மாவீரர் நாளுக்கு புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்க சிங்கள உளவுத்துறை சதி திட்டம்: மக்களே விழிப்பாக இருங்கள்

தமிழர் தாயகத்தை எதிரியிடம் இருந்து காத்து அங்கு தனியாட்சி நடத்தி வந்த விடுதலை புலிகளின் கட்டமைப்பு தமது மண் மீட்பு மண் காக்கும் போரில் தம் உயிர்களை நீர்த்த போராளிகளை மாவீரர் நாளில் நினைவு கூறுவது வழமை.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgY8nLhWXzInTCkJoVMEERPtmfEFfU6r8sq3JapQSRQANt-us5rYfgs_4H_BNY1N-2YoyUwpzjjrwRLVkqECqL8HrZgOMt0tPqYpbCOycEXaI1XTpey51-r3wZdoTqZR9FduGVKapZdarxU/s1600/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%82.jpg

அவ்வாறாக வரும் கார்த்திகை மாதம் இருபத்தி ஏழாம் திகதி ஐரோப்பாவில் வருகை தந்து தமிழ் மக்கள் மத்தியில் பேச இருந்த சீமானை சிறையில் அடைத்தது தமிழக அரசு.

அவரது பேச்சின் வாயிலாக தமிழ் மக்கள் மீண்டும் புலிகள் பக்கம் அவர்களின் உரிமை போர் பக்கம் தூண்டபட்டு அந்த போராட்டம் துளிர்க்கும் என நம்புகிறது அந்நிய பேரினவாத படைகள் அரசுகள். தமிழ் ஈழ விடுதலை போரில் பங்கெடுத்து சிறை கூடத்தில் இருக்கும் முக்கிய போராளி தலைவர்களை புலம் பெயர் நாடுகளிட்க்கு அனுப்பி அங்கு தமிழ் மக்கள் மத்தியில் புதிய குழப்பத்தை பிரிவினையை உருவாக்கவும் புலிகள் இவ்வாறு செய்தார்கள் என்ற சில காணொளி காட்சிகளை வெளியிடவும் சிங்கள புலனாய்வு துறையினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வாறாக சிறை வைக்கபட்ட போராளிகள் சிலர் புலம் பெயர் நாடுகளிட்க்கு அந்த நாட்டு சிங்கள தூதரகங்கள் வாயிலாக நேரடியாக இயக்கபடுகின்றனர்.

எதிர் வரும் மாதம் வரவிருக்கும் மாவீரர் தினத்திற்க்கு முன்னர் தமிழ் ஈழத்திற்க்கு ஆதரவாக செயல்பட்டு வரும் முக்கியஸ்தர்களை புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற போர்வையில் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளன. இதில் முக்கியமாக பிரான்ஸ் சுவிஸ் லண்டன் நாடுகளே முதன்மை வகிக்கின்றன.

இவர்களின் இந்த கூட்டு குழப்ப அறிக்கைகளை வெளியீடு செய்யும் நோக்குடன் சில இணைய தளங்கள் இவர்களின் பேரம் பேச்சுக்கு இணங்கியுள்ளன. ஒன்று பட்டு உருத்திரகுமார் பின்னால் அணி திரளும் தமிழ் மக்களை இரண்டுபட வைத்து அதன் ஊடாக தாம் நினைத்தை சாதிக்க முனையும் இலங்கை அரசின் இந்த நாசகார சதி நடவடிக்கையில் இருந்து தமிழர்கள் தப்பி பிழைக்க விழிப்பாக இருக்கும் படி கேட்டு கொள்ளபடுகின்றனர்.

கோஸ்டி மோதலகளை உருவாக்கி அதன் வாயிலாக நிகழ்வுகளில் குழப்பத்தை உருவாக்கவும் இவர்கள் முனைந்து வருகின்றனர். மக்களே விழிப்பாக இருங்கள் ..விரைவில் உளவாளிகள் உங்கள் முன் குழப்பங்களுடன் ....! ஆணி வேர் அறுக்க வரும் இந்த அந்நியர்களை நான் வேரோடு தறிப்போம் ..!

Comments