சீனா வழங்கிய வெப்ப உலைகளில் போராளிகளின் சடலங்கள் அழிக்கப்படுகின்றன – வேடிக்கை பார்க்கிறது உலகம்

சிறீலங்கா இராணுவத்தின் தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப்புலிகள் 10,000 பேரும் தகவல்களை அறியும் பொருட்டு தினமும் துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த துன்புறுத்தல்களின் முடிவில் அவர்களை படுகொலை செய்யும் இராணுவத்தினர் சடலங்களை எரித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
http://eeladhesam.com/images/breaking/poraalikal.jpg
தடையங்களை முற்றாக அழிக்கும் நோக்கத்திற்காக சிறீலங்கா இராணுவம் வாயு அறைகளை கொள்வனவு செய்துள்ளது. சீனாவிடம் இருந்து றொக்சி காஸ் சேம்பர் எனப்படும், தொகுதிகளை சிறீலங்கா அரசு கடந்த வருடம் கொள்வனவு செய்துள்ளது.

தொற்றுநோய்க்கு உள்ளான விலங்குகளை அழிப்பதற்கு என கொள்வனவு செய்யப்பட்ட இந்த உபகரணங்களை பயன்படுத்தி தமிழ் மக்களை படுகொலை செய்து தடையங்களை அழித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

3000 பாகை செல்ஸ்ஸியஸ் வெப்பத்தை கொடுக்கும் இந்த உலைகளில் மனித உடல்கள் இடப்படும்போது வெறும் சாம்பலே எஞ்சும். விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்படுபவர்களை படுகொலை செய்யும் சிறீலங்கா அரசு இந்த உலையில் இட்டு சாம்பலாக்கி தடையங்களை அழித்து வருவதுடன், சில சந்தர்ப்பங்களில் உயிருடனும் அவர்களை அதில் போட்டு கொல்வதாக ஊள்ளூர் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வடபகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப்பதியல் இந்த திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது. அங்கு வெளியார் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. பெருமளவான போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்களும் கொல்லப்பட்டு அழிக்கப்பட்ட பின்னர் சிறீலங்கா அரசு வெள்நாட்டு பிரதிநிதிகளை எல்லாப் பகுதிகளுக்கும் செல்ல அனுமதிக்கும் என எதிர்த்தரப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

30,000 தமிழ் மக்களை வெளிப்படையாக சிறீலங்கா அரசு படுகொலை செய்ததை வேடிக்கை பார்த்த உலகம் இதனையும் தடுக்கப்போவதில்லை எனவும், தாம் வலுவிழந்தவர்களாக மாறிவிட்டதாகவும் வன்னிப் பகுதி தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Comments