"எங்கே தண்ணீர் விழுகிறதோ, அங்கே புல் பூண்டு முளைக்கின்றது; எங்கே இரத்தத் துளி விழுகிறதோ, அங்கே புலிகள் தோன்றுவார்கள்" - திருச்சி வேலுச்சாமி
தமிழ்நாடு மாணவர், இளைஞர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த 'ராஜீவ்காந்தி கொலையும் தமிழர்கள் மீதான பழியும்' என்ற தலைப்பில் சென்னை தீ.நகரில் பொதுக் கூட்டம் ஒன்றினை கடந்த சில வாரங்களிற்கு முன்னர் நடத்தியிருந்தனர். அதில் உரையாற்றிய திருச்சி வேலுச்சாமி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
"எங்கே தண்ணீர் விழுகிறதோ, அங்கே புல் பூண்டு முளைக்கின்றது; எங்கே இரத்தத் துளி விழுகிறதோ, அங்கே புலிகள் தோன்றுவார்கள்" என்று பேசிய வேலுச்சாமி ஆவேசமாக தம்பி வருவான்! தம்பி வருவான்!! வீறு கொண்டு எழுவான்!!! ஈழம் மலர்ந்தே தீரும்! என்று கூறியபோது கூடியிருந்த கூட்டத்தினர் ஆர்பரித்து கரவோசம் எழுப்பினர்.
மக்களது கரவோசம் அடங்குவதற்கு முன்னரே தமிழக காவல் துறையினருக்கு எங்கிருந்தோ வந்த அவசர அழைப்பை அடுத்து திருச்சி வேலுச்சாமியை மேலும் பேசவிடாது அனுமதி நேரம் முடியும் முன்னரே கட்டாயப்படுத்தி வெளியேற்றினர்.
http://rajivgandhi-assassination.blogspot.com/
Comments