34 பேர் அரசமைப்பை ஏற்காமல் இருந்ததாக தெரிவித்திருந்த பொ.பால்ராஜன் இப்பொழுது இணையத்தளம் ஒன்றுக்கு செவ்வி வழங்கிய போது 31 பேரே அரசமைப்பை ஏற்காமல் இருப்பதாக தெரிவித்திருக்கின்றார்.
இந்த செவ்வியில் தன்னால் அரசமைப்பை ஏற்க்காதவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஊடகங்களுக்கு தான் அனுப்பவில்லை எனவும் தெரிவித்தார். இந்த கடிதம் நாடு கடந்த அரசால் நடாத்தப்படும் நாடு கடந்த அரசின் இலச்சனையை தாங்கிய ஊடகங்களிலேயே முதலில் வெளியிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தம்மால் அனுப்பப்படும் கடிதத்தை பாதுகாக்க முடியாத நிலையில் நாடு கடந்த அரசால் விற்பனை செய்யப்படும் தேசிய அட்டைக்கான ஆதாரமாக புலம் பெயர் தமிழ் மக்களிடம் இருந்து பெறப்படும் கடவுச்சீட்டு பிரதியை எவ்வாறு பாதுகாக்கமுடீயுமென மக்கள் வினாவுகின்றனர்.
கடந்த வருடம் நடைபெற்ற நாடு கடந்த “தமிழீழ” அரசிற்கான தேர்தலில் வெற்றியீட்டிய 3 பிரித்தானிய தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மிரட்டல் காரணமாக தேர்தலில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://tamilvoice.dk/tamil/?p=4184
Comments