98 விழுக்காடு தமிழீழ மக்கள் போராட்டத்திற்கு விருமபியே நிதிப்பங்களிப்புச் செய்தனர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு சுவிற்சர்லாந்தில் வாழும் தொண்ணூற்றியெட்டு (98) விழுக்காடு தஅiழீழ மக்கள் தாமாக விரும்பித்தான் நிதிப்பங்களிப்புச் செய்தனர்ரெனஇ சுவிற்சர்லாந்தின் நொசத்தல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் அவரின் பதினைந்தாண்டு கால ஆய்வின் பின்னர் வெளியிட்ட நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

சுவிற்சர்லாந்தின் தலைநகர் “பேர்னில்” தானைத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதிப்பிள்ளை அவர்களின் நினைவஞ்சலி நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றதுஇ இந்த நிகழ்வில் இரங்கலுரையாற்றிய இந்து மதகுரு த. சசிக்குமார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்… குறிப்பிட்ட பேராசிரியரின் நூலில் சுவிற்சர்லாந்தில் வாழும் தமிழ் மக்கள் கல்விநிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில் உள்ளனர்இ கல்வியில் இதேபோன்ற முன்னேற்றம் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில்இ வரும் இருபதாண்டு காலத்தில் சுவிசில் நல்லபதவிநிலைகளில் நாற்பது விழுக்காடு தமிழர் இருப்பர் எனவும் கணிப்பிட்டுள்ளார்இ என்பதையும் கூறினார்.

அத்துடன் எழுபத்தைந்தாவது ஆண்டு அகதிகள் தினத்தை முன்னிட்டு சுவிசில் ஊடகமென்றிற்குப் பேட்டியளித்த தான் தற்போது சுவிசில் அரசியல் தஞசம் கோரிய தமிழர் விவகாரம் தொடர்பாகத் தெரிவிக்கையில் இலங்கைத் தீவில் தற்போதைய நிலமை தமிழ்மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அற்றதாக இல்லையென்பதைத் தெளிவுபடுத்தியதாகவும்இ தமிழ்மக்கள் கடந்த கோடைகால விடுமுறையின் போது அதிகளவானவர்கள் இலங்கைக்குச் சென்றது உண்மைதான் அதன் காரணம் நீண்டகாலமாக தமது தாய்நாட்டைப் பார்க்காத மனோநிலையே தவிர அங்கு தமிழ்மக்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டதாக கருதமுடியாதெனவும் அந்தப் பேட்டியில் தெரிவித்ததாகவும் கூறினார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிற்சர்லாந்துக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் ஈகச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி பார்வதிப்பிள்ளை அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன்இ அஞ்சலிக் கவிதைகளும்இ அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன. நிகழ்வில் கிளைச் செயற்பாட்டாளர்கள்இ நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள்இ சுவிஸ் ஈழத்தமிழரவையின் பிரதிநிதிகள்இ ஊடகவியலாளர்கள்இ மதகுருமார்இ பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்இ பொதுமக்கள் என மண்டபம் நிறைந்ததாகக் கலந்து தமது அதெசலியைச் செலுத்தினார்கள். பார்வதிப்பிள்ளை அவர்கள் இலங்கை இந்திய நாடுகளின் உண்மை முகத்தை உலகிற்குக் காட்டியுள்ளார். அத்துடன் உலகத்தமிழரை ஒன்றுதிரழச் செய்துள்ளார் என்பதை இரங்கலுரையாற்றிய பலரும் எடுத்துக் கூறினர்.

Comments