தமிழர்களுக்கு....?...இன்றைய தமிழர்களின் நிலை முள்வேலி முகாமில்... போர் முடிந்து இரண்டு வருடம் நிறைவுபெற இருக்கிறது.
அவர்கள் வாழ்வில் எந்தவித மாற்றமும் இல்லை. இன்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பெரும் கேள்விகுறியோடு அவர்கள் வாழ்வு கடந்துகொண்டிருக்கிறது.
சமீபத்தில் இலங்கை சென்று வந்த வழக்குரைஞர் கயல் (எ) அங்கயற்கன்னி கூறியது. மீதமுள்ள மக்களை நாம் காப்பாற்றவில்லையென்றால் இன்னும் ஐந்து வருடத்தில் தமிழினம் இலங்கையிலிருந்து அழிக்கப்பட்டிருக்கும். இதே கருத்தைதான் சென்னையில் நடந்த ஒரு நிகழ்வில் காசி ஆனந்தன் அவர்களும் கூறியது...என்ன செய்யபோகிறோம் நாம்...?
வரும் வெள்ளி இலங்கையில் சுதந்திர தினம் அன்றைய நாளில் உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முயற்சியாக இணையத்தில் "Stop the Genocide and Free the Tamils from Internment Camps (IDP's) in Sri Lanka" என்ற தலைப்பில் ஒரு புகார் மனு உருவாக்கப்பட்டிருக்கிறது.
பிப்ரவரி 4-அம் திகதி (வெள்ளிக்கிழமை) இந்த புகார் மனுவில் கையெழுத்திடவும்.
http://www.change.org/petitions/stop-the-genocide-and-free-the-tamils-from-internment-camps-idps-in-sri-lanka
அரசியல் கட்சிகள், அமைப்புகள் வேறுபாடின்றி தமிழர்கள் என்ற ஒற்றை குடையின்கீழ் நாம் ஒன்றிணைந்து இந்த கவன ஈர்ப்பை வெற்றிகரமாக செய்துமுடிப்போம்.
துனீசியர்களைப்போல, எகிப்தியர்களைப்போல நாம் ஒன்று சேர்ந்து கவன ஈர்ப்புமூலம் ஒரு எழுச்சியை உருவாக்குவோம்.
http://www.google.co...iw=1024&bih=550
உடனடியாக இந்த மனுவில் கைஎழுதிடுவோம் தோழர்களே !!
அழ்உலகமெங்கும் வாழும் தமிழரெல்லாம் இந்த ஒரு நாள் கையெழுத்திட்டால் அந்த இணையதளத்தின் முதல் பக்கத்தில் எகிப்தியர்களின் மனுவிற்கு பக்கத்தில் நம் மனுவும் வர வாய்ப்புள்ளது. உலகத்தின் பார்வைக்கு நம் நியாயங்களை கொண்டு செல்ல இதுவும் ஒரு வாய்ப்பு. உங்களின் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்புங்கள். ஒவ்வொரு கையெழுத்தும் ஒரு ஆயுதம் தான் !!
http://www.change.org/petitions/stop-the-genocide-and-free-the-tamils-from-internment-camps-idps-in-sri-lanka
முத்தமிழ்
சென்னை
Comments