நாம் தமிழர் உட்பட 38 பேர் கைது. 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் கீழ் திருச்சி ரோட்டரி சங்கத்தை சேர்ந்த 50 பேர், இன்று இலங்கைக்கு சுற்றுலா செல்வதாக இருந்தது. இவர்கள் இலங்கைக்கு சென்று வர வானூர்தி சீட்டிலிருந்து, இலங்கையில் தங்குவதற்கு நட்சத்திர விடுதி,மற்றும் கடற்கரை கேளிக்கை விடுதி வரை அனைத்து செலவுகளையும் இலங்கை அரசாங்கமே ஏற்று கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இவர்கள் ஒவ்வொரு வருக்கும் 25,000 ரூபாயை அன்பளிப்பாக கொடுக்கிறது.
சமூக சேவை நல்லெண்ண அடிப்படை என்ற முகமூடியில், நான்கு நாள் பயணமாக இலங்கை செல்லும் இவர்கள், அங்கு நடக்கும் நிகழ்சிகளில் கலந்து கொண்டு அங்குள்ள சிங்கள பள்ளிகளுக்கு நிதி உதவி அளிக்கிறார்கள். இதை அறிந்த திருச்சி நாம் தமிழர் கட்சியினர், புதிய தமிழகம், ம.தி.மு.க, பெரியார் திராவிட கழகம் ஆகியோருடன் இணைந்து 150 க்கும் மேற்பட்டோருடன், திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள ரோட்டரி அலுவலதிற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அனுமதி இன்றி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி காவல் துறையினர் பெண்கள் உட்பட 36 பேரை கைது செய்து 15 நாள் காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.
ஈழத் தமிழ் மக்களை கூண்டோடு அழிக்க வேண்டும் என்பதில் ராஜபட்சேவை விட கருணாநிதி தான் தீவிரமாக உள்ளார் என்பதற்கு தொடர்ச்சியாக ஈழத் தமிழ் உறவுகளுக்கு எதிர்ப்பாக செயல்படும் தமிழக அரசின் இந்த தமிழர் விரோத நடவடிக்கை எடுத்து காட்டாக உள்ளது.
இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சபோவதில்லை. எங்களது எதிர்பையும் மீறி இவர்கள் இலங்கை சென்றால், தமிழ் நாட்டிற்கு திரும்பி வரும் போழ்து எங்களது கடுமையான எதிர்பை சந்திக்க நேரும் என்று எச்சரிக்கும் விதமாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.
–
தமிழர் நாட்டிலிருந்து தமிழ் தேவன்
--------------------------------------
சிங்களவர்களுக்கு உதவி செய்ய இலங்கைக்கு சுற்றுலா செல்லும் திருச்சி ரோட்டரி சங்க தமிழர்கள்
மக்களுக்கு சேவை ஆற்றுவதாக கூறி கொள்ளும் திருச்சி ரோட்டரி சங்கத்தினர் , இயற்கை சீற்றத்தால் ஈழத் தமிழர்கள் செத்து மடிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஐம்பது உறுப்பினர்கள் கொண்ட குழுவை நாளை இலங்கைக்கு சுற்றுலா பயணமாக அனுப்புகிறது. ரோட்டரி சங்கத்தினர் சுற்றுலா செல்வது என்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது.
5 நாள் சுற்றுலா பயணமாக இலங்கை செல்லும் இவர்கள், கொழும்பு, மற்றும், கண்டி நகரங்களை சுற்றி பார்த்து விட்டு கடற்கரை கேளிக்கை விடுதியில் தங்கி கும்மாளம் அடிக்கிறார்கள். பிறகு கண்டியில் உள்ள சிங்கள பள்ளிக்கு நிதி உதவி அளிக்கிறார்கள். உலகமே சிங்களத்திற்கு எதிராக பொருளாதார சலுகைகளை ரத்து செய்து கொண்டிருக்கிறது. உலக தமிழர்கள் இலங்கை பொருட்களை புறக்கணித்து கொண்டிருக்கிறார்கள், இந்த நிலையில் இலங்கைக்கு ஆதரவாக இவர்கள் செயல்படுவது கண்டிக்கத்தக்கது தமிழகத்தில் இருந்தே அவர்கள் பொருளாதாரத்தை வளர்க்க ஊக்கப்படுத்துவது என்பது ஏற்று கொள்ள முடியாத ஒன்று .
இலங்கை பொருளாதாரத்தின் பெரும் பகுதி அதன் சுற்றுலாவை சார்ந்து இருக்கிறது என்பதை அறிந்திருந்தும் இந்த படித்த பேரறிவாளர்கள் இலங்கைக்கு சுற்றுலா செல்கிறார்கள். வரலாறு காணா கடும் மழையில் லட்சக்கணக்கான தமிழர்கள் வீடுகளை இழந்து, உண்ண உணவின்றி கடும் குளிரில் வாடி கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசாங்கத்தால் முற்றிலும் கைவிடப்பட்ட சுழலில் அங்குள்ள மக்கள் அல்லல் படுகிறார்கள்.
விடுதலை புலிகள் அமைப்பு அங்குள்ள மக்களுக்கு உங்களால் ஆன உதவிகளை உடனடியாக செய்யுங்கள் என்று உலக தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதை பற்றி இவர்கள் எண்ணி பார்க்க வேண்டும். அயல் நாட்டின் பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி கிடையாது, ரெட் கிராஸ் போன்ற சேவை நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது,.ஐ நா மன்ற போர்குற்ற விசாரணை குழுவிற்கு அனுமதி கிடையாது ஆனால் அங்கே சுற்றுலா சென்று கும்மாளம் அடிக்க மட்டும் அனுமதியா ?என்பதை இந்த அறிவாளர்கள் சிந்திக்க வேண்டும். .
இலங்கை அதிகார வர்கத்தின் சதி வலையில் சிக்கி தமிழினத்திற்கு எதிராக செயல்படும் இவர்களுக்கு எதிராக திருச்சியில் உள்ள தமிழக அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்பதே தமிழின பற்றாளர்களின் எதிர்பார்ப்பு.

Comments