இந்தமாதம் ஐ.நா.சபைக் கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக அமெரிக்கா வந்துள்ள போர்க் குற்றவாளி மகிந்த ராஜபக்சவை கைது செய்து, அவர்மீது போர் குற்ற விசாரணை நடத்தக்கோரி கனடியத் தமிழர் தேசிய அவையினால் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு ரொறன்ரோவில் 360 யூனிவசிற்றி அவனியூவில் அமைந்துள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் முன்னால் நடைபெற்றது.
மாலை 3.00 மணியளவில் ஆரம்பமான நிகழ்வில், வேலை நாளாக இருந்தபோதும் வயது வேறுபாடின்றி பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டனர்.
Rajapaksa Down Down
Rajapaksa War Criminal
UN Investigate War Crime
USA and Canada Don’t Engage Sri lanka President
போன்ற பல கோசங்களை எழுப்பிய மக்கள், சுலோக அட்டைகளுடன் மாலை 7.15 மணியளவில் ஊர்வலமாக யூனிவசிற்றி அவனியூவால் சென்று குயின் வீதி வழியாக ரொறன்ரோ நகர மண்டபம் வரை சென்று மீண்டும் அமெரிக்கத் துணைத்தூதரகத்தினை வந்தடைந்தனர்.
இறுதியாக கனடியத் தமிழர் தேசிய அவையின் ஒன்ராரியோ மாகாண பிரதிநிதி தேவா சபாபதிப்பிள்ளை அவர்கள், அடுத்த வாரம் நியூயோர்க் நகரில் இருக்கும் ஐ.நா சபைக்கு முன்னால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கவனயீர்ப்பில் கலந்துகொள்வதற்கு செல்வதற்கான பேரூந்து வண்டி சம்பந்தமான அறிவித்தல் விடுத்ததை தொடர்ந்து உறுதிமொழியுடன் கவனயீர்ப்பு நிகழ்வு மாலை 8.00 மணியளவில் நிறைவுபெற்றது.
கனடியத் தமிழர் தேசிய அவை
அமெரிக்கா செல்வதற்கான பேரூந்து தொடர்புகளுக்கு: 1866 263 8622 Ext 101
இதேவேளை ராஜபக்ச அமெரிக்காவுக்கு செல்லும் போது அங்குள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்கள், ஆர்ப்பாட்டம் நடத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக மஹிந்த ராஜபக்ச. ஆசிய சமூகத்தவருடனான சந்திப்பை ஏற்கனவே ரத்துச்செய்துள்ளார்.

Comments