யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியிலிருந்து மூன்று படகுகளில் கடற்றொழிலுக்கெனப் புறப்பட்டுச் சென்ற ஆறு பேர் கரை திரும்பாததனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியிலிருந்து மூன்று படகுகளில் கடற்றொழிலுக்கெனப் புறப்பட்டவர்களில் குறிப்பிட்ட மூன்று படகுகளில் சென்ற ஆறு பேரும் கரை திரும்பாமையினாலேயே இந்தப் பரபரப்பு ஏற்றட்டுள்ளது.
இன்று பிற்பகல் முதல் இவர்களைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள போதிலும் இது வரை அவர்கள் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இந்தியக் கடற்றொழிலாளர்கள் 136 பேர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பருத்தித்துறை, மாதகல் பகுதிகளில் வைத்து, ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக இவர்கள் இந்திய கடற்படையினரால் கடத்தப்பட்டிருக்கலாம், அல்லது தாக்கப்பட்டிருக்கலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

Comments