15 ஆம் ஆண்டு நினைவலைகள்... ஒரு மாணவப் படுகொலையின் அழியாத சுவடுகள்!

1995ம் ஆண்டு இன்றைய தினத்தில் யாழ்.வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் உள்ள நாகர்கோவில் மகாவித்தியாலயத்தின் மீது இலங்கை விமானப்படையின் புக்காரா ரக விமானங்கள் நண்பகல் வேளையில் குண்டுமழைகளைப் பொழிந்து 21 மாணவச் செல்வங்கள் பள்ளிச் சீருடையுடன் உடல்சிதறி துடிதுடித்து பலியானதை மறக்கமுடியுமா?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheiMoOoVjZo8yYDWiKxDWgzxZQTsLDUUjYFpdJos7LbgIBRRPlJP0gnvsBdK4bzMdO46Re8CPjjB-xZNAnoKZM69F_J_mLKZW-up66RRzvni9LNfmRT9YAx9hrKn90Tex7EDbSXiAQr0e3/s1600/22092010.jpg

தலைவாரி, பொட்டுவைத்து, பள்ளி சென்று வா என்று அம்மா அனுப்பிவைக்க, பத்திரமாக படித்துவிட்டு வீடு திரும்பி வா என அப்பாவும் சொல்லி அனுப்ப, வெள்ளை நிற பள்ளிக்கூட ஆடைகளை அணிந்து உல்லாசமாக, உற்சாகமாகச் பாசாலை சென்ற அந்த மாணவச் செல்வங்கள் மீது குண்டுபோட சிங்கள இனவெறியனுக்கு எப்படித் தான் மனம் வந்ததோ தெரியவில்லை.

பாவம்! பள்ளிக்குச் செல்லும் பிள்ளை அன்று வீடு திரும்ப மாட்டாள் என அம்மாவுக்கு முன்னரே தெரியாமல் போய்விட்டது. பாடசாலை சென்ற பையன் இனி வீட்டிற்கு பிணமாகத் தான் வருவான் என அப்பா நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

இலங்கை புக்காரா ரக விமானங்கள் பாடசாலை என்று கூடப்பாராமல் குண்டுகளை சரமாரியாக வீசிச் சென்றது. அதில் 21 பாடசாலை மாணவர்கள் ஸ்தலத்திலேயே உடல்சிதறி துடிதுடித்து பலியானார்கள்.

பாடசாலையில் எஞ்சியிருந்த மாணவர்கள் தங்கள் உயிரைப் பாதுகாப்பதற்காக பாடசாலையை விட்டு சிதறி நாலா பக்கமும் ஓடியதைக் கண்ணுற்ற சிங்கள இனவெறியன் கிராமத்தின் எல்லாஇடங்களிலும் கண்டபடி குண்டுகளையும் றொக்கற்றுக்களையும் சரமாரியாக பொழிந்து தள்ளினான். அதன் காரணமாக பொதுமக்கள் 10 பேருக்குமேல் பலியாகியிருந்தனர்.

அந்தக்கொடூரத் தாக்குதலில் மாணவர்கள், பொதுமக்கள் என 100 க்கு மேற்பட்டோர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், காயப்பட்டவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லக்கூட வாகனவசதி கூட இல்லாத நிலையில் எத்தனையோ பேர் உயிரிழக்கவேண்டிய பரிதாபம் ஏற்பட்டது.

சில மாணவர்கள் சிறிய காயங்களுக்கு உள்ளாகி இருந்தாலும், இரத்தப்போக்கு காரணமாக ஆசிரியரின் மடியில் பிணமானர்கள். எத்தனையோ ஆசிரியர்கள் மனநலம் பாதிப்படைந்தனர்.

ஒரு சில மணிநேரங்களில் அயற்கிராமங்களில் இருந்த வாகனங்களை கொண்டு வந்து காயப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்கையில் இடைவழியில் எத்தனையோ உயிர்கள் பிரிந்தன.

அன்று ஏற்பட்ட களேபரம் இன்று வரை அந்த குக்கிராமம் தனக்குரிய சோபை முழுவதுமாக இழந்த நிலையில், மக்கள் வாழ்ந்த அடையாளங்களையே காணமுடியாதவாறு மயான பூமியாக காட்சியளிப்பதை எம்மவர்களால் மறக்கமுடியுமா?

கொஞ்சம் கொஞ்சமாக இரத்தம் வெளியேற, உடலில் உள்ள நாடி நரம்புகளில் இரத்த அழுத்தம் குறைவடைய, இறுதியில் மூளைக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைய, அது இதயத்தை நிறுத்தச் சொல்லி சமிக்ஞைகளை அனுப்ப, பரிதாபமாக துடிதுடித்து இறந்தனரே 21 குழந்தைகள். அவர்கள் சாவுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?

எல்லாவற்றையும் பார்த்தும், பாராமுகமாக வாழ்ந்து வருகிறோம். இது போன்ற கொடுமைகள் வேறு ஒரு இனத்துக்கு நடந்திருந்தால், தமிழர்களை விட குறைவான எண்ணிக்கையில் அவர்கள் இருந்திருந்தால் கூட குறைந்த பட்சம் ஒரு தீர்வைக் கண்டிருப்பார்கள். ஆனால் எமது தமிழ் மக்கள் என்ன செய்கிறார்கள்?

22.09.1995 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான 21 மாணவர்களின் நினைவை நாம் சுமந்து நிற்கிறோம். எமது இனத்தைக் கருவறுக்க, சிங்கள இனவாதிகள் மாணவர்களைக் குறிவைத்தனர். கள்ளம் கபடம் ஏதுமற்ற வெள்ளை உள்ளம் கொண்ட மாணவச் செல்வங்கள் அணிந்திருந்த வெள்ளை சீருடைகளில் எல்லாம் இரத்தக் கறைகள்!

15 ஆண்டுகள் கடந்தநிலையிலும் இன்றைய (22.09.1995) தினத்தில் கொல்லப்பட்ட மாணவச் சிறார்களின் நினைவுகளை சுமந்தவண்ணம் சொல்லொணா துன்பக் கடலில் மூழ்கித் தவிக்கும் அவர்களின் பெற்றோர்கள் எல்லாவற்றையும் இழந்து வாழ்க்கையே சூனியமான நிலையில் அலைந்து திரிகின்றதை எம்மவர்களால் மறக்கமுடியுமா?

தமது குண்டு வீச்சில் 21 தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டோம் என்ற இறுமாப்பு சிங்கள வான்படைக்கு, கொன்றது பச்சை குழந்தையானாலும் சரி, அல்லது பிறந்து 3 நாள் ஆன குழந்தையானாலும் சரி, கொல்லப்பட்டது தமிழன் தானே என்று அவனுக்கு திருப்தி.

இது போன்ற உணர்வுகள் அற்ற காட்டேறிகளோடு, சேர்ந்து வாழ்வோம் என சில தமிழர்கள் இன்னும் கொக்கரிக்கிறார்கள்! பாருங்கள்! உங்கள் பிள்ளைகளுக்கு இப்படி நடந்திருந்தால் நீங்கள் இப்படி பேசியிருக்க மாட்டீர்கள்!

அன்றைய நாளில் பலியான மாணவர்கள், பொதுமக்கள் அனைவரினதும் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன், அவர்களை பிரிந்து தவிக்கும் உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாயங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வோம்.

--------------

அதிகாலைப் பொழுதொன்று குருதியில் உறைந்தது அன்று, அந்த நாளை நாம் மறப்போமா? தலைவாரி, பொட்டுவைத்து, பள்ளி சென்று வா என்று அம்மா அனுப்பிவைக்க, பத்திரமாக படித்துவிட்டு வீடு திரும்பி வா என அப்பாவும் சொல்லி அனுப்ப, வெள்ளை நிற பள்ளிக்கூட ஆடைகளை அணிந்து உல்லாசமாக, உற்சாகமாகச் சென்ற அந்த பிஞ்சுக் குழந்தைகள் மீது குண்டுபோட சிங்கள இனவெறியனுக்கு எப்படித் தான் மனம் வந்ததே தெரியவில்லை. பாவம்! பள்ளிக்குச் செல்லும் பிள்ளை அன்று வீடு திரும்ப மாட்டாள் என அம்மாவுக்கு முன்னரே தெரியாமல் போய்விட்டது. பாடசாலை சென்ற பையன் இனி வீட்டிற்கு பிணமாகத் தான் வருவான் என அப்பா நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

ராட்சஷக் கழுகாக பறந்துவந்த இலங்கை புக்காரா விமானங்கள் பாடசாலை என்று கூடப்பாராமல் குண்டுகளை வீசிச் சென்றது. அதில் 21 பாடசாலை மாணவர்கள் ஸ்தலத்திலேயே பலியானார்கள். சில மாணவர்கள் சிறிய காயங்களுக்கு உள்ளாகி இருந்தாலும், ரத்தப்போக்கு காரணமாக ஆசிரியரின் மடியில் பிணமானர்கள். கொஞ்சம் கொஞ்சமாக இரத்தம் வெளியேற, உடலில் உள்ள நாடி நரம்புகளில் இரத்த அழுத்தம் குறைவடைய, இறுதியில் மூளைக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைய, அது இதயத்தை நிறுத்தச் சொல்லி சமிக்ஞைகளை அனுப்ப, பரிதாபமாக துடிதுடித்து இறந்தனரே 21 குழந்தைகள். அவர்கள் சாவுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?

எல்லாவற்றையும் பார்த்தும், பாராமுகமாக வாழ்ந்து வருகிறோம். இது போன்ற கொடுமைகள் வேறு ஒரு இனத்துக்கு நடந்திருந்தால், தமிழர்களை விட குறைவான எண்ணிக்கையில் அவர்கள் இருந்திருந்தால் கூட குறைந்த பட்சம் ஒரு தீர்வைக் கண்டிருப்பார்கள். ஆனால் எமது தமிழ் மக்கள் என்ன செய்கிறார்கள்? 22.09.1995 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான 21 மாணவர்களின் நினைவை நாம் சுமந்து நிற்கிறோம். எமது இனத்தைக் கருவறுக்க, சிங்கள இனவாதிகள் மாணவர்களைக் குறிவைத்தனர். கள்ளம் கபடம் ஏதுமற்ற வெள்ளை உள்ளம் கொண்ட மாணவர்கள் அணிந்திருந்த வெள்ளை ஆடைகளில் எல்லாம் ரத்தக் கறைகள்!

தமது குண்டு வீச்சில் 21 தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டோம் என்ற இறுமாப்பு சிங்கள வான்படைக்கு, கொன்றது பச்சை குழந்தையானாலும் சரி, அல்லது பிறந்து 3 நாள் ஆன குழந்தையானாலும் சரி, கொல்லப்பட்டது தமிழன் தானே என்று அவனுக்கு திருப்தி, இது போன்ற உணர்வுகள் அற்ற காட்டேரிகளோடு, சேர்ந்து வாழ்வோம் என சில தமிழர்கள் இன்னும் கொக்கரிக்கிறார்கள்! பாருங்கள்! உங்கள் பிள்ளைகளுக்கு இப்படி நடந்திருந்தால் நீங்கள் இப்படி பேசியிருக்க மாட்டீர்கள்!

அன்று கொல்லப்பட்ட 21 பிள்ளைகளின் பெற்றோர் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர்களின் துயரில் அதிர்வு இணையமும் பங்கு கொள்கிறது! விடியும் ஒரு நாள் என வீரப் பறை சாற்றி நிற்கிறது! வீறுகொண்டு எழு தமிழா அதை வீதிக்கு வீதி சொல்லிடு தமிழா என்று சொல்கிறது!

மாண்டவர் எல்லோரும் மலரட்டும் பூக்களாய், மலரப்போகும் எங்கள் சுதந்திர தேசத்தில்!

அதிர்வின் ஆசிரியபீடம் !

Comments