18ம் திகதி ஆகஸ்ட் மாதம் 2006ம் ஆண்டு நாலுபேர்கொண்ட இலங்கைத் தமிழர்கள் காரில் கனடாவில் இருந்து அமெரிக்கா பயணமானார்கள் என்று சொல்லப்படுகிறது. அவ்வாறு அவர்கள் பயணம் செய்தவேளை, அதில் ஒரு நபருக்கு அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் அனுமதி மறுத்ததால், மற்றைய மூவரும் அமெரிக்காவுக்குள் சென்று ஆயுதக்கொள்வனவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சாதாரணமாக ஏ.கே - 47 ரக துப்பாக்கிகளை கொள்வனவுசெய்யச் சென்ற இவர்களிடம், ஆயுத வியாபாரியாக நடித்த அமெரிக்க பொலிசார், தம்மிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் இருப்பதாக கூறியதையடுத்து அவர்கள் அதையும் வாங்க முற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஸா- 18 ரஷ்சிய தயாரிப்பான விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் பொலிசார் காட்டியுள்ளனர்.
பின்னர் அந்த மூவரும் கைதுசெய்யப்பட்டனர்
இருப்பினும் அமெரிக்கா செல்லும் வழியில் விசா நிராகரிக்கப்பட்ட நபரான பிரதீபன் நடராஜனையும், பணம் வழங்கி உதவினார் என்ற குற்றத்திற்காக சுரேஷ் சிறீஸ்கந்தராஜாவையும் தமது நாட்டிற்கு நாடு கடத்துமாறும், அவர்கள் மேல் தாம் வழக்கு தொடுக்க இருப்பதாகவும் அமெரிக்கா தொடர்ந்தும் கனடிய அரசைக் கோரிவருகின்றது.
2006ம் ஆண்டு கனேடிய இரகசியப் பொலிசான RCMP யும், அமெரிக்க உளவுப் பிரிவான FBஈ யும் இணைந்து பிராஜெக்ட் ஓ நீடில் என்ற திட்டத்தைத் தீட்டி இவர்களை தமது வலையில் சிக்கவைத்து கைதுசெய்திருந்தது குறிப்பிடத்தக்க விடையமாகும். இதன் பின்னணி என்ன ? இவ்வாறு தொடர்ந்தும் அமெரிக்கா இவர்களை நாடுகடத்த கோரிவருவதன் காரணம் என்ன என்பது குறித்து பெருத்த சந்தேகங்கள் நிலவுகின்றன.
Comments