போர்க்குற்றத்திற்கு பதிலாக அதிகார பகிர்வு பேரம்பேசலில் நாடு கடந்த தமிழீழ அரசும்?

புலம்பெயர் தேசங்களில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் அமைப்புக்களான தமிழர் பேரவைகள் சிறிலங்கா அரசு தமிழீழ மக்கள் மீது புரிந்த இனப்படுகொலை மற்றும் முள்ளிவாய்க்காலில் சிறிலங்கா படைகள் புரிந்த போர்குற்றங்களுக்கு எதிராக வழக்குகளை பதிந்துவரும் நிலையில் கே. பத்மநாதனால் நியமிக்கப்பட்ட ருத்திரகுமாரனின் தலைமையில் இயங்கும் நாடு கடந்த தமிழீழ அரசும் சில தமிழ் சங்கங்களை மட்டும் உறுப்பினராக கொண்டுள்ள உலகத்தமிழர் பேரவையும் சிறிலங்கா அரசுடன் போர் குற்ற வழக்குகளுக்கு பதிலாக அதிகாரப்பகிர்வு என பேச்சுவார்த்ததையில் ஈடுபட போவதாக ஈழநாதம் பத்திரிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.


ஈழநாதம் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தின் முழுவடிவம்

மஹிந்த அரசுடன் கூட்டமைப்பு பேசிவருகின்றது. இது இந்தியாவினால் தீர்மானிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைய நடந்து வருகின்றது. என்ன தீர்வு என்றும் திட்டமிட்டே அதன் அடிப்படையில் பேசப்பட்டு வருகின்றது. ஆனால் ஏதோ புதிதாக நடப்பது போன்று மஹிந்த கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. காரணம் சிங்கள – தமிழ் மக்களை இரு பகுதியினரும் கவனமாக பார்க்கவேண்டும் என்பதற்காகவே இல்லையேல் தேர்தலில் வாக்குகளை வசூலிக்க முடியாது போய்விடுமே.

இந்த பேச்சுவார்த்தைக்கான பேரம்பேசல் என்னவென்றால் புலம்பெயர்ந்த மக்களின் போராட்டம்தான். அதாவது இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றத்தினை நிறுத்தி, மஹிந்த அரசிற்கு எதிரான போராட்டத்தை தமிழர்கள் கைவிடுவார்கள் ஆனால் அரசாங்கம் அதற்கு பதிலாக தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்கவேண்டும்.

உண்மையில் இந்தியா, அமெரிக்கா , ஐரோப்பிய ஒன்றியம் ஆகியோர் இந்த பேரம்பேசலில் ஒன்று பட்டு செயற்படுகின்றனர். கூடுதலாக அமெரிகாவின் பங்கு இதில் முக்கியமானது. அடுத்ததாக நோர்வே நாடும் இதில் அரசல் புரசலாக ஓடுகின்றது. அமெரிக்கா, நோர்வே ஆகிய நாடுகள் புலம்பெயர் மக்களை தாம் வழி நடத்த முடியும் என்பதும், இந்தியா கூட்டமைப்பை வைத்து உள்ளூரில் தமிழர்களை வழி நடத்த முடியும் என்பதுமே இவர்களின் கணிப்பு. உண்மையும் அதுதான்.

இதற்கு ஏதுவாகவே தமிழீழ தீவிர ஆதரவாளர் கடும்போக்காளர், புலிகளின் உறுப்பினர்கள் ஆகியோரை புலம்பெயர் நாடுகளில் அரசுகள் கட்டுப்படுத்தி வைத்துள்ளதுடன் சில அமைப்புக்களை பக்கபலமாக இருந்து தூக்கி நிறுத்தி செயற்படவும் வைத்துள்ளமை தெட்டத்தெழிவு.

வெளிப்படையாக இன்னும் கூறுவதானால் நாடு கடந்த அரசாங்கம், உலக தமிழர் பேரவை இந்த விடயத்தில் கணிசமான பங்கை வகிக்கின்றன. இவையே புலம்பெயர் தமிழர்களை அரவணைக்கும் அமைப்புக்களாக வெளினாடுகளால் பார்க்கப்பட்டு பேச்சுவார்த்தைகளும் நடந்தேறியுள்ளன. இதனை ஐரோப்பிய ஒன்றிய பிரதி நிதிகள் நாசூக்காக வெளிப்படுத்தியும் உள்ளன.

அமெரிக்கா நாடுகடந்த அரசினையும், நோர்வே உலக தமிழர் பேரவையினையும் சந்தித்து பேசியுள்ளது.

இதனை அவர்கள் பேச்சினூடாக பூடகமாக சில இடங்களில் வெளிப்படுத்தபப்ட்டும் உள்ளது.

இது இராஜதந்திரத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது. சில விடயங்களை இப்போ கூறமுடியாது, பேசியது உண்மைதான் என்றெல்லாம் கதைக்கப்படுகின்றது. ஆனால் என்ன கதைக்கப்பட்டது. என்ன செய்யபோகின்றார்கள்? கூட்டமைப்பு – மஹிந்த பேரம்பேசலிற்கு புலம்பெயர் அமைப்புக்களின் ஆதரவு உண்டா? ஒத்துபோகின்றார்களா? அல்லது ஒத்துபோகுமாறு மிரட்டப்பட்டார்களா என்பது பொது மக்களுக்கு தெரியாது.

உண்மையில் கூட்டமைப்பு உள் நாட்டிலும், புலம்பெயர் அமைப்புக்கள் வெளி நாட்டிலும் தமிழ் பொது மக்களுக்கு சில விடயங்களை தெளிவு படுத்த வேண்டும். தெளிவு படுத்த வேண்டியது தவிர்க்க முடியாது. ஏனென்றால் நடபப்து தமிழர்களுக்கான தீர்வு பற்றிய பேச்சுவார்த்தை.

இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய உ|றுப்பினராக இருந்துவரும் பாராளுமன்ர உறுப்பினர் சுமந்திரன் என்பவர் கொழும்பில் பின்வருமாறு கூறியுள்ளார்.
“We will not be concentrating on the 13th Amendment or the current constitution, but hope to discuss something beyond the existing structure,”

கூட்டமைப்பு இதுவரை என்ன நடக்கின்றது என மக்களுக்கு தெளிவு படுத்தவில்லை. ஆனால் புலம்பெயர் அமைப்புக்கள் தமக்கு எதுவும் தொடர்பில்லை போன்று தப்ப பார்க்கின்றனர். ஆனால் மேற்குலகம் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு இருக்கின்றது. அல்லது அதனை தாம் பார்த்து கொள்வதாக இந்தியாவிற்கும் மஹிந்தவிற்கும் கூறியுள்ளமையின் அடிப்படை என்ன?

விளக்கம் கொடுக்கவேண்டியது உரிய அமைப்புக்களே

Comments