இந்திய பயணத்தை தொடர்ந்து 34 மக்கள் பிரதிநிதிகளை வெளியேற்றுகிறது நாடு கடந்த தமிழீழ அரசு

சனநாயக விழுமியங்களுக்கு மாறாக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இறங்கியுள்ளதாக அதன் அவைத்தலைவர் என கூறிக்கொள்ளுபவர் தெரிவித்துள்ளதாக நாடு கடந்த அரசின் இணையங்கள் தெரிவித்திருக்கின்றன.


நாடு கடந்த தமிழீழ அரசு தமக்கான அரசமைப்பை முழுமைப்படுத்தாத காரணத்தால் நீண்ட காலம் தமிழீழ விடுதலைக்காக செயற்பட்ட செயற்பாட்டாளர் பலர் நாடு கடந்த அரசிற்கான உறுதிமொழி எடுக்க மறுத்துவந்துள்ளனர்.

நாடு கடந்த அரசின் அரசமைப்பை பெற்றுக்கொள்வதற்காக நாம் முயன்ற போது அரசமைப்பு இன்னும் முழுமையாக்கப்படவில்லை என்பதை தெரிந்துகொண்டோம்.

முழுமை பெறாத அரசமைப்பை ஏற்றுக்கொண்டு உறுதிமொழி எடுக்காதவர்களை தாம் இப்பொழுது வெளியேற்றப்போவதாக அவைத்தலைவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலரின் இந்திய பயணத்தை தொடர்ந்தே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இந்தவேளையில் நாடு கடந்த தமிழீழ அரசிற்கும் இந்திய புலனாய்வு அமைப்பிற்கும் தொடர்பு இருப்பதாக கொழும்பு ஊடகம் தெரிவித்திருந்தது.

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலை இந்தியாவில் நடத்த அனுமதிக்க முடியாது! – மத்திய அரசு
16 Nov 2010

டெல்லி: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல்கள் இந்தியாவில் நடத்தப்படும் பட்சத்தில் அதற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்டமாகப் பார்க்கப்படும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கு, உலகம் முழுக்க பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா போன்ற நாடுகளில் தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டதைப் போல இந்தியாவிலும் நாடுகடந்த அரசாங்கத்துக்கான தேர்தல் நடத்தப்படும் அந்த அரசின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் அண்மையில் அறிவித்தார்.

கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் தொடர்பாளரிடம், இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, “இவ்வாறான தேர்தல் எதையும் இந்தியாவ்ல் நடத்த முடியாது. அதனை இந்திய அரசு அனுமதிக்காது. மீறி நடந்தால் கடும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.



நாடு கடந்த தமிழீழ அரசின் உள்துறை அமைச்சர் திரு.தமிழர் நாகலிங்கம் பாலச்சந்திரன் அவர்கள் தமிழ் நாட்டில் நாடு கடந்த தமிழீழ அரசின் நியமன பொறுப்பாளர்களை நியமிக்க சென்னை வந்திருந்தார்.

இந்த மாத ஆரம்பத்தில் அண்மையில் இந்தியா சென்று வந்த நாடு கடந்த தமிழீழ அரசின் உள்ளக அமைச்சரென கூறப்படும் பாலச்சந்திரன் எமக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் டென்மார்க்கில் நாடு கடந்த தமிழீழ அரசிற்கு பிரதிநிதிகள் எவரும் இல்லை என தெரிவித்திருந்தார்.

ஆனால் அவைத்தலைவர் இப்பொழுது தான் உறுப்பினர்களுக்கு காலக்கெடு வழங்கியுள்ளார்.

வரும் மாதம் 5ம் நாள் வரை காலக்கெடு வழங்கியதுடன் காலக்கெடுவிற்குள் உறுதிமொழி எடுப்பவர்களை ஏழனமாகவும் கருத்து கூறப்பட்டுள்ளது.

உலக வரலாற்றிலேயே முழுமை பெறாத அரசமைப்புடன் இயங்கும் ஒரு அரசாங்கம் என்றதுடன் இப்பொழுது பெருந்தொகையான மக்கள் பிரதிநிதிகளை வெளியேற்றிய அரசாங்கம் என்ற பெயரையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பெற்றுள்ளது.

Comments