கனடியத் தமிழர் தேசிய அவை மக்கள் கருத்தாடல் அரங்கம் – 2011

கனடாவில் சனநாயகக் கட்டமைப்பாக உருவாக்கப்பட்டு, இயங்கிக்கொண்டிருக்கும் கனடியத் தமிழர் தேசிய அவை கனடா வாழ் தமிழ் மக்களோடு இணைந்து வழங்கும் மக்கள் கருத்தாடல் நிகழ்வு.



* மக்கள் ஆகிய உங்கள் அனைவரினதும் கருத்துக்களை உள்வாங்கி, ஓர் தூரநோக்கான கட்டமைப்பாக தமிழர் தேசிய அவையினை உருவாக்க உங்கள் அனைவரினதும் வருகையினை எதிர்பாக்கின்றோம்.

* இந்த மக்கள் அரங்கின் முதன்மையான குறிக்கோள், மக்கள் அவையை மக்களின், மக்களுக்கான அவையாக மாற்றுவதாகும்.

* மேலும் உலக தரத்திற்கிணையான அமைப்பாக ஏனைய பல்லின மக்களிற்கு எடுத்துக்காட்டான அமைப்பாக முதன்மைப்படுத்துவதற்கான மக்களின் கருத்துக்களை உள்வாங்கும் நிகழ்வாகும்.

* வெளிப்படையான ஒளிவுமறைவற்ற திட்டங்களையும் எதிர்கால வரவுகளையும் எம் மக்களோடு பகிர்ந்து அவர்தம் கருத்துக்களையும் உள்வாங்கி, சிறப்பான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்தல்.

* எமது அடுத்த தலைமுறை இத்தேசத்தில் பலதுறைகளில் மிளிர மக்கள் அவை ஆற்றக் கூடிய காத்திரமான பங்களிப்பு பற்றிய மக்களின் கருத்தினை உள்வாங்கல்.

* எம்தேசத்தின் கலைகளையும் இலக்கியங்களையும் அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்வதற்கான மக்கள் பாலமாக மக்கள் அவையை உருவாக்குதல்.

காலம்: ஞாயிற்றுக்கிழமை, மாசி 20, 2011

நேரம்: மாலை 4 – 8 மணி

தொடர்புகளுக்கு: 1-866-263-8622

இணையத் தளம்: http://www.ncctcanada.ca

இடம்: Vimika Banquet Halls, 1959-B Finch Ave West, Toronto, Ontario

Comments