பான்கிமூனுக்கு எதிராக பிரித்தானிய மக்களின் விழிப்புணர்வுப் போரட்டம்


ஜக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான்கிமூன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் கல்லூரியில் உரையாற்றுவதற்காக 6.00 மணியளவில் அங்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவரது உரை நடைபெற்றுக் கொண்டிருந்த மண்டபத்திற்கு முன்பாக பிரித்தானிய மக்களால் இலங்கையில் இன அழிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது எதுவித நடவடிக்கையும் எடுக்காது இருந்ததையும், இவ்வாறான ஒருவர் திரும்பவும் ஜக்கிய நட்டுகள் சபைக்கு தெரிவு செய்யப்படுவதை சுட்டிக் காட்டுவதுமான புத்தகங்களும், அது தொடர்பான விழிப்புணர்வை துண்டக் கூடிய துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு ஒரு விழிப்புணர்வுப் போரட்டம் நிகழ்த்தப்பட்டது.

அத்துடன் மக்களின் ஊர்திகளில் அவரது செயலைக் கண்டிக்கும் முகமான பதாதைகளை தாங்கியவாறு மக்கள் தொடர்ச்சியாக போராடம் நடத்தியதையும், பன்கிமூனின் படத்தை தாங்கிய பதாதைகளின் கிழே " நான் மீண்டும் தேர்தலில்! , 40,000 மக்களை படுகொலை செய்யப்பட்ட போது நான் எதையும் செய்யவில்லை. நீங்கள் தீர்மானியுங்கள்! என்ற வாசகங்களும் எழுதப் பட்டிருந்ததை காண முடிந்தது.அத்துடன் அந்த ஊர்தியில் இருந்து அமைதியாக போராட்டம் நடத்தியவர்களை படம் பிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Comments