இலங்கைக்கு வெளியே உள்ள புலம்பெயர் மற்றும் அகதிகளை நலன்புரி முகாம்களில் அடைக்க ஐ.நா.ஆலோசனை..?

இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் மிகவும் மகிழ்ச்சி பொங்கும் அறிவிப்பாகும்..இப்பொழுதாவது பான் கீ மூன் நல்ல ஒரு ஆலோசனை வழங்கி உள்ளார் மகிந்தா ராஜபக்சே அரசுக்கு என்று கருதலாம்.. மேலும் இந்த உறுதிப்படுத்தப்படாத இந்த செய்தி உண்மையாகவே இருக்கும் என்று நோக்கில், இந்த செய்தி இவ்வாறு கூறுகிறது..." உள்நாட்டில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், அகதிகளாக வெளிநாடுகளில் தங்கியிருப்போர் நாடு திரும்புவது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும், குறிப்பாக இந்தியா, மலேசியா, மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கையர்கள் ( இலங்கையர்கள் என்றால் சிங்களவர்கள் என்று அர்த்தம் கிடையாது...) நாடு திரும்புவது பற்றித் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.." ! இந்த மூன்று நாடுகளில் உள்ள இலங்கையர்கள் மிகவும் தொந்தரவாக, அரசுக்கு பல நெருக்கடிகளை உருவாக்குபவர்களாக அந்த நாட்டு மக்கள் கருதுகிறார்கள்...கிடைக்கும் இடத்தில் ஒழுங்காக இருக்காமல், அது சரியில்லை..மின்சாரம் இல்லை..வேலை இல்லை..கக்கூஸ் இல்லை என்று சதா குடைச்சல் கொடுப்பவர்களாக கருதுகின்றன இந்த நாட்டு அரசுகள்..அதிலும் குறிப்பாக இந்திய அரசு மிகவும் தர்மசங்கட நிலையில் உள்ளது..இந்தியாவில், தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்கள் குறித்து தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அறிஞர்கள் திருப்தி அடையவில்லை என்று அரசு கருதுகிறது..!

மலேசியா, சீனா ( அதுதான் ஹாங்காங்...இதோ ஏதோ சமீபத்தில் விடுதலை பெற்ற நாடு போல சொல்கிறார்கள்..சீனாவை உசுப்பேத்த...? ) நாடுகளில் உள்ள இலங்கையர்கள் ஏன்..? இன்னும் தங்கள் நாட்டில் இருக்க வேண்டும். அதுதான் யுத்தம் நடந்து முடிந்துவிட்டது, எங்களால் ஆன உதவியை இலங்கை அரசுக்கு செய்து விரைவில் யுத்தத்தை முடிக்க வைத்தோம்..பிறகு எதற்கு இங்கு அகதிகள் என்று..பேசாமல் இலங்கை செல்ல வேன்டாமா ? என்று இந்த நாட்டு மக்கள் கருதுகிறார்கள் எனவே மக்களின் விருப்பங்களை இந்த அரசுகள் ஐ.நா.மன்றத்திடம் சொல்லப்போக, ஐ.நா.வும் தற்பொழுது ஆலோசித்து வருகிறது..இவ்விடயம் குறித்து.

இந்தியா என்று மட்டும் கூறினால்தானே கூச்சல் போடுவார்கள்.இந்த ஏதிலி உரிமம் பெற்றவர்கள்..இவர்களுக்கு துணையாக மனித உரிமை அது இது என்று ஊளையிடுவார்கள்..தமிழ் உணர்வாளர்கள் என்று சொல்லப்படுவர்களும், மனித உரிமை காப்பாளர்களும். எனவே மலேசியா மற்றும் ஹாங்காங் ( அதுதான் சீனா..சீனா என்று சொல்ல வரமாட்டேன்கிறது...) நாடுகளை சேர்த்துக் கொண்டால் ஒன்றும் பிரச்சனை வராது என்று கருதியே இந்த காய் நகர்த்துதல்...இருக்கட்டும் இவை..! மேலும் செய்தி கூறுகிறது இவ்வாறு..

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவர் மற்றும் இலங்கைக்கான துணைப் பிரதிநிதி கூறியதாக கொழும்பு செய்தி தெரிவித்துள்ளது ?! என்றும், உலகெங்கிலுமுள்ள 64 நாடுகளில் சுமார் 14 லட்சம் அகதி உரிமம் பெற்றவர்கள் இருக்கிறார்கள். ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, யூகே, சுவிஸ், யு.எஸ், கனடா என்று நீளும் நாடுகளில் அதிக அளவில் இலங்கையர்கள் வசித்து வருகின்றனர்..." எனவே மொத்தமாக இவர்கள் அனைவரையும் ஏதிலி உரிமம் பெற்ற அதிகாரத்தை திரும்ப பெற்றுக்கொண்டு, அனைவரையும் இலங்கை செல்லுமாறு கூறினால் போய் தானே ஆக வேண்டும்..!

இப்படி வெளிநாடுகளில் வாழும் அணைத்து இலங்கையர்களையும் இலங்கைக்கு கொண்டு சென்றுவிட்டால்..( அதாவது இலங்கைக்கு திருப்பி அனுப்பி விட்டால்...) பிறகு எப்படி மனித உரிமை மீறல், யுத்த குற்றம், நாடு கடந்த தமிழீழ அரசு என்று கூற முடியும்..? இலங்கைக்கு வெளியே நின்று கொண்டு இலங்கை அரசை எதிர்த்து போராட்டம், கருத்து என்றா கூறிவருகிறீர்கள்..? இலங்கைக்கு வந்து விட்டால் இருக்கவே இருக்கிறது மனிக் முகாம்கள், அரசின் நலன்புரி மைய்யங்கள்.

பிறகு இலங்கை அரசு புலம் பெயர் மக்களின் குடும்ப உறுப்பினர்களை முறையாக பதிவு செய்யும்..இளைஞர்கள் அதுவும் குறிப்பாக, கருத்து சொல்லும் இளைஞர்களாக இருந்தால் அரசின் ரகசிய முகாம்கள் இருக்கிறது அங்கு, அணைத்து வசதிகளும் உள்ளன..மேலும் இளைஞிகள் அதுவும் மிக அழகாகவே இருப்பார்கள்..அவர்களையும் புலி உறுப்பினர்களாக, இனி மாறுவார்கள் என்று அரசு முன்கூட்டியே உணர்ந்து அவர்களையும் பல ரகசிய முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுவார்கள்..எஞ்சியவர்கள் இலங்கை அரசு தரும் இரும்பு கூரையை வைத்துக்கொண்டு வீடு கட்டி மகிழ்ச்சியாக இருக்க வேண்டியதுதானே..! ஒட்டுமொத்த இலங்கைப் பிரச்சனைகளையும் சரி செய்த மாதிரியும் ஆயிற்று..வேலையும் சுத்தமாக செய்தது போலவும் ஆயிற்று..என்று ஐ.நா.மன்றத்தில் ஆலோசித்து வருகிறார்கள் ஐ.நா.உயர் அதிகாரிகள் பான் கீ மூன் அவர்களுடன். ஐயா, பான் கீ மூன் அவர்களே இந்த வேலையையாவது ஒழுங்காக செய்யுங்கள்..
செய்வார்கள் என்று கருதுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்...!

ஈழதேசம் செய்திக்குழு

Comments