சிறிலங்காவில் பங்காளிச் சண்டை


நாம் எதிர்பார்த்தபடி ஈழத்தமிழின அழிப்பில் ஒன்றிணைந்தவர்கள் தமக்கிடையில் அடிதடியில் ஈடுபடுகின்றனர் இது படுகொலையிலும் முடிந்துள்ளது நாடு சிரிக்கும் அளவுக்குச் சிறிலங்காவில் பங்காளிச் சண்டை முனைப்புப் பெற்றுள்ளது கொழும்புப் பத்திரிகைகள் அடுக்கி வாசித்தாலும் இது பற்றிய செய்திகள் காட்டுத் தீ போல பரவுகின்றன

சிறிலங்காவின் மிகப் பொரிய பங்காளிச் சண்டை என்று வர்ணிக்கப்படும் சரத் பொன்சேகா – மகிந்த ராஐபக்ச மோதல் இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது இந்த மோதலைத் தனது அரசியலுக்குப் பயன்படுத்தும் உத்தேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொன்சேக்காவைக் காப்பாற்றப் போவதாகச் சூளுரைத்துள்ளார்

தன்னையே பாதுகாக்க முடியாத ரணில் எப்படி இன்னொருவரைக் காப்பாற்றப் போகிறாரோ தெரியவில்லை கைக்கெட்டிய வெற்றியைத் தோல்வியாக மாற்றும் திறமைசாலி என்று ரணில் பற்றிக் குறிப்பிடுவார்கள் இது மீண்டும் அரங்கேறும் வாய்ப்பு இருக்கிறது

போர்வெற்றி யாருடைய தலைமையில் ஏற்பட்டது என்ற இழுபறி இன்னும் முடிவுக்கு வரவில்லை நான் தான் வெற்றிக்கு காரணம் என்னால் தான் இந்திய ஆதரவைப் பெற முடிந்தது நான் தான் போர் நடவடிக்கைக்குப் பொறுப்பானவன் என்கிறார் பாதுகாப்புச் செயலரும் போர் குற்றவாளியுமான கொத்தபாயா ராஐபக்ச

நான் தான் படையினரை வழி நடத்தினேன் வெற்றிக்கு நான் தான் முழப்பொறுப்பு என்கிறார் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா இராணுவ வெற்றியை அரசியல் இலாபமாக்குவதில் ஏற்பட்ட பங்காளிச் சண்டை இன்று சர்வதேச விவகாரமாகி விட்டது

அமெரிக்காவில் இருந்து இத்தாலி வந்த சரத் பொன்சேக்காவின் இரு மகள்களும் தலைநகர் ரோமில் ஒரு பேரணியை நடத்தியுள்ளனர் இத்தாலி வாழ் சிங்களவர்களை ஒன்றுகூட்டித் தகப்பனை மீட்கும் போரைத் தொடங்கியுள்ளனர் முன்னாள் கிரிக்கெட் வீரரும் இப்போதைய பாரளுமன்ற உருப்பினருமான அர்ச்சுனா ரணத்துங்கா மேற்கூறிய நிகழ்ச்சியில் முக்கிய பங்கேற்றார்

சரத் பொன்சேக்கா – மகிந்த ராஐபக்ச மோதலுக்கு அடிப்படைக் காரணம் இதுவல்ல. அது வேறு விவகாரம் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன பாரளுமன்ற உறுப்பினரான சரத் பொன்சேக்கா கேட்ட முதற் கேள்வி பாரதூரமான குற்றச்சாட்டாக அமைந்துள்ளது

முள்ளிவாய்க்காலில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 200 கிலோ தங்கம் எங்கே என்று அவர் பாரளுமன்றத்தில் கேட்டார் தவிர்க்க முடியாத காரணங்களுக்காகச் சில சமயங்களில் நேர்மையாக நடக்கும் பிறவித் திருடன் மகிந்த ராஐபக்சவுக்குப் பொறுக்க முடியாத கோபம் வந்து விட்டது

1994ல் நடந்த சுனாமியில் நிவராணப் பணமாகச் சேர்ந்த 74 கோடி ரூபா பணத்தை தனது சொந்த வங்கிக் கணக்கில் வைப்புச் செய்தவர் தான் மகிந்த ராஐபக்ச இந்தப் பணத்தை மீட்பதற்காக உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது நினைவில் இருக்கலாம்

தலைமை நீதி அரசர் சரத் என். சில்வா ஏதோ காரணங்காட்டி மகிந்தரைக் காப்பாற்றினார் உண்மையில் இந்த மோசடியில் குற்றவாளியாகக் காணப்பட்டு சிறை செல்ல வேண்டியவர் இன்று சனாதிபதியாகி விட்டார்.

சரத் பொன்சேக்கா பாரளுமன்றத்தில் குறிப்பிடப்பட்டது தமிழ் மக்களுடைய சொத்து தமிழீழ வைப்பகத்தில் அடைவு வைக்கப்பட்ட நகைகளும் தமிழீழ வைப்பகத்தில் பொறுப்பாகக் கொடுக்கப்பட்ட தங்கமுமாக இந்த 200 கிலோ தங்கம் இடம்பெறுகிறது

தங்கம் பற்றிய கேள்விகளுக்கு மகிந்த ராஐபக்சவின் தம்பி பசில் ராஐபக்ச அரைகுறை பதில் கூறினார் முள்ளிவாய்க்காலில் கைப்பற்றப்பட்ட தங்கம் பத்திரமாக கொழும்பு வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலதிக விபரங்களைக் கூற அவர் மறுத்துவிட்டார் யாருடைய பெயரில் 200 கிலோ தங்கம் வைக்கப்பட்டுள்ளது எந்த வங்கியில் வைக்கப்பட்டுள்ளது போன்ற முக்கிய விடயங்களை வெளியிடப் பசில் மறுத்து விட்டார்.

சுனாமி நிதியைப் போல் தமிழர் சொத்து ராஐபக்ச குடும்பத்திற்குச் சொந்தமாகி விட்டதா என்ற அச்சம் ஈழத் தமிழர்களிடம் இருந்து திருடப்பட்ட ஒரு தொகுதி தங்க நகைகளைப் பங்கீடு செய்வதில் ஏற்பட்ட முறுகலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் 2010 செப்ரெம்பர் நடுப்பகுதியில் இது நடந்துள்ளது

மூன்று படையினர் ஒரு காவல்துறையினன் அடங்கிய நால்வர் திருடப்பட்ட 500 கிராம் தங்கத்தைப் பங்கீடு செய்வதில் ஈடுபட்டனர் வவுனியா மாவட்டம் ஈரப்பெரிய குளத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில் கெப்பிற்றிக் கொல்லாவையைச் சேர்ந்த திமது பிரியங்க வயது 23 என்ற படையாள் சுட்டுக்கொள்ளப்பட்டார்

கொல்லப்பட்டவர் படையில் சேர முன் புத்த பிக்குவாக இருந்தவர் என்றும் புத்தவிகாரையில் நடந்த படை ஆட்ச்சேர்ப்பில் தானும் படையில் இணைந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது மதவாச்சிப் காவல் நிலையத்தில் பொது மக்கள் கொடுத்த புகாரை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள் விசாரணைகளை முடக்கி விட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட நால்வரையும் விசாரித்த போது இந்தப் பங்கீட்டு விவகாரம் தொடர்பான பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இடம் பெயர்தோர் முகாம்கள் அமைந்துள்ள செட்டிக்குளம் மெனிக்பாம் முகாமில் பாதுகாப்புக் கடமையில் இருந்த போது கூடாரங்களில் வாழ்ந்த மக்களிடம் இருந்து தாங்கள் கொள்ளையிட்டதாகவும் இன்னும் பல படையாட்கள் நகைக் கொள்ளையில் ஈடுபட்டதாகவும் கைது செய்யப்பட்டோர் தெரிவித்தனர்

இடம் பெயர்ந்தோர் முகாம்களில் நடந்த பரவலான திருட்டுக்களும் வழிப்பறிக் கொள்ளைகளும் இது வரை காலமும் மூடு மந்திரமாக இருந்துள்ளன அச்சம் காரணமாக முகாம் வாசிகள் முறைப்பாடு செய்யாமல் விட்டுள்ளனர்

பங்காளிகள் பகையாளியானால் தானாகவே வெளிவரும் என்று சொல்வார்கள் அது தான் இப்போது நடக்கின்றது கலவெல்ல என்ற தென்பகுதிக் கிராமத்தில் நடந்த இன்னொரு சம்பவத்தில் கொள்ளையிடப்பட்ட ஈழத் தமிழர்களின் தங்க நகைகள் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது வன்னிக் களமுனையில் பங்காற்றிய இரு படையாட்கள் தாம் கொண்டுவந்தவற்றைப் பங்கிடுவதில் முரண்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இருவரும் அமைதியாக ஒரு தொகுதி நகைகளை எட்டு லட்சம் ரூபாவுக்கு விற்று வந்த பணத்தை சம அளவில் பங்கிட்டுள்ளனர் திருட்டு நகை என்பதால் மிகவும் இரகசியமான முறையில் மலிவு விலையில் விற்றுள்ளனர்

மிகுதி நகைகளைப் பாதுகாப்பாக மண்ணில் குழி தோண்டிப் புதைத்த குடும்பத்திற்குச் சொந்தமான நிலத்தில் அவை புதைக்கப்பட்டுள்ளன சில நாட்களுக்குப் பின்பு அந்தக் குடும்பத்தைக் சேர்நத ஒரு பெண் தங்க கை வளையல் கழுத்துச் சங்கிலி அணிந்தபடி விகாரைக்குச் சென்றாள் இது பொது மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தைக் கிளப்பியது இரு படையினரும் வவுனியாவுக்கு வந்நு விட்டதால் அவர்களுக்குக் கடிதம் மூலம் தகவல் வழங்கப்பட்டது

இருவரும் உடனடியாக கலவல்ல கிராமம் வர முடியவில்லை ஆனால் பொறாமையில் வெந்து போன அயலவர்கள் காவல் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளனர் காவல்துறையினர் விசாரணையை முடக்கி விட்டபின் மிகுதி நகைகள் மீட்கப்பட்டு நீதி மன்றம் கொண்டு செல்லப்பட்டுள்ளன

ஈரப் பெரியகுளம் சம்பவம் போல் கலவல்லச் சம்பவமும் ஊடகத் துறையினரின் கவனத்தை ஈர்ந்துள்ளது வெளிவராத இன்னும் பல இது போன்ற கொள்ளைச் சம்பவங்கள் இருக்கலாம் என்று பரவலாக நம்பப்படுகிறது

புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றுகிறோம் என்று கூறும் சிங்கள இராணுவம் உண்மையில் இடம்பெயர்ந்து வேகமாக ஓடிய வன்னி மக்கள் தமது வீட்டுக் கோடியில் புதைத்து வைத்த நகைகளைத் தான் கூடுதல் அக்கறையோடு தேடுகிறார்கள் இது மறுக்க முடியாத உண்மை

இன்னொரு பகற் கொள்ளை இப்போது வன்னியில் அரங்கேறுகிறது மீள்குடியேற்றம் என்ற பெயரில் சிங்களக் குடியேற்றம் வன்னியின் வளமான பகுதிகளில் நடைபெறகிறது ஈழத் தமிழர்கள் சின்னஞ் சிறிய நிலப்பரப்புகளுக்குள் முடக்கப்படுகின்றனர்

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல் விடுதலைப் புலிகளின் நிதிப் பொறுப்பாளர் தமிழேந்தி அப்பா கட்டியெழுப்பிய அறிவியல் நகரம் இனத்துரோகி குமரன் பத்மநாதனுக்கு துரோகத்தின் பரிசாக அரசினால் வழங்கப்பட்டுள்ளது

200 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட அறிவியல் நகரில் ஒரு சர்வதேச தரத்திலான தமிழ்ப் பல்கலைக் கழகத்தை அமைக்கும் திட்டத்தை மாவீரன் கேணல் தமிழேந்தி நடைமுறைப்படுத்தினார் பெரும் பொருட் செலவில் அவர் கட்டிடத் தொகுதிகளைக் கட்டினார் உலகின் பல முன்னணி கல்வியாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திய பூர்வாங்க வேலைகளைச் செய்தார்

ஈழத் தமிழ்ச் சமூகம் ஒரு அறிவார்ந்த கற்றறிந்த இனமாக வளர்ச்சி அடைய வேண்டும் என்பது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் கனவு இதற்கு அமைவாகத் தமிழேந்தியர் அறிவியல் நகரை உருவாக்குவதில் அல்லும் பகலும் உழைத்தார்

ஈழத் தமிழனின் கல்வி தகமையைத் தட்டிப் பறிப்பதில் காலம் காலமாக ஈடுபடும் சிங்கள அரசுகள் இறுதியாக அறிவியல் நகரிலும் கை வைத்துள்ளன தமிழர்களுக்கு எதிரான சதிவேலைகள் நடக்கும் மையமாக அறிவியல் நகரம் அமைவதை எண்ணி நெஞ்சம் வெடிக்கின்றது

வன்னியில் பல தசாப்தம் வாழ்ந்து அதன் பரிணாம வளர்ச்சியில் பங்கேற்று வாழ்ந்த ஒருவனால் அங்கு இப்போது நடக்கும் மன்னிக்க முடியாத காட்சிகளை ஏறெடுத்துப் பார்க்க பார்க்க முடியவில்லை காலம் ஒரு நாள் மாறும் எமது கவலைகள் எல்லாம் தீரும் என்று கூறி நிறைவு செய்கிறோம் துரோகத்தின் பரிசு மரணம் என்ற வேத வாக்கையும் இவ் விடத்தில் நினைவு கூறுகிறோம்.

- சங்கதிக்காக செண்பகத்தார்

Comments