ஹிலாரி கிளின்டன் சுதந்திர தினச் செய்தியின் மர்மம் என்ன?
சிறீலங்கா தனது 63வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ள நிலையில் அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளரான ஹிலாரி கிளின்டன் அமெரிக்காவின் வாழ்த்துச் செய்தியை ஊடகங்களிற்கு கசிய விட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தைத் தோற்றுவித்துள்ளது.
வழமையாக இவ்வாறான வருடாந்த சுதந்திர தினக் கொண்டாடங்களின் போது இலங்கையிலுள்ள தமது தூதுவர்களினூடாக ஏனைய நாடுகள் தங்களது வாழ்த்துச் செய்திகளை இலங்கையரசிற்கு கையளிக்கும். இதுவே இன்றுவரைக் கடைப்பிடிக்கப்படும் இராஜதந்திர நடைமுறை. மாறாக 50வது சுதந்திரதினம், 60வது சுதந்திரதினம், 75வது சுதந்திரதினம்
போன்றவற்றில் சிறப்புப் பிரதிநிதிகள் கலந்து கொள்வதுடன் விசேட செய்திகளும் மற்றைய அரசாங்கங்களால் வெளியிடப்படும்.
ஆனால் ஒருதுளியும் முக்கியத்துவமில்லாத 63வத சுதந்திர தின வாழ்த்து, மகிந்தாவுடன் தாம் கொண்டுள்ள உறவை உலகிற்கு அறிவிக்கும் ஒரு வாய்ப்பாகவே அமெரிக்காவில்
கருதப்பட்டுள்ளது. அதுவும் மகிந்தாவின் அண்மைய அமெரிக்க விஜயம், மகிந்தாவிற்கு எதிராக அமெரிக்கத் தமிழர்களின் வழக்கு என்பனவற்றின் மத்தியில் இச் செய்தி
வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வாறு விடுக்கப்பட்டுள்ள செய்தியிலும், அமெரிக்க இலங்கை உறவு எந்தவித மாறுதலிற்கும் உட்படாது என்பது கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளதுடன், இலங்கையின் வளர்ச்சியில் அமெரிக்கா ஒரு பங்காளராக இருக்கும் எனவும் அண்மைய காலங்களில் இலங்கையின் எல்லாத் துறைகளிலும் ஆரோக்கியமான வளர்ச்சி காணப்படுவதாகவும், இலங்கை மக்களின் வாழ்க்கை முறை சமாதானமான முறையில் நகர்ந்து செல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சாதாரன நிலையிலிருந்து மாறுபட்ட வகையில் உள்ளதாகவும் தமிழர்களின் அமெரிக்கா சார்ந்த எதிர்ப்பார்ப்பினை பலவீனப்படுத்துவதாக உள்ளதாகவுமே இருக்கிறது.

Comments