![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNpkmrLP7RiVCySApxz_WnfZ6EtjjKecY-2msxbZawHy9TxD9nV-o8bdfa5-cXRvvpwv4m1D0lREvr7PSym3hD0AJH9mZv4Kg10JhRaHtFdhyphenhyphen9HPCqf_ZcVVYZTAurfSsEZQWvIneTvTk/s200/09.jpg)
இவர் அம்பாறை மாவட்டத்திலுள்ள மல்லிகைத் தீவு எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்.
இவர் இன விடுதலைப் போராட்டத்தில் 1993 ஆம் ஆண்டு இணைந்து கொண்டார். அடிப்படைப் பயிற்சியில் ஈடுபட்டு 16 வது நாளில் தவறி விழுந்ததில் கழுத்துக்கு கீழ் உணர்வில்லாமல் போய்விட்டது. இவரால் சென்ற நோக்கமும் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது.
இனப் பற்றுடன் வந்த அருந்தவராசாவால் போராட முடியாது என்றிருந்த போதும் அவரை தமிழீழ விடுதலைப் புலி இயக்கத்தினர் 19 வருடங்களாக பராமரித்து வந்தனர்.
படுக்கையிலேயே கழிவகற்ற வேண்டிய பரிதாப நிலை. உணவும் யாரும் ஊட்டி விட வேண்டும். இவ்வாறு பராமரிக்கப்பட்டு வந்த இவர் கடந்த இறுதி யுத்தத்தில் தெய்வாதினமாக உயிர் தப்பிய வேளை வவுனியா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். இன்று வெளி நாட்டு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இவரின் மருத்துவச் செலவு பராமரிப்புச் செலவு எல்லாவற்றுக்கும் அருந்தவராசாவின் பெற்றோரே பொறுப்பு. இவரை பராமரிக் வயசான அம்மா அப்பாவால் முடியாதால். வேலைக்குப் பொகாமல் அருந்தவராசாவின் தம்பியே இவரை வீட்டில் இருந்து பராமரிக்கிறார்.
வீட்டுக்கென்று எதுவும் தன்னால் செய்யாத நிலையில். இன்று வீட்டுக்கு பாரமாக இருக்கின்றோமே என்ற மன ஆதங்கத்தை அவருடன் உரையாடிய போது அவரிடம் அவதானிக்க முடிந்தது.
Comments