சிறீலங்கா அரசு மீது அழுத்தங்களை மேற்கொள்ளும் வல்லமை புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கு உண்டு

தனது பொருளாதார வளங்களை எல்லாம் எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாரி வழங்கி சிறீலங்கா அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. அதன் மூலம் அரசியல் யாப்பு மாற்றத்தையும் அது மேற்கொண்டுள்ளது.

இந்த யாப்பு மாற்றத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள அதே சமயம், அது எதிர்வரும் வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தனது பொருளாதாரச் சீரழிவுகள் மற்றும் அனைத்துலக சமூகங்களின் குற்றச்சாட்டுக்களை எல்லாம் புறம்தள்ளி சிறீலங்கா அரசு இதனை மேற்கொள்வதற்கான காரணம் வலுவானது.

அதாவது இது அவர்களின் உயிர்ப்பிரச்சனை, எதிர்வரும் ஐந்து வருடங்களில் மகிந்தவின் ஆட்சி முடிந்துபோனால் அது அவர்களின் ஆயுள் முடிந்து போவதற்கு சமனானது. ஏனெனில் தற்போதைய மகிந்த ராஜபக்ச அரசு மீதான போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்ள குற்றச்சாட்டுக்கள் மிக அதிகம். எனவே தான் சிறீலங்காவில் நீண்டகாலத்திற்கு நிலையான ஆட்சியை தக்கவைப்பதற்கு முயன்றுள்ள சிறீலங்கா அரசு, போர்க்குற்றம் சுமத்தப்பட்ட படை அதிகாரிகளை அனைத்துலக மட்டத்தில் தூதுவர்களாக நியமிப்பதன் மூலம் அவர்கள் மீதான கறைகளை கழுவி, அதன் மூலம் அரச அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள கறை
களையும் கழுவ முற்பட்டுள்ளது.

மேலும் புலம்பெயர் தமிழ் மக்களை அச்சுறுத்தி, அவர்கள் மீது திரைமறைவான வன்முறைகளை மேற்கொள்ளும் நோக்கத்துடனும் வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களை சிறீலங்கா அரசு இராணுவமயப்படுத்தி வருகின்றது. வடக்கு - கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ வன்முறைகளின் மூலம் தமிழ் மக்களை பேரழிவுக்கு உள்ளாக்கிய சிறீலங்கா அரசு, தற்போது புலம்பெயர் தமிழ் சமூகத்தின் மீது தனது பார்வையை திரும்பியுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள சிறீலங்கா தூதரகங்களில் நியமனம் பெற்றுள்ள மற்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ள போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என இனம்காணப்பட்ட படை அதிகாரிகளின் விபரம் வருமாறு:

மேஜர் ஜெனரல் சவீந்தர் சில்வா - போர்க்குற்றவாளி, முன்னாள் 58 ஆவது படையணி கட்டளை அதிகாரி, வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை படுகொலை செய்தவர் - ஐ.நாவுக்கான பிரதித் தூதுவர்.

மேஜர் ஜெனரல் சந்திரசிறீ - போர்க்குற்றவாளி, முன்னாள் யாழ் மாவட்ட கட்டளை அதிகாரி, யாழில் பல ஆயிரம் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமானவர் - ஐ.நாவுக்கான தூதுவர்.

மேஜர் ஜெனரல் பிரசன்னா டி சில்வா - போர்க்குற்றவாளி, சாலை வழியாக நகர்வை மேற்கொண்டு முள்ளிவாய்க்காலில் பெருமளவான படுகொலைகளை மேற்கொண்ட 55 ஆவது படையணியை வழிநடத்தியவர். தற்போது பிரித்தானியாவுக்கான துணைத்து£துவராக நியமனம் பெறவுள்ளார்.

மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் - போர்க்குற்றவாளி, வன்னிப் போரினை ஆரம்பித்த 57 ஆவது படையணியை வழிநடத்திய இவர், கடந்த ஆண்டு மே மாதம் வரையிலும் பொதுமக்கள் செறிவாக வாழ்ந்த பிரதேசங்கள் மீது தாக்குதலை நடத்திய படையணியை வழிநடத்தியவர். தற்போது ஜேர்மன் நாட்டுக்கான பிரதித்து£துவராக பணியாற்றி வருகின்றார்.

மேஜர் ஜெனரல் சாகி கலகே - போர்க்குற்றவாளி, வன்னிப்போரில் சிறப்பு படையணியை வழிநடத்தியவர். சிறுகுழுக்களாக சென்று பொதுமக்களை சிறைப்பிடித்த பின்னர் அவர்களை காட்டுப்பகுதிகளுக்குள் கொண்டு சென்று இந்த அணிகள் படுகொலை செய்திருந்தன.

மேலும் கலகேயின் கீழ் செயற்பட்ட சிறப்பு படையணியின் சிறு குழுக்களாக பணியாற்றிய சிறப்பு படையணி குழுக்களின் பல கட்டளை அதிகாரிகளையும் சிறீலங்காவில் ஜனநாயகத்திற்கான ஊடக
வியலாளர் அமைப்பு போர்க்குற்றவாளிகளாக இனம்காட்டியிருந்தது.

நடவடிக்கை படையணி -8 இன் கட்டளை அதிகாரி கேணல் ரவிப்பிரியா, 59 ஆவது படையணியுடன் இணைந்து இயங்கிய சிறப்புபடை றெஜிமென்ட் கட்டளை அதிகாரி கேணல் அத்துல கொடி
பிலி, 1ஆவது சிறப்புப்படை பற்றாலியன் கட்டளை அதிகாரி மேஜர் மகிந்த ரணசிங்கா, 2ஆவது சிறப்புப்படை பற்றாலியன் கட்டளை அதிகாரி மேஜர் விபுதிலகா இகலகே.

இந்த சிறப்பு படையணியின் கீழ் இயங்கிய சிறு சிறு கொம்பனி பிரிவுகளான, கொல்ஃப் கொம்பனியின் கட்டளை அதிகாரி கப்டன் சமிந்த குணசேகரா, றோமியோ கொம்பனியின் கவின்டா அபயசேகரா, எக்கோ கொம்பனியின் கட்டளை அதிகாரி மேஜர் கோசலா விஜகோன், டெல்ரா கொம்
பனியின் கட்டளை அதிகாரி லசந்தா ரட்னகேசரா ஆகியவர்களே போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பொதுமக்களையும், விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு உறுப்பினர்களையும் படுகொலை செய்ததில் முக்கிய பங்கு வகித்தவர்கள்.

இந்த சிறப்புப்படை பிரிவுகளில் கொல்ஃப் மற்றும் றோமியோ ஆகியவை 1ஆவது சிறப்பு படையணி பற்றாலியனின் கீழும், டெல்ரா மற்றும் எக்கோ ஆகியன 2ஆவது சிறப்பு படையணியின் கீழும் இயங்கி வந்திருந்தன. இவர்கள் வெளிப்படையாக இனங்காணப்பட்டவர்கள், ஆனால் இனங்கணப்படாத பெருமளவான படையினரும், படை அதிகாரிகளும் உள்ளனர்.

சிறீலங்கா மீதான போர்க்குற்ற விசாரணைகள் நிறைவுபெறும்வரை சிறீலங்காப் படையினருக்கான நுளைவு அனுமதிகளையோ, அவர்களின் இராஜதந்திர பணிகளையோ அனைத்துலக சமூகம் நிராகரிக்க வேண்டும் என்பதே யதார்த்தமானது. உதாரணமாக இந்தியாவில் காஷ்மீர் பகுதியில் பணியாற்றிய படை அதிகாரிகளுக்கான நுளைவு அனுமதியை கடந்த மாதம் கனேடிய அரசு நிராகரித்திருந்தது. கடந்த வாரம் சீனாவும் அதனை மேற்கொண்டிருந்தது.

இந்திய படை அதிகாரிகளுக்கான நுளைவு அனுமதியை சீனா நிராகரித்தது இரு நாடுகளுக்குமிடையில் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறீலங்காவை பொறுத்வரையில் படை அதிகாரிகள் மீது மட்டுமல்லாது, அரச தலைவர், பாதுகாப்புச் செயலாளர் உட்பட பெருமளவான அரச அதிகாரிகள் மீதும் போர்க்குற்றச்சாட்டுக்கள் உள்ளன. ஆனால் அது தொடர்பில் எந்தவொரு மனித உரிமை அமைப்போ அல்லது நாடோ விசாரணைகளை இதுவரை ஆரம்பிக்கவில்லை என்பது தான் சிறீலங்காவுக்கு கிடைத்துள்ள அனுகூலம்.
இந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்ள மகிந்த செல்வதற்கான துணிச்சலையும் இது தான் அவர்களுக்கு கொடுத்துள்ளது.

மேலும் அனைத்துலக சமூகத்தின், குறிப்பாக மேற்குலக சமூகத்தின் அழுத்தங்களை இந்தியாவின் ஊடாக சமநிலைப்படுத்துவதிலும் சிறீலங்கா தொடர் வெற்றிகளைப் பெற்றுவருகின்றது. ஆனால் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள ஆதிக்கப்போட்டிகளில் இந்தியாவின் ஆளுமை நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடியாது, என்பதுடன் இந்துசமுத்திர பிராந்தியத்தின் ஆளுமை தொடர்பில் பேரம்பேசும் தகமையையும் இந்தியா இழந்துள்ளது என்பதே தற்போது யதார்த்தமானது.

எனவே சிறீலங்கா அரசு மீதான அழுத்தங்களை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்கள் புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கு தற்போதும் சாதகமாகவே உள்ளன. அதனை செவிமடுக்கும் நிலையில் அனைத்துலக சமூகமும் உண்டு. அதனைத் தான் அண்மையில் நியூசிலாந்து நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பின் அறிக்கையும் வலியுறுத்தியுள்ளது.

-வேல்ஸ் இல் இருந்து அருஷ்

நன்றி:ஈழமுரசு

Comments