இலங்கை அரச படைகளால் சமீபத்தில் அடித்துக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விடுதலைப் புலி நபர் ஒருவரின் படம் வெளியாகியிருந்ததை யாவரும் அறிந்ததே. தென்னை மரம் ஒன்றோடு சேர்த்து கட்டிவைத்து அடித்துக் கொலைசெய்யப்பட்ட இப் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இதன் காணொளி வெளியாகியுள்ளது.
இதனை இலங்கையைத் தளமாகக் கொண்டு இயங்கும் War Without Witness என்கிற அமைப்பு கடந்த வருடம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது இலங்கை அரசினால் மனிதப் பேரழிவுகளும், யுத்தக் குற்றங்களும் நடத்தப்பட்டன என்று தீவிரமாகப் பிரசாரம் செய்து செய்து வருகின்றது. இந்த அமைப்பே தற்போது இக் காணொளிகளை வெளியிட்டுள்ளது.
Comments