விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனைத் தேடி ஒப்படைக்குமாறு அவரது மனைவி ஆனந்தி சசிதரன் நேற்றையதினம் கிளிநொச்சியில் கூடிய நல்லிணக்க ஆணைக்குழு முன் பிரசன்னமாகி கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் பி.பி.சி தமிழோசைக்கு கொடுத்த ஒலிவடிவிலான பேட்டியின் தொகுப்பு இங்கு இணைக்கப்பட்டுள்ளது. அரசியல் துறை துணைபொறுப்பாளர் தங்கன், நிர்வாகசேவைப் பொறுப்பாளர் பூவண்ணன், மற்றும் பிரியன், உட்பட பலர் அருட்தந்தை பிரான்சிஸ் அடிகளாரோடு சென்று சரணடைந்த்தாகவும், அதனைத் தான் நேரடியாகப் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் 9 பேர்கொண்ட தூதுக்குழு இலங்கை சென்று கே.பியைச் சந்தித்தவேளை, இலங்கை புலனாய்வுத்துறை பொறுப்பாளர் கபில ஹெதவிதாரணவிடம், நிர்வாகசேவைப் பொறுப்பாளர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அப்படி தங்களிடம் யாரும் இல்லை என அவர் பதிலளித்ததோடு, இராணுவத்திடம் சரணடைவதை யாராவது பார்த்தார்களா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். பொதுவாக புலிகளின் உயர்மட்ட பொறுப்பாளர்கள் பலர் சரணடையும்போது, பலரின் மனைவிமார்களும் கூடவே இருந்திருக்கின்றனர். அவர்களே அதற்கு சாட்சியாகும்!
பணத்துக்காகவும், பதவி, அந்தஸ்துக்காகவும், அரசுடன் கூடித் திரியும் பலர் இருக்கும்போது, இன்னும் மாறாமல் ஈழத்தில் இருக்கும் ஒரு மறத் தமிழச்சியின் குரல் ஓங்கி ஒலித்திருக்கிறது. அதுவும் ஈழத்து தமிழர்களின் உள் உணர்வு என்ன என்பதை உலகுக்கு உணர்த்தி நிற்கிறது.
Comments