பண்டத்தரிப்பு பிரான்பற்றில் லண்டனில் இருந்து வந்த இளம் பெண்ணை திருமணம் செய்து அன்று இரவே அவள் கொடுத்த சீதனத்துடன் ஓடிய மாப்பிளையை பெண்ணின் உறவினர்கள் தேடி வருகின்றனர்.
இங்கிருந்து லண்டனுக்கு மாணவ விசாவில் சென்ற பெண் அங்கு தொழில் அனுமதி பெற்று வேலை செய்து வந்துள்ளார். இந் நிலையில் மட்டக்களப்பினைச் சேர்ந்த ஆண் ஒருவருடன் பேஸ்புக் மூலம் தொடர்பேற்பட்டதாக தெரியவருகின்றது. இதனால் அவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும் அதன் பின் பெண் குறிப்பிட்ட ஆணை திருமனம் செய்வதற்காக யாழ்ப்பாணம் வந்துள்ளார். குறிப்பிட்ட ஆண் தனக்கு பெண் சகோதரங்கள் உள்ளதாகவும் அதற்காக சீதனம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். திருமணம் நடைபெற்ற அன்று அவருக்கு 35 லட்சம் சீதனம் வழங்கப்பட்டுள்ளது. திருமணம் முடிந்து அன்று இரவு மணப்பெண்ணின் வீட்டில் தங்கியிருந்த மாப்பிளையை அதிகாலையே காணவில்லை. இதனால் உறவினர்கள் அவரைத் தேடி அவரது இடத்திற்குச் சென்றுள்ளனர்.
பெற்றோர் மற்றும் சகோதரங்களுக்கு இத் திருமணத்தில் விருப்பம் இல்லை. ஆகவே எனது பக்கம் ஒருவரையும் கூட்டிக் கொண்டு வரமாட்டன் என்று கூறியே மாப்பிளை குறித்த பெண்னை ஏமாற்றியுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக பொலிசாரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Comments