அப்பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர் வயிற்றில் உள்ள பிள்ளை திரும்பிய நிலையிலும் இல்லை, அவர் சுகப் பிரசவத்திற்கு மிகவும் பொருத்தமானவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு ஏன் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் எனவும் கேள்விகள் எழுப்பப்பட்டது. ஆனால் மேல் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக அதற்கு சரியான பதிலை எவரும் கூறவில்லை. இவ்வாறு பல வைத்தியசாலைகளில் நடைபெறுவதற்கு என்ன காரணம் ? தற்போது யாழில் சிங்கள வைத்தியர்களும் வேலைசெய்வதால் இதில் ஏதாவது உள்நோக்கம் இருக்குமா என நாம் ஆராய்ந்த வேளை பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது சிசேரியன் என்று சொல்லப்படும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுப்பதன் மூலம் கருப்பை பாதிக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளதாக அறியப்படுகிறது. அதன் காரணமாக அவர்கள் மறு முறை கருத்தரிப்பது என்பது இயலாமல் போவதோடு, அப்படியே கருத்தரித்தாலும் அது வலுவிளக்கிறது என்று பொதுவாக பல மருத்துவர்களால் கூறப்படுகிறது. சமீபத்தில் ஆவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆராட்சிகளும் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. எனவே தமிழ் பெண்களுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் குடும்பத்துக்கு 1 குழந்தை என்ற குடும்பக் கட்டுப்பாட்டை மகிந்தவின் அரசு கொண்டுவருகிறதா என்ற அச்சம் தற்போது எழுப்பப்படுகிறது.
இது ஒரு இன அழிப்பின் மறுவடிவமாக நோக்குவதா என்ற கேள்விக்குறியும் இங்கே எழுகிறது. ஏற்கனவே போரால் பாதிக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் மாண்டுபோயுள்ள நிலையில், மேலும் தமிழர்களின் எண்ணிக்கையைக் குறைத்து சிங்களக் குடியேற்றங்களை அங்கே பரப்பி தமிழர்களைப் பூண்டோடு ஒழிக்க இது ஒரு பாரிய திட்டமாக அமைந்திருக்கிறதா என பலரும் அஞ்சுகின்றனர். இச் செய்திகள் வடக்கு கிழக்கு மக்களைச் சென்றடையவேண்டும் என்பதே எமது அபிலாஷைகள் ஆகும். இச் சம்பவங்களை அறிந்து தெளிதல் அவசியமாகும்.
Comments