் 'மஹிந்தாதான். சோதியில கலக்க ஓடிவாருங்கோ என் உடன் பிறப்புக்களே.. '' என்னோட சேராட்டி நான் உண்ணாவிரதமிருப்பன் கண்டியளோ.

-காலக் கண்ணாடி

Comments