தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி வழங்கும் நிகழ்வுகள் (படங்கள்)
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி நேற்றய தினமும் மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளில் ஈடுபட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களது முழுமையான ஒத்துழைப்புடன் அவர்களது நிவாரணப் பணிகள் இடம்பெற்றது.
நேற்றயதினம் இரவு 8.00 -10.00 மணிவரை முனைக்காடு வடக்கு கிராமத்தில் வசிக்கும் 350 குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டது. முனைக்காடு கிராமத்தில் நிவாரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆரம்பித்து வைத்தார்.
இக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் கடந்த இரண்டு தடவைகள் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அரிசி, மா, சீனி, பருப்பு, கருவாடு, தேயிலை, சேவ்எக்சல் சலவைத்தூள், கோட்டக்ஸ், பால்மா ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
Comments