மகிந்தா அரசு போடும் கபடதாரி வேடம்..நல்லிணக்கக ஆணைக்குழுவாம்...பரிந்துரையாம்..?

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் முறையிடும்....பெண்கள் முதியவர்கள் சிறுவர்கள்...ஒரு சிறு பலனாவது கிடைக்கும் என்று நம்புகின்றனர் தமிழ் மக்கள்...நம்பலாமா மகிந்தா அரசை..? என்று இனிமேல் தான் தெரியவரும். இந்த டூபாக்கூர் ஆணைக்குழுவிற்கு தலைவராக சீ.ஆர்.டி.சில்வா அவர்களை நியமித்துள்ளது மகிந்தா அரசு..


மகிந்தாவோ ஐ.நா மன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையில்..

நேற்று முதல் கிளிநொச்சியில் நடந்து வரும் இந்த இரண்டு நாட்களில் ஏராளமான பொது மக்கள்..

பெண்கள் விதவைகள்..சிறுவர்கள்..முதியவர்கள் என்று வரிசையில் நின்று தங்கள்
கணவன்மார்களை..பிள்ளைகளை..இளம் தாயார்களை கேட்டு முறைப்பாடு செய்த வண்ணம் உள்ளனர்..இந்த முறைப்பாடு குறித்த செய்திகள் பெரும் அச்சத்தை..நடந்து விட்ட பயங்கரத்தை உணர்த்துகிறது தமிழ் மக்களிடம்..புலம் பெயர் மக்களிடம்...!

ஏப்ரல் ..மே மாத துவக்கத்தில் இருந்தே கிளஸ்டர் குண்டுகளை இந்திய விமானப்படை, இலங்கை விமானப்படையுடன் சேர்ந்து வீசிக் கொன்றனர் மக்களை என்றும்..பிறகு பாஸ்பரஸ் குண்டுகளையும்...இன்னும் ஆதாரத்துடன் வெளிவர இருக்கும் நச்சு வாயு குண்டுகளையும்..

( Bio-Chemical Bomb ) வீசிக் கொன்றுள்ளனர் தமிழ் மக்களை...இந்த விசவாயு குண்டுகள் வீசப்பட்டவுடன் போரில் முனைப்புடன் இருந்த பல நூறு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்..பல இரண்டாம் கட்ட புலிகளின் தலைவர்களும் கொல்லப்பட்டனர்..விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து பல ஆயிரம் மக்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர்...!

இந்த விசவாயு குண்டுகளை வீசியப்பிறகு தான், தேசியத் தலைவர் ஆயுதங்களை மௌனிக்கும் முடிவுகளுக்கு வந்தடைந்தார் என்று கூறுகின்றனர் சிலர்..ஆனால் இவையெல்லாம் சிறிதும் உண்மை அல்ல..மாறாக கிளிநொச்சியை விட்டு புலிகள் வெளியேறியவுடன் அல்ல...யுத்தம் துவங்குவதற்கு முன்பே...மாவீரர் தினத்தில் தேசியத் தலைவர் நிகழ்த்திய உரையை கவனித்தீர்கள் என்றால் இந்த ஆயுதம் மௌனிக்கும் உண்மை தெரியும்..என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்..

இன்று சில திருவாளர்கள் கூறுவதைப் போல, கடைசி நேரத்தில் போர் நிறுத்தம் ஏற்படும் என்றோ..இறுதி கட்ட நிலையில் அமெரிக்க போர்க்கப்பல் மூலம் தேசியத் தலைவர் மற்றும் முக்கிய தளபதிகள் தப்பி சென்று விடுவார்கள் என்றோ தேசியத் தலைவர் மற்றும் முக்கிய தளபதிகள் கருதவில்லை...!

மேலும்,இது போன்ற தகவல்கள் வேண்டும் என்றே இந்திய் புலனாய்வு அமைப்புகளாலும், இங்குள்ள அங்குள்ள கூலிப்படைகளாலும் திட்டமிட்டு பரப்பப்பட்டன..கிளிநொச்சியை இழந்தவுடன் இந்த யுத்தம் எதை நோக்கி செல்லும்..? என்று தெரியாமல்..இருப்பதற்கு விடுதலைப்புலிகள் என்ன மாங்காய் மடையர்களா..? உலகின் மிகச்சிறந்த விடுதலை அமைப்பு...திடீரென்று காணமல் போக வேண்டும் என்று விரும்புகின்றனர் பேரினவாதிகள்..பார்ப்பனியர்கள்..!

இப்பொழுது நடைபெற்று வரும் இந்த ஆணைக்குழுவிடம், இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த மற்றும் பிடிபட்ட போராளிகளையும் 16 பஸ்களில் கொண்டு சென்றார்கள் என சாட்சியம் கூறுகின்றனர்..புலிகளின் திருமலை அரசியல் பிரிவு பொறுப்பாளர் எழிலனை தேடிப்பிடித்து ஒப்படைக்குமாறு அவரது மனைவி புகார் அளித்துள்ளார்..இதுபோன்று பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளது...!

முள்ளிவாய்க்கால் பகுதியில் தீயிட்டு அழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் வீடுகள் என்று செய்திகள் வருகின்றன..என்றாலும் நமக்கு என்ன கேள்வி என்றால்..? இப்பொழுது எதற்கு கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கக் குழுவை நிறுவ வேண்டும் மகிந்தா கும்பல்..? இவையெல்லாம் திடீரென்று நடக்கவில்லை...இந்திய ராணுவ உயர் அதிகாரிகளின் சுற்றுப்பயணம்..

இறுதியாக நிருபமா ராவ் இலங்கை பயணத்தில் இது குறித்து பேசி இருப்பார்கள்..ஏன் பேச வேண்டும்..? நடக்க இருக்கும் ஐ.நா கூட்டத்தில் இருந்து வரும் தாக்குதல்களை சமாளிப்பதற்கு இந்திய அரசு யோசனை சொல்லியிருக்கலாம்...இந்த நல்லிணக்க ஆணைக்குழுவால் எந்த பயணமும் இருக்க போவதில்லை..இந்த புகார்கள் குறித்த விசயங்களை நாடு கடந்த அரசும்..புலம் பெயர் மக்களும் தங்களுக்கு சாதகமாக உலக அரங்குகளில் பயன் படுத்திக் கொள்ளலாம்..மேலும், சுதந்திரமான அமைப்புகளையும்..!

ஐ.நா.வின் மனித உரிமை அமைப்புகள்..சுதந்திரமான சர்வதேச பத்த்ரிக்கையாளர்களை..தமிழ் தேசிய கூட்டமைப்பினரை முகாம்களில் அனுமதிப்பதின் மூலமே முகாம் மக்களுக்கு ஏதாவது கொஞ்சமாவது பலன் கிடைக்கும் என்று கருதலாம்...!

மகிந்தாவின் இந்திய அரசின் கபட நாடகமே இந்த நல்லிணக்க ஆணைக்குழு...!

ஈழதேசம் செய்திக்குழு

Comments