குற்றவாளிக்கூண்டில் “கடிதம் கருணாநிதி”, நீண்டுகொண்டிருக்கும் கொலைக்குற்றச்சாட்டு

உலகவரலாற்றில் பழம்பெரும் ஜனநாஜக நாடாகவும், ஆசியாக்கண்டத்தில் முக்கிய நாடாகவும் கண்டறியப்பட்ட இந்தியா. ஈழத்தின் போர்க்குற்றத்திற்கு உடந்தையென்ற அவப்பெயரை சம்பாதித்திருக்கிறது.

குடும்பச்சுயநலவாதி, ஊழல்மூலம் உலகப்பணக்காரனாகிய தமிழ்நாடு முதலமைச்சர் “கடிதம் கருணாநிதி” தலைமையுடன் மற்றும் சில பெருத்த அரசியல்வாதிகளின் சுயநலத்தாலும் எதேச்சதிகாரப்போக்காலும் ஈழத்தின் போர்க்குற்றத்திற்கு உடந்தையென்ற அவப்பெயர் இந்தியாமீது விழுந்திருக்கிறது,

இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் உயிரிழக்கவும், அங்கு நிகழ்ந்த போர்க்குற்றங்களுக்கும் மன்மோகன் சிங், சோனியா, சிதம்பரம்,”கடிதம் கருணாநிதி” ஆகியோரது பங்களிப்பும் உறுதுணையாக இருந்ததால், அவர்களுக்கு எதிராக உடனடியாக போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என மலேசியாவின் பினாங்கு மாநில துணைமுதல்வர் ராமசாமி வலியுறுத்தியுள்ளார்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இது தொடர்பாக நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்த மலேசியா ஜனநாயக நடவடிக்கைக் கட்சியின் முக்கியத் தலைவரும், பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வருமான பேராசிரியர் பி ராமசாமி, கடந்த ஆண்டு மே மாதம் இலங்கையில் நடந்த ஈழத்தமிழினத்திற்கெதிரான இனப்படுகொலையையும், போர்க்குற்றத்தையும் ஆராய்வதற்கான நடவடிக்கையை, தாம் மற்றும் தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் ஆகியோரை உள்ளடக்கிய பிரத்தியேக குழு மேற்கொள்ளும் என்றார்.

இலங்கை அரசால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப்போராட்டத்தில் ஆரம்பந்தொட்டே தேவையற்ற தலையீடுகளை ஏற்படுத்திவந்த இந்தியா ஒருகட்டத்தில் தான் இலங்கைப்பிரச்சினையிலிருந்து ஒதுங்கிவிட்டதாக பகிரங்கமாக அறிவித்திருந்தது,

இருந்தும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் இனங்காணப்பட்டபோது அதுபற்றி பல மனிதாபிமானம் கொண்ட இந்திய அரசியல்த்தலைவர்கள் தலையிட்டு பாராளுமன்றிலும் வேறுபல பொதுவான ஊடக அறிக்கைகள் மூலமும் விசாரித்துக்கொண்டபோதும், ஸ்ரீலங்காவில் நடைபெறுவது உள்நாட்டு உரிமைசம்பந்தமான கிளர்ச்சி. அவைகளில் தாம் எந்தச்சந்தர்ப்பத்திலும் தலையிடப்போவதில்லை என்றும். எந்தவிதமான யுத்த உபகரணங்களோ ஆளணி உதவிகளையோ தாம் செய்யமாட்டோம், செய்யவுமில்லை, இருந்தும் அங்கு மக்கள் கொல்லப்படுவதை தடுப்பதற்காக
அரசியல்ரீதியாக பேச்சுவர்த்தைகள் மூலம் படுகொலைகளை உடனடியாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காக பாடுபடப்போகிறோம், என்று உறுதிபடக்கூறியதற்கான ஆதாரங்கள் நிறைய பல அரசியற்தலைவர்களிடம் கடிதங்களாகவும் வேறுபல ஆவணங்களாகவும் இருந்துகொண்டிருக்கிறது,

இந்தநிலையில் 35 வருடங்களுக்கு மேலாக நடந்துவந்த ஈழ ஸ்ரீலங்கா போராட்டத்தில், பணத்திற்காகவோ. அல்லது சிங்கள அரசாங்கத்தின் நட்பை வளர்ப்பதற்காகவோ நயவஞ்சகமாக தமிழ்நாடு முதலமைச்சர் “கடிதம் கருணாநிதியின்” முற்றுமுழுதான ஆதரவைப்பெற்று ஈழத்தமிழ்மக்களை அழித்தொழிப்பதற்காக சர்வ உலகத்தால் தடைசெய்யப்பட்ட எரிகுண்டுகளையும், நச்சுவாயு, சிதறிசின்னாபின்னமாக்கும் க்ளஸ்ரர் எறிகுண்டுகளையும், பாவித்து ஈழத்து தமிழர்கள் இரண்டு இலட்சத்துக்கு மேலானமக்கள் கொல்லப்படுவதற்கு இந்தியா காரணமாகியிருந்தது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

இலங்கை அரசாங்கம் வேறு நாடுகளின் உதவியோடுதான் இந்தயுத்தத்தை நடத்திக்கொண்டிருப்பதாக ஈழத்தமிழர்களும் தமிழ்நாட்டுத்தமிழர்களும் நம்பியிருந்தனர், அந்தநம்பிக்கையை பயன்படுத்தி இந்தியா கோரப்படுகொலைகளை ஈவிரக்கமின்றி கொன்றுகுவித்தது,

அந்த நேரத்தில் தமிழகத்தில் வைக்கோ, நெடுமாறன், நாஞ்சில்சம்பத், சீமான் ,போன்ற அரசியல்த்தலைவர்கள் உண்மைகளை அம்பலப்படுத்தியபோது. அவர்கள் மக்களை பிழையாக வழிநடத்துவதற்கு முனைகின்றனர் என்று தேசியப்பாதுகாப்புச்சட்டத்தை முறைகேடாக பயன்படுத்திய கருணாநிதி. ஜனநாயகவழியில் போராட்டம் நடத்திய அனைவரையும் சிறையில்த்தள்ளி இரும்ம்பு மனிதனாக நடந்துகொண்டார்.

வீதிக்குவந்து போராடிய வழக்கறிஞர்கள், நீதிபதிகள், அடித்து ஒடுக்கப்பட்டனர். உண்ணாவிரதமிருந்த தாய்மார்கள் தூக்கியெறியப்பட்டனர். உச்சக்கட்டமாக வேறுவழியின்றி உயிரை மதிக்காமல் தீக்குளித்து 19 பேர் தெருத்தெருவாக கருகி சாம்பலானபோது அவர்களது தியாகத்தை மிகவும் மலினப்படுத்தி கருணாநிதி கூறியது. குடும்பப்பிரச்சினை காரணமாகவும் குடித்துவிட்டு அரசின் உதவிபெறுவதற்காகவும்தான் அவர்கள் தீக்குளிப்பதாக கொமண்ட் அடித்து கொச்சைப்படுத்தினார்.

இவையெல்லாவற்றிற்கும் தண்டனைபெற்றுத்தரும் முயற்சியாக துரோகிகளை இனங்காணும் களமாக காலக்கட்டாயமாக மலேசிய நாட்டின் பினாங் மானில அரசியற்கட்ட்சித்தலைவர் கல்விமான் துணைமுதலமைச்சர் தமிழுறவு, திரு பழனியப்பன்.ராமசாமி அவர்களெடுத்திருக்கும் முயற்சி ஈழத்தமிழர் வாழ்வில் முளைவிட்டிருக்கும் இன்னொரு விடிவெள்ளியாகும்,

இங்கு பேராசிரியர் அவர்களின் ஒப்புதல் பெற்றபின் அவர்களின் மின்னஞ்சல் முகவரி வெளியிட இருக்கிறோம், சம்பந்தப்பட்ட காலப்பகுதியில் “கடிதம் கருணாநிதியின்” உண்ணாவிரத நாடகத்தின் பின்வந்த மூன்றுதினங்களிலும் கொல்லப்பட்ட மூவாயிரத்திற்கும் அதிகமான இறந்த மக்களின்
விபரங்கள். மற்றும் எல்லாவிபரங்களையும் அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு பின்னர் சிலதினங்களில் அறிவிக்க இருக்கிறோம். தயவுசெய்து தகவல்களை விரைந்து திரட்டுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

துணைமுதல்வர் திரு பி, ராமசாமி அவர்கள் மேலும் தெரிவித்த விடயங்கள்; சில நாட்களுக்கு முன் அமெரிக்க காங்கிரசின் 56 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டின் இராணுவத்தின் தலைமையில் நடைபெற்ற போர்க்குற்றத்தை ஆராய்வதற்கு ஒரு தனிப்பட்ட குழுவை அமைப்பதற்கு எந்தவித காலதாமதமுமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்களைக் கேட்டுக்கொண்டிருப்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

இலங்கைத் தீவில் நடைபெற்ற மனித உரிமை மீறலும், போர்க்குற்றமும் பல ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களின் உயிரிழப்பிற்குக் காரணம் இலங்கை இராணுவம் மட்டுமே அல்ல. அப்போர்க்குற்றத்திற்குச் சிங்கள அரசாங்கத்தின் பல்வேறு மட்ட அரசாங்கத் தலைவர்களும் நேரடியாக பங்கேற்றதோடு மட்டுமின்றி, விவரிக்கமுடியாத இப்போர்க்குற்றங்கள் நடைபெறுவதற்கு, இந்தியாவின் மத்திய மற்றும் தமிழக மாநில அரசுகளும், அதன் அரசியல் தலைவர்களின் பங்களிப்பும் உறுதுணையாக இருந்திருக்கிறது என்பது வெளிப்படையாகும்.

எனவே இதனைக் கருத்திற்கொண்டு, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, இந்தியாவின் உள்துறை அமைச்சர் சிதம்பரம். போன்றவர்களின் மீது உடனடியாக போர்க்குற்ற விசாரனையை மேற்கொள்ள அவசியம் ஏற்படுகிறது.

மேலும் இப்போர்க்குற்றத்தில் “முக்கிய குற்றவாளியாகத் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்”. ஏனெனில், இலங்கையின் கடைசிக்கட்டப் போரில் தப்பித்து வெளியேறியவர்களின் நேரடி சாட்சிப்படி கருணாநிதி தனது உண்ணாவிரத நாடகத்தின்போது, இலங்கை இராணுவம் கனரக ஆயுதத்தை இனிமேல் பயன்படுத்தாது என்றும், போர் முடிவுக்கு வந்துவிட்டது என்றும் யாரும் பயப்படத் தேவையில்லை, வெளியே வரலாம், இராணுவம் ஒன்றும் செய்யாது என்று வாக்குறுதி தந்ததை நம்பி ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் தங்களது பதுங்கு குழியிலிருந்து வெளியேறிய போதுதான், காத்திருந்த விமானங்களும், பீரங்கிகளும் குண்டு மழைபொழிந்து பல்லாயிரக் கணக்கானோரை பலிகொண்ட உண்மை தற்போது சர்வதேசத்தை வாயடைக்க வைத்திருக்கிறது.என்றும் குறிப்பிட்டிருக்கிறார்,

அடுத்ததாக தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித்தலைவர் ஜே ஜெயலலிதா அவர்களும் கருணாநிதியின் குற்றத்தை வழிமொழிந்து குற்றவாளிக்கூண்டில் ஏற்றி விசாரிக்கப்படவேண்டியவர் கருணா என அறிவித்திருக்கிறார், தொடர்ந்து வைகோ, நெடுமாறன் அவர்களும் மிகவும் முனைப்போடு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர், இந்தச்சந்தற்பத்தை ஈழத்தமிழினம் சரியாகப்பயன்படுத்தவேண்டும், குற்றவாளிகள் பலர் இருந்தாலும் நல்லவன்போல் பாசாங்குசெய்து நாடகத்தின் மேல் நாடகங்கள் தொடர்ந்து நடத்தி கருவறுத்த கருணாநிதியை தப்பிக்கவிட்டால் உலகத்தில் அதைவிடக்கொடுமை வேறு இருக்கமுடியாது.

Comments

Unknown said…
காட்டி கொடுத்த துரோகி கருணாநிதி ஈழம் மட்டும் அல்ல உலக தமிழர்களை காட்டி கொடுத்தவன் தமிழ்நாட்டிஇல் அவன் அடித்த கொள்ளை கொஞ்சம் நஞ்சம் இல்லை உலகம் தண்டனை கொடுக்கும் மின் அவன் சாவன் இர்ருந்தளும் அவன் செய்த பாவங்களுக்கு அவன் பிள்ளைகளுக்கு கிடைக்கும்