வன்னி யுத்தத்தின் ஆறாத காயங்கள்

‐ வாழ்வின் சுகங்களைத் தொலைத்த பின்பும் மன உறுதியுடன் வவுனியா சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இவர்கள் உதவிக் கோரி விண்ணப்பித்துள்ளார்கள் ‐ விபரங்கள் இணைப்பு‐

dgrதிரு. சிவசக்தி ஆனந்தன்
பாராளுமன்ற உறுப்பினர்
வன்னி மாவட்டம்
03.09.2010
மேன்மைதங்கிய சிவசக்தி ஆனந்தன் அவர்கட்கு


கழுத்தின்கீழே இயங்க முடியாதவர்களும் இடுப்பின்கீழ் இயலாதவர்களும் தங்களிடம் இருந்து எதிர்பார்க்கும் விடயத்தைக் கடிதம் மூலம் சொல்லிக்கொள்கின்றோம்.

ஐயா நீங்கள் பம்பைமடு வைத்தியசாலைக்கு வந்து எங்கள் எல்லோரையும் பார்வையிட்டீர்கள் அதற்கு நாங்கள் நன்றி சொல்லிக்கொள்கின்றோம்.

வன்னியில் கடந்த காலம் ஏற்பட்ட போரின் காரணமாக பாதிக்கப்பட்டு இரண்டுவருடங்களாக சக்கர நாற்காலியில்தான் எங்களுடைய வாழ்க்கை போய்க்கொண்டிருக்கின்றது. கீழே குறிப்பிடப்படும் விபரங்களுடைய நாங்கள் எங்களுடைய சொந்த இடத்தில்போய் வாழ்வதற்கான உதவிகளையும் வீடு, காணி இல்லாதவர்களுக்கு வீடும், காணியும் வாழ்வாதாரத்திற்கான உதவிகளையும் (தொழில் செய்வதற்கான பண உதவியும்), மீண்டும் மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டியவர்களுக்கான பண உதவியையும் நீங்கள் செய்துதர வேண்டும் என்று மிகவும் அன்பாய் கேட்டுக்கொள்கின்றோம். இவ்விடயங்களை நீங்கள் எங்களுக்காகச் செய்யாமல் விட்டாலும் எங்களுடைய பிள்ளைகளின் நன்மையைக் கருத்தில்கொண்டு இவ்வுதவியைச் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றோம்.

குறிப்பு:‐ ஊனமுற்றமுற்றவர்களுக்காய் அரசாங்கத்தால் வழங்கப்படும் எந்த உதவியும் எங்களுக்குக் கிடைப்பதில்லை. அரச அலுவலகங்களிலும் எங்களை வேலைக்கு இணைக்கலாம் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இவ்விடயத்தையும் கவனத்தில் எடுக்கும்படிக் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி.

qwe

அன்புடன் திரு. குருபரனுக்கு

தங்களுக்கு அனுப்பிய படங்களைப் பிரசுரித்து செய்தியையும் வெளியிட்டு எமது மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு முன்முயற்சி எடுத்துள்ளீர்கள் அதற்கு முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்;.
இத்துடன் வவுனியா சித்த வைத்தியசாலையில் சிகிச்சைபெறுகின்ற மற்றும் வறோட் நிறுவனத்தில் தங்கியுள்ளவர்களின் பெயர்ப்பட்டியலைத் தொலைபேசி எண்ணுடன் அனுப்பியுள்ளோம்;. அதனைப் பிரசுரிப்பதுடன் தேவையான உதவிகளையும் மேற்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்;.

dgr
இவர்களில் கணினி அறிவு பெற்றவர்களும் உள்ளனர். இவர்கள் குடும்பத்தினருடன் இருந்து தொழில் செய்து வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இவர்களது வீடுகளில் கமோட் வசதி செய்து கொடுக்க வேண்டியுள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக இவர்களுக்கு நாளாந்தச் செலவுகளுக்காக பணம் தேவைப்படுகின்றது.

நன்றி
serfscxfcxfcxfcxfcxfcxf

Comments