நா.க.தமிழீழ அரசு தேசிய அட்டை! புலம்பெயர் தமிழர்களை குழப்பும் ஊடகங்கள்

நாடு கடந்த தமிழீழ அரசினால் வழங்கப்பட்டு வரும் தமிழீழ தேசிய அட்டை அறிமுகக்கூட்டம் தொடர்பாக டென்மார்க் வாழ் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தங்கள் நிலைபாடு தொடர்பாக வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கை.

டென்மார்க் வாழ் தமிழுறவுகளிற்கு ஓர் அறிவித்தல்

நாளை 12.02.2011 இல் ஓகூஸ் நகரத்தில் நடைபெறும் என ஜிரிவியில் விளம்பரப்படுத்தப்படும் நிகழ்விற்கும் டென்மார்க் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடு கடந்த அரசின் பிரதிநிகளிற்கும் தொடர்பேதும் இல்லை. இது பற்றி நாடு கடந்த அரசின் பிரதமர், உபபிரதமர் மற்றும் செயலாளருடன் தொடர்புகொண்டு ஆராய்ந்த போது இந்நிகழ்வு குறிப்பிட்ட திகதியில் நடைபெறமாட்டாது என்பதனை உறுதிசெய்துள்ளனர்.

தமிழீழ தேசிய அட்டை வழங்கல் நிகழ்வு 12.03.2011 அன்று நடைபெறுமென்பதை உங்களிற்கு அறியத்தருகின்றோம். மேலதிக விபரம் விரைவில் அறியத்தரப்படும்.

இப்படிக்கு
சுகேந்தினி நிர்மலநாதன், றெமொன் வாசிங்டன், பொன். மகேஸ்வரன்

தொடர்புடைய செய்திகள்


நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் கடந்த தமிழர் புத்தாண்டில் நாடு கடந்த தமிழீழ அரசின் முதல் செய்ல்பாடாக அறிமுகம் செய்யப்பட்ட தமிழீழ தேசிய அட்டை வரலாற்று முக்கியம் வாய்ந்ததுடன் குறிப்பாக புலம் பெயர் வாழ் தமிழீழ மக்களிடம் பெரு வரவேற்ப்பையும் பெற்றுள்ளது. பெரும்பான்மையானவர்கள் புலம் பெயர் தேசத்தில் சிறிலங்கன் என்னும் அடையாளத்திலேயே வாழ்வதால் முதல் முதலாக தாம் தமிழீழ மக்கள் என்பதை ஒரு ஆதாரத்துடன் அதுவும் தம்மால் தெரிவு செய்யப்பட்ட அரசால் அந்த ஆதாரம் வழங்கப்பட்டதை பெருமையுடன் எவருக்கும் கூறலாம் என்ற பேராவலுடன் தமிழீழ தேசிய அட்டையை பெற புலம் பெயர் தமிழ்மக்கள் முயர்சிக்கின்றனர்.

தமிழீழ தேசிய அட்டையை அறிமுகம் செய்த தமிழர் புத்தாண்டு நாளில் நாடு கடந்த தமிழீழ அரசின் கௌரவ பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமார் அவர்கள் தமிழீழ தேசிய அட்டை தொடர்பாகவும் அதனைப் பெற்றுக்கொள்ளும் வளிமுறைகளையும் மிகவும் தெளிவாக தெரிவித்திருந்தமை வரவேற்க்கத்தக்கது.

தமிழீழ தேசிய அட்டையின் அறிமுகத்தை தொடர்ந்து புலம்பெயர் தமிழர்கள் வாழும் பல நாடுகளில் தேசிய அட்டை வழங்கும் நிகழ்வுகள் நாடு கடந்த அரசின் பிரதிநிதிகளால் நடாத்தப்பட்டிருந்தது.

இப்பொழுது இணையத்திலும் தேசிய அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என நாடு கடந்த தமிழீழ அரசு ஐக்கிய அமெரிக்கா என்னும் ஆங்கில மொழி இணையத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசிற்கு தமிழ் மொழியில் ஒரு இணையம் இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது.

நாடு கடந்த தமிழீழ அரசு ஐக்கிய அமெரிக்கா என்றவர்களினால் வெளியிடப்பட்ட செய்தியாக கடந்த 7ம் 8ம் நாட்களில் தமிழீழ தேசிய “அடையாள” அட்டை இணையத்தில் என பல தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. தமிழீழ தேசிய “அடையாள” அட்டையை பெற்றுக்கொள்ள 15 அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

நாடு கடந்த அரசால் வழங்கப்படுவது தமிழீழ தேசிய அட்டையா அல்லது அடையாள அட்டையா என இப்பொழுது மக்கள் வினாவி வருகின்றனர். குறிப்பட்ட செய்தி தமிழ் ஊடகங்களில் வந்து பல நாட்கள் ஆகிவிட்டது ஆனால் நாடு கடந்த அரசின் ஊடகத்துறையினர் எந்த மறுப்பறிக்கையோ சரியான தகவலையோ தெரிவிக்கவில்லை.

நாடுகடந்த அரசின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு (www.tgte.org) செல்லும் பொழுது ஆங்கில மொழியிலான நாடு கடந்த அரசு ஐக்கிய அமெரிக்கா என்னும் இணையத்திற்கு செல்கின்றது.

பாரிசில் இருந்து வெளியிடப்படும் தாய்நிலம் என்னும் பத்திரிகையினுடைய இணையத்தின் விளம்பரம் பல தமிழ் இணையங்களில் இணைக்கப்பட்டுள்ளது. விளம்பரத்தின் இணைப்புக்கான வடிவமும் தாய்நிலம் இணையத்தில் இருக்கின்றது. தாய்நிலம் பத்திரிகை தனது விளம்பரத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் இலச்சனையை இணைத்துள்ளது. இந்த இணைப்பால் தாய்நிலம் இணையம்தான் நாடு கடந்த தமிழீழ அரசின் உத்தியோகபூர்வ இணையம் என பல தமிழ் மக்கள் எண்ணிவருவததை காணக்கூடியதாகவுள்ளது.

டென்மார்க்கில் தமிழீழ தேசிய அட்டை அறிமுக நிகழ்வை வரும் சனிக்கிழமை ஒழுங்கு செய்துள்ளவர்களும் (நாடு கடந்த அரசின் மக்கள் பிரதிநிதிகள் அல்ல) தாம் நாடு கடந்த அரசின் உத்தியோகபூர்வ இணையமான தாய்நிலத்தில் இருந்து தான் தேசிய அட்டை தொடர்பான விபரங்களை பெற்றதாக எமக்கு தெரிவித்துள்ளனர்.

தாய்நிலம் பத்திரிகை தமது விளம்பரத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் இலச்சனையை இணைத்துள்ளதை நாடு கடந்த அரசாங்கம் கவனத்தில் எடுத்து மக்களின் குழப்பத்ததை தெளிவுபடுத்துவது சிறிந்தது.

தாய்நிலம் இணையத்தில் தமிழீழ தேசிய அட்டையை பெற்றுக்கொள்ளுவதற்கான பாவனைக்காக ஒரு விண்ணப்ப படிவம் இணைக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவத்திலும் பல இடங்களில் தேசிய அட்டையா? அடையாள அட்டையா? என்ற குழப்பம் இடம்பெற்றுள்ளது.

மற்றும் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமார் அவர்கள் தெரிவித்த கருத்துக்கு மாறாக விணணப்பதாரரின் கடவுச்சீட்டு பிரதி உட்பட ஆதாரங்கள் சேகரிக்கப்படுவதாக தாய்நிலம் இணையத்தில் வெளியிடப்பட்ட விண்ணப்பபடிவத்தில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் அவர்கள் தமிழீழ தேசிய அட்டை அறிமுக நிகழ்வில் விண்ணப்பதாரரின் பிறந்த திகதி கூட சேகரிக்கப்படாது என தெளிவாக கூறியுள்ளார். எம்மால் ஆராயப்பட்ட அனைத்து நாட்டு கடவுச்சீட்டிலும் பிறந்ததிகதி இருப்பதை காணக்கூடியதாகவுள்ளது.

தாய்நிலம் இணையத்தில் வந்த தமிழீழ தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பபடிவமே இப்பொழுது டென்மார்க்கில்; தமிழ்மக்களின் பாவனையில் இருப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது.


வரலாற்று முக்கியமான தமிழீழ மக்களின் ஆதாரமொன்று தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் இருப்பதை உடனடியாக நாடு கடந்த தமிழீழ அரசு கவனத்தில் எடுத்து புலம் பெயர் வாழ் தமிழீழ மக்கள் அனைவரின் கைகளிலும் தமிழீழ தேசிய அட்டை சென்றடைய நடவடிக்கை எடுப்பதுடன் நாடு கடந்த அரசின் இலச்சனையை தனிநபர்கள் தவறாக பாவிப்பதால் ஏற்ப்படும் குழப்பங்களையும் தீர்ப்பார்களா?

---------------

மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்து டென்மார்க்கில் தேசிய அட்டை அறிமுகக்கூட்டம்!

நாடுகடந்த அரசால் வழங்கப்பட்டுவரும் தமிழீழ தேசிய அட்டையின் அறிமுகக்கூட்டம் ஒன்று நாளை சனிக்கிழமை 12.02.2011 அன்று டென்மார்க்கில் நடைபெறவிருப்பதாக ஒரு துண்டுப்பிரசுரம் கடந்த சில நாட்களாக பரவலாக டென்மார்க்கில் மக்களிடையே வினியோகிக்கப்பட்டிருந்தது. குறிபிட்ட சில இணையத்தளங்களும் குறிப்பாக நாடுகடந்த தமிழீழ அரசின் உத்தியோகபூர்வ இணையமாக சித்தரிக்கும் தாய்நிலம் இணையம் செய்தி வெளியிட்டடிருந்தன.

தகவலை உறுதிப்படுத்த நாம் நாடு கடந்த தமிழீழ அரசின் டென்மார்க் தமிழ் மக்களின் பிரதிநிதிகளை தொடர்புகொண்ட போது அவர்கள் தமக்கு இந்த நிகழ்வு தொடர்பாக எதுவும் தெரியாது என்றதுடன் தாம் பிரதமரை தொடர்பு கொண்டபின் பதில் கூறுவதாகவும் கூறினர்.

நேற்று வியாளக்கிழமை GTV தொலைகாட்சியில் டென்மார்க்கில் நாளை நடைபெற இருப்பதாக கூறப்படும் தமிழீழ தேசிய அட்டை அறிமுகக்கூட்ட விளம்பரம் ஒளிபரப்பானது. மீண்டும் நாம் மக்கள் பிரதிநிதிகளை தொடர்புகொண்ட போது “எமக்கு பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமார் அவர்கள் டென்மார்க்கில் எந்த நிகழ்வும் நாளை சனிக்கிழமை நடைபெறாது” என கூறியுள்ளதாக தெரிவித்தனர்.

துணைப்பிரதமர் ருத்திராபதி சேகர் எமக்கு கருத்து கூறியபோது GTV தொலைகாட்சியில் ஒளிபரப்பபடும் விளம்பரத்தை நிறுத்தும் படி தாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க உள்ளக அமைச்சர் பாலச்சந்திரனால் விளம்பரம் மீளப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

ஆனால் இன்று மீண்டும் விளம்பரம் GTV தொலைக்காடசியில் ஒளிபரப்பபட்டுவிருகின்றது.

நாடு கடந்த அரசின் டென்மார்க் வாழ் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் தமது நிலைப்பாடு தொடர்பாக பத்திரிகைஅறிக்கை ஒன்றை தயாரித்துவருவதாக இப்பொழுது தெரிவித்துள்ளனர்.

டென்மார்க்கில் தொடர்ச்சியான மக்கள் சந்திப்புக்களை நடாத்திவரும் நாடுகடந்த அரசின் டென்மார்க் மக்கள் பிரதிநிதிகள் நாளை சனிக்கிழமை Vejle மற்றும் Fredericia வாழ் தமிழ் மக்களுடனான கலந்துரையாடல்களை ஏற்கனவே ஏற்பாடுசெய்துள்ளனர்.

http://tamilvoice.dk/tamil/?p=4053

Comments